லிட்டருக்கு 32 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட் ஹைப்ரிட் கார்... ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம்!

லிட்டருக்கு 32 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட் ஹைப்ரிட் கார் ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த காரின் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

லிட்டருக்கு 32 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட் ஹைப்ரிட் !

மாருதி நிறுவனத்தின் கார்கள் எப்போதுமே மைலேஜிற்கு பெயர் பெற்றவை. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளால் மாருதி நிறுவனத்தின் டீசல் கார்களுக்கு பிரச்னை வந்துவிட்டது. இதையடுத்து, சிஎன்ஜி மற்றும் ஹைப்ரிட் கார்கள் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளது மாருதி.

இதன்படி, இன்று துவங்கி இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்விஃப்ட் காரின் ஹைப்ரிட் மாடலை காட்சிப்படுத்தி உள்ளது மாருதி கார் நிறுவனம். இந்த ஹைப்ரிட் கார் மாடல்களுக்கான கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 32 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

லிட்டருக்கு 32 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட் ஹைப்ரிட் !

இந்த காரில் 1.2 லிட்டர் கே12சி பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 91 பிஎஸ் பவரையும், 118 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். மேலும், 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

லிட்டருக்கு 32 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட் ஹைப்ரிட் !

மாருதி பலேனோ, எர்டிகா, சியாஸ் கார்களில் பயன்படுத்தப்படும் 12V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்தை விட இது நவீன தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது. இந்த காரில் 48V லித்தியம் அயான் பேட்டரி, இன்டகிரேடட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் மற்றும் 48V-12V கன்வெர்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

லிட்டருக்கு 32 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட் ஹைப்ரிட் !

மொத்தமாக 105 பிஎஸ் பவரையும், 148 என்எம் டார்க் திறனையும் இந்த கார் வழங்க வல்லதாக இருக்கிறது. வெளிநாடுகளில் இதே மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் பொருத்தப்பட்ட ஸ்விஃப்ட் மாடலில் 1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சின் தேர்வை சுஸுகி நிறுவனம் வழங்குகிறது.

லிட்டருக்கு 32 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட் ஹைப்ரிட் !

மாருதி ஸ்விஃப்ட் ஹைப்ரிட் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்ற பேச்சு நீண்ட காலமாக உள்ளது. இப்போது இந்த கார் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது குறித்து எந்த தகவலையும் மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிடவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 5, 2020, 10:20 [IST]
English summary
Maruti Suzuki has showcased Swift Hybrid Model at Auto Expo 2020.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+