இதுவரை நாம் பார்த்திராத கவர்ச்சியான தோற்றத்தில் மாருதி ஸ்விஃப்ட்... இளம் கன்னியரை மிஞ்சும் பேரழகு!!!

மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் நாம் இதுவரை பார்த்திராத வகையிலான கவர்ச்சியான தோற்றத்திற்கு மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இதுவரை நாம் பார்த்திராத கவர்ச்சியான தோற்றத்தில் மாருதி ஸ்விஃப்ட்... இளம் கன்னியரை மிஞ்சும் பேரழகு!!!

மாருதி சுசுகி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மாடல்களில் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் ரக காரும் ஒன்று. இந்த கார் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் புகழ்வாய்ந்த மாடலாக இருக்கின்றது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பைப் பெறும் ஹேட்ச்பேக் ரக காரில் இதுவே முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது என்றுகூட கூறலாம். அந்தளவிற்கு நல்ல வரவேற்பைப் பெறும் காராக இது இருக்கின்றது.

இதுவரை நாம் பார்த்திராத கவர்ச்சியான தோற்றத்தில் மாருதி ஸ்விஃப்ட்... இளம் கன்னியரை மிஞ்சும் பேரழகு!!!

இந்தளவிற்கு இக்கார் வரவேற்பைப் பெறுவதற்கு அக்காரின் தோற்றமும், அதி திறனுடை எஞ்ஜினுமே முக்கிய காரணமாக இருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் ஸ்விஃப்டின் தோற்றம் மற்றும் எஞ்ஜின் திறன் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையானதாக அமைந்திருக்கின்றது.

இதுவரை நாம் பார்த்திராத கவர்ச்சியான தோற்றத்தில் மாருதி ஸ்விஃப்ட்... இளம் கன்னியரை மிஞ்சும் பேரழகு!!!

இதுமட்டுமின்றி, ஸ்விஃப்ட் காரை கூடுதல் ஸ்போர்ட்டி லுக்கில் மற்றுவதும் மிகவும் சுலபம். அந்தவகையில் கடந்த காலங்களில் முழு ஸ்போர்ட்ஸ் காராக ஏராளமான ஸ்விஃப்ட் கார்கள் மாறியிருக்கின்றன. இதன் காரணத்தினாலயே இந்திய இளைஞர்களின் மிகவும் பிடித்தமான காராக ஸ்விஃப்ட் விளங்கிக் கொண்டிருக்கின்றது.

இதுவரை நாம் பார்த்திராத கவர்ச்சியான தோற்றத்தில் மாருதி ஸ்விஃப்ட்... இளம் கன்னியரை மிஞ்சும் பேரழகு!!!

இந்தநிலையில்தான், இக்காரின் மீதிருக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டுகின்ற வகையில் இந்தியாவைச் சேர்ந்த மாடிஃபிகேஷன் நிறுவனம் ஒன்று அக்காரை கூடுதல் கவர்ச்சியானதாக மாற்றியிருக்கின்றது. இதுகுறித்து காடிவாடி தளம் வெளியிட்டுள்ளதகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

இதுவரை நாம் பார்த்திராத கவர்ச்சியான தோற்றத்தில் மாருதி ஸ்விஃப்ட்... இளம் கன்னியரை மிஞ்சும் பேரழகு!!!

தற்போது நாம் பார்க்கவிருக்கும் இந்த ஸ்விஃப்ட் கார் சிறந்த வண்ணப்பூச்சு மற்றும் கூடுதல் அலங்கார அணிகலன்களைப் பெற்றிருக்கின்றது. எனவேதான் இது பலரின் கவனத்தை ஈர்க்கக் கூடிய காராக மாறியிருக்கின்றது. அதுமட்டுமின்றி நாம் இங்கு அக்காரைப் பற்றி அறிவதற்கான இடத்தையும் பெற்றிருக்கின்றது.

இதுவரை நாம் பார்த்திராத கவர்ச்சியான தோற்றத்தில் மாருதி ஸ்விஃப்ட்... இளம் கன்னியரை மிஞ்சும் பேரழகு!!!

இக்காரில் பெயிண்டிங் மற்றும் கூடுதல் அணிகலன்கள் மட்டுமே புதிதாக சேர்க்கப்படவில்லை கூடுதலாக எல்இடி ஹெட்லேம்ப், பகல்நேர மின் விளக்கு உள்ளிட்டவை சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதிலும், ஹெட்லேம்ப்பை சற்று தூக்கலாக காட்டும் விதமாக கருப்பு நிற அவுட்லைன்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் சேர்ந்து அக்காரை, முரட்டுத் தனமான தோற்றம் கலந்த கவர்ச்சியான ஸ்விஃப்ட்டாக மாற்றியிருக்கின்றது.

இதுவரை நாம் பார்த்திராத கவர்ச்சியான தோற்றத்தில் மாருதி ஸ்விஃப்ட்... இளம் கன்னியரை மிஞ்சும் பேரழகு!!!

இந்த தோற்றத்தைக் கூடுதலாக மெருகேற்றும் விதமாகவே பல்வேறு அலங்கார அணிகலன்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதாவது காரின் முன் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் கூடுதல் ஸ்கிட் பிளேட்டுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி தனித்துவமான டயர் மற்றும் அலாய் வீல்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், அக்காருக்கு சாம்பல் நிற பூச்சு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதுவரை நாம் பார்த்திராத கவர்ச்சியான தோற்றத்தில் மாருதி ஸ்விஃப்ட்... இளம் கன்னியரை மிஞ்சும் பேரழகு!!!

இதேபோன்று காரின் வால் பகுதி எனப்படும் பின்பகுதியிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, வால்பகுதி மின் விளக்கு மற்றும் கூடுதல் பேனல்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதில் வால் பகுதி மின் விளக்கிற்கு மட்டுமே ரூ. 35 ஆயிரம் செலவு செய்யப்பட்டிருக்கின்றது. இதேபோன்று, ஒட்டுமொத்த பாடி பேனல்களுக்கும் சேர்த்து ரூ. 45 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை நாம் பார்த்திராத கவர்ச்சியான தோற்றத்தில் மாருதி ஸ்விஃப்ட்... இளம் கன்னியரை மிஞ்சும் பேரழகு!!!

இவ்வாறு பல லட்ச ரூபாய் செலவில் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடிஃபை செய்யப்பட்டிருக்கின்றது. இதில், உச்சபட்சமாக அலாய் வீல் ரூ. 70 ஆயிரம் செலிவில் மாற்றப்பட்டிருக்கின்றது. இதேபோன்றுதான் தாராள மனதுடன் பல்வேறு பாகங்களின் மாற்றத்திற்காக பணத்தை அதன் உரிமையாளர் வாரி வழங்கியிருக்கின்றனர்.

இதுவரை நாம் பார்த்திராத கவர்ச்சியான தோற்றத்தில் மாருதி ஸ்விஃப்ட்... இளம் கன்னியரை மிஞ்சும் பேரழகு!!!

இதன்படி, மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காரின் உடல் தோற்றம் மற்றும் ஸ்டைல் ஆகியவை மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. எஞ்ஜின் தரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆகையால், அக்காரில், 1.2 லிட்டர் விவிடி பெட்ரோல் எஞ்ஜினே காணப்படுகின்றது. இது அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

Most Read Articles

English summary
Maruti Suzuki Swift Modified Into Fully Faired Model. Read In Tamil.
Story first published: Friday, July 31, 2020, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X