மாருதி சுசுகி எஸ்-க்ராஸ் டீசல் காரின் தயாரிப்பு நிறுத்தம்...

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் புதிய எஸ்-க்ராஸ் மாடலின் டீசல் வேரியண்ட்டின் தயாரிப்பை நிறுத்தவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. இதுகுறித்த முழு தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

மாருதி சுசுகி எஸ்-க்ராஸ் டீசல் காரின் தயாரிப்பு நிறுத்தம்...

ஏனெனில் இதன் டீசல் வேரியண்ட்டை அதன் விலைக்குள் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்வது கடினமான காரியமாகும். இதனால் விலை அதிகரிப்பு செய்ய வேண்டிய கட்டாயம் மாருதி நிறுவனத்திற்கு ஏற்படும். ஆனால் இந்நிறுவனம் நடுத்தர மக்களுக்கும் ஏற்ற பட்ஜெட் விலையிலேயே வாகனங்களை விற்பனை செய்ய விரும்புகிறது.

மாருதி சுசுகி எஸ்-க்ராஸ் டீசல் காரின் தயாரிப்பு நிறுத்தம்...

தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ள எஸ்-க்ராஸ் டீசல் வேரியண்ட் அறிமுகத்தின்போது இரு டீசல் என்ஜின் தேர்வுகளை கொண்டிருந்தது. இதில் 1.6 லிட்டர் என்ஜின் தேர்வு எஸ்-க்ராஸ் மாடல் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்கு எப்போது மாற்றப்பட்டப்போதோ அப்போதே நிறுத்தப்பட்டுவிட்டது.

மாருதி சுசுகி எஸ்-க்ராஸ் டீசல் காரின் தயாரிப்பு நிறுத்தம்...

மற்றொரு 1.3 லிட்டர் டீசல் என்ஜின் எஸ்எச்விஎஸ் மில்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்தை பெற்றிருந்தது. தற்போதைய எஸ்-க்ராஸ் மாடலில் வழங்கப்படுகின்ற இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 89 பிஎச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் வெளிப்படுத்தவல்லது.

மாருதி சுசுகி எஸ்-க்ராஸ் டீசல் காரின் தயாரிப்பு நிறுத்தம்...

இந்த 1.3 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வி தயாரிப்பைதான் தற்போது நிறுத்தியுள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ள. இதனால் 2020 மாருதி எஸ்-க்ராஸ் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் என்ஜினுடன் மட்டும் தான் விற்பனை செய்யப்படவுள்ளது.

மாருதி சுசுகி எஸ்-க்ராஸ் டீசல் காரின் தயாரிப்பு நிறுத்தம்...

இந்த 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் சமீபத்தில் பிஎஸ்6 தரத்தில் அறிமுகமான மாருதி எர்டிகா மற்றும் சியாஸ் மாடல்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. எஸ்-க்ராஸ் மாடலுக்கு பொருத்தப்பட்டுள்ள இந்த 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் காருக்கு வழங்கக்கூடிய ஆற்றல் அளவுகள் குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மாருதி சுசுகி எஸ்-க்ராஸ் டீசல் காரின் தயாரிப்பு நிறுத்தம்...

ஆனால் இந்த என்ஜின் சியாஸ் மற்றும் எர்டிகா மாடல்களில் வெளிப்படுத்துவதை போல் 103 பிஎச்பி பவரையும் 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே மில்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் இந்த என்ஜின் இயங்கினால் இன்னும் சிறந்த எரிபொருள் திறனை வெளிப்படுத்தும்.

மாருதி சுசுகி எஸ்-க்ராஸ் டீசல் காரின் தயாரிப்பு நிறுத்தம்...

மேலும் இந்த 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் என்ஜின் விரைவில் அறிமுகமாகவுள்ள மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 காருக்கும் வழங்கப்படும் என தெரிகிறது. ஏனெனில் தற்போது தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ள எஸ்-க்ராஸ் மாடலின் டீசல் என்ஜின் தேர்வை விட்டாரா பிரெஸ்ஸா மாடலின் தற்போதைய தலைமுறை காரும் கொண்டுள்ளது.

மாருதி சுசுகி எஸ்-க்ராஸ் டீசல் காரின் தயாரிப்பு நிறுத்தம்...

மாருதி நிறுவனம் கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து தற்போதுவரை பல டீசல் வேரியண்ட் கார்களின் தயாரிப்பு மற்றும் விற்பனையை நிறுத்தியுள்ளது. இவற்றை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றுவதால் செலவு அதிகம் ஆகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் பெட்ரோல் என்ஜினை கொண்ட கார்களை தான் கடந்த சில வருடங்களாக அதிகளவில் தேர்வு செய்து வருகின்றனர்.

மாருதி சுசுகி எஸ்-க்ராஸ் டீசல் காரின் தயாரிப்பு நிறுத்தம்...

தயாரிப்பு நிறுத்தங்கள் இருந்தாலும் இந்நிறுவனத்தில் இருந்து இந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஏகப்பட்ட புதிய பிஎஸ்6 மாடல்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அவற்றை பற்றிய விரிவான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்ந்து இணைப்பில் இருங்கள்.

Most Read Articles
English summary
Maruti Suzuki S-Cross Diesel Model Discontinued: Petrol Model To Debut At Auto Expo
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X