17 புதிய கார் மாடல்களுடன் ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி காட்ட மாருதி ரெடி!

டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நாளை துவங்க இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில், 17 புதிய கார் மாடல்களை மாருதி சுஸுகி காட்சிப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த கார் விபரங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

17 புதிய கார் மாடல்களுடன் ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி காட்ட மாருதி ரெடி!

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி எதிர்கால சந்தையை வலுவாக மாற்றிக் கொள்வதற்கான திட்டத்தை கையில் வைத்துள்ளது. இதற்கான முன்னோட்டமாக நாளை துவங்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

17 புதிய கார் மாடல்களுடன் ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி காட்ட மாருதி ரெடி!

மொத்தம் 17 புதிய கார் மாடல்களை மாருதி சுஸுகி நிறுவனம் காட்சிப்படுத்த இருப்பதாக தெரிகிறது. இதில், அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ள மாடல் மாருதி சுஸுகி ஃப்யூச்சரோ இ என்ற பெயரிலான எலெக்ட்ரிக் கார்.

17 புதிய கார் மாடல்களுடன் ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி காட்ட மாருதி ரெடி!

மாருதி ஃப்யூச்சரோ இ எலெக்ட்ரிக் கார் எஸ்யூவி ரகத்தில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு இணையானதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மாருதி அரங்கத்தில் மிக முக்கிய மாடலாக பார்வையாளர்களை கவரும் என நம்பலாம்.

17 புதிய கார் மாடல்களுடன் ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி காட்ட மாருதி ரெடி!

அடுத்து மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் இக்னிஸ் கார்களின் பிஎஸ்-6 மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த இரண்டு மாடல்களுமே பட்ஜெட் வாடிக்கையாளர் மத்தியில் நீண்ட காலமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மாடல்களாக கூறலாம்.

17 புதிய கார் மாடல்களுடன் ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி காட்ட மாருதி ரெடி!

இதுதவிர்த்து, மாருதி வேகன் ஆர் காரின் பிரிமீயம் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த கார் நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும்.

17 புதிய கார் மாடல்களுடன் ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி காட்ட மாருதி ரெடி!

அடுத்து புதிய எஸ் க்ராஸ் மாடலானது பெட்ரோல் எஞ்சின் தேர்வில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த மாடல்களில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கும். இதுவும் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான அம்சங்களுடன் வர இருக்கிறது.

17 புதிய கார் மாடல்களுடன் ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி காட்ட மாருதி ரெடி!

மேலும், புதிய கான்செப்ட் கார் மாடல்களையும் மாருதி சுஸுகி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த புதிய மாடல்கள் மூலமாக ஆட்டோ எக்ஸ்போவை கலக்க காத்திருக்கிறது மாருதி சுஸுகி நிறுவனம்.

17 புதிய கார் மாடல்களுடன் ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி காட்ட மாருதி ரெடி!

ஆட்டோ எக்ஸ்போவில் முதல் நிகழ்ச்சியாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய மாடல்கள் அறிமுக விழா நடக்க இருக்கிறது. இதுகுறித்த செய்திகள், வீடியோக்களை டிரைவ்ஸ்பார்க் தளத்தில் உடனுக்குடன் பார்க்க டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் இணைந்திருங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 4, 2020, 15:01 [IST]
English summary
Maruti Suzuki has revealed that the company will showcase 17 new car models at the Auto Expo 2020.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+