நீங்க நம்புறீங்களோ இல்லையோ, இது மாருதி ஸ்விஃப்ட்... அதான் நெசம்..!

ஃபோக்ஸ்வேகனின் பீட்டில் காராக மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பிரிமியம் காராக மாற்றியமைக்க இந்த காருக்கு எவ்வளவு செய்யப்பட்டது என்பதுகுறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

நீங்க நம்புறீங்களோ இல்லையோ, இது மாருதி ஸ்விஃப்ட்... அதான் நெசம்..!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரபலமான கார்களில் ஒன்றாக ஸ்விஃப்ட் கார் இருக்கின்றது. இது, இந்திய இளைஞர்களின் மிகவும் விருப்பமான கார்களில் ஒன்றாக காட்சியளித்து வருகின்றது.

இதன் அசத்தலான ஸ்டைல் மற்றும் வசதியே ஒவ்வொரு இளைஞரின் கனவு வாகனமாக முந்தைய காலத்தில் காட்சியளிக்க காரணமாக இருந்தது. ஏன், தற்போது பல இளைஞர்களின் ஆவல்மிகுந்த காராக இது இருந்து வருகின்றது.

நீங்க நம்புறீங்களோ இல்லையோ, இது மாருதி ஸ்விஃப்ட்... அதான் நெசம்..!

அந்தவகையிலான இதன் ஸ்டைலான தோற்றத்தை ஓர் இளைஞர் மாற்றியமைத்துள்ளார். அதிலும், அதனை ஐகானிக் மாடல் என்றழைக்கப்படும் பீட்டிலைப் போன்று அவர் மாற்றியமைத்துள்ளார்.

நீங்க நம்புறீங்களோ இல்லையோ, இது மாருதி ஸ்விஃப்ட்... அதான் நெசம்..!

பீட்டில் கார்கள் தற்போது உலகின் பல்வேறு சந்தைகளில் இருந்து பின் வாங்கப்பட்டுவிட்டது. இந்தியாவிலும்கூட இது தற்போது விற்பனைக்குக் கிடைப்பதில்லை. இருப்பினும், ஒரு சில செகண்ட் ஹேண்ட் சந்தையில் மட்டும் இந்த பீட்டில் மாடல் கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

நீங்க நம்புறீங்களோ இல்லையோ, இது மாருதி ஸ்விஃப்ட்... அதான் நெசம்..!

ஆனால், அதன்மீது விருப்பம் காட்டாத ஸ்விஃப்ட் காரின் உரிமையாளர், தன்னுடைய ஸ்விஃப்டையே பீட்டிலாக மாடிஃபை செய்ய எண்ணினார். அதற்காக உள்ளூர் வாகன மாடிஃபை நிறுவனமான மேக்னெட்டோ 11 என்ற நிர்வாகத்தை நாடியுள்ளார். இது மத்தியபிரதேசத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனம், முன்னதாக சிறிய ரக ஜிப்ஸியை உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

நீங்க நம்புறீங்களோ இல்லையோ, இது மாருதி ஸ்விஃப்ட்... அதான் நெசம்..!

இதேபோன்று, தற்போது மாருதி ஸ்விஃப்ட் காரை பீட்டிலாக உரு மாற்றியுள்ளது. இந்த காரை எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் பீட்டிலைப் போன்றே அழகாகக் காட்சியளிக்கின்றது. இதற்காக தனது உண்மையான தோற்றத்தை முழுமையாக இழந்த ஸ்விஃப்ட், பீட்டில் காரின் மாடிஃபைட் போர்வையால் தன்னை அழகுப்படுத்திக் கொண்டுள்ளது.

இத்தகைய மாற்றத்திற்காக 10 முதல் 12 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. இதுகுறித்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

நீங்க நம்புறீங்களோ இல்லையோ, இது மாருதி ஸ்விஃப்ட்... அதான் நெசம்..!

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்தான் என்று நாம் கூற முடியாத அளவிற்கு அந்த கார் மாற்றியமைக்கப்பட்டிருப்பதை வீடியோவில் பார்த்தோம். ஆனால் என்னதான் இந்த காரின் தோற்றம் மாற்றியமைக்கப்பட்டிருந்தாலும், அதன் எஞ்ஜின் மட்டும் மாற்றப்படவில்லை.

நீங்க நம்புறீங்களோ இல்லையோ, இது மாருதி ஸ்விஃப்ட்... அதான் நெசம்..!

அதேசமயம், காரின் கேபினுக்குள் பிரிமியம் வசதிக்காக டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், சொகுசு இருக்கை மற்றும் வெளிப்புறத்தில் ஹெட்லைட் போன்ற பல்வேறு அம்சங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

நீங்க நம்புறீங்களோ இல்லையோ, இது மாருதி ஸ்விஃப்ட்... அதான் நெசம்..!

பீட்டில் என்பது ஃபோக்ஸ் வேகன் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த பிரிமியம் ரக கார்களில் ஒன்றாகும். இந்த கார் எப்படி சொகுசு வசதிகளை வாரி வழங்குமோ அதற்கு இணையாக இந்த மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் காரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்திற்காக அதன் உரிமையாளர் ரூ. 4.5 லட்சம் வரை செலவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீங்க நம்புறீங்களோ இல்லையோ, இது மாருதி ஸ்விஃப்ட்... அதான் நெசம்..!

இதுபோன்று, வாகனங்களை மாடிஃபைச் செய்வது இந்திய மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றமாகும். இருப்பினும், ஆர்டிஓ-வில் பதிவு செய்வதற்காக வாகன மாடிஃபை மற்றும் புதிய மாடிஃபை பீட்டிலின் உரிமையாளர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இது எந்தளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.

அதேசமயம், மும்பை மற்றும் டெல்லி போன்ற பெருநகரங்களில் மாடிஃபை செய்யப்பட்ட வாகனம் காணப்பட்டால் உடனடியாக பறிமுதம் செய்யப்படுவது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 1, 2020, 14:12 [IST]
English summary
Maruti Suzuki Swift Modified Into Iconic Volkswagen Beetle. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+