மூன்று புதிய கார்களை அறிமுகப்படுத்தவுள்ள மாருதி சுஸுகி... பெயர்களை பதிவுசெய்து கொண்டது...

மாருதி சுஸுகி நிறுவனம் எஸ்பாகோ, லிபர்ட்டாஸ் மற்றும் சாலிடோ என்ற மூன்று பெயரில் வர்த்தக முத்திரை பயன்பாடுகளை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மூன்று புதிய கார்களை அறிமுகப்படுத்தவுள்ள மாருதி சுஸுகி... பெயர்களை பதிவுசெய்து கொண்டது...

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள மாருதி சுஸுகி புதியதாக சில மாடல் கார்களை வடிவமைக்க திட்டமிட்டுள்ளது. அவற்றிற்கான பெயர்கள் தான் மேற்கூறப்பட்ட மூன்றும்.

மூன்று புதிய கார்களை அறிமுகப்படுத்தவுள்ள மாருதி சுஸுகி... பெயர்களை பதிவுசெய்து கொண்டது...

இதில் ஆல்டோ மற்றும் செலிரியோ மாடல்களின் புதிய தலைமுறை கார்களும் அடங்குகின்றன. இவை மட்டுமின்றி தற்சமயம் மாருதி நிறுவனம் வேகன் ஆர் ஹேட்ச்பேக் காரின் 7-இருக்கை வெர்சனின் தயாரிப்பிலும் ஈடுப்பட்டு வருகிறது.

மூன்று புதிய கார்களை அறிமுகப்படுத்தவுள்ள மாருதி சுஸுகி... பெயர்களை பதிவுசெய்து கொண்டது...

இவற்றில் புதிய தலைமுறை செலிரியோ கார் இந்திய சாலைகளில் சில முறை சோதனை ஓட்டங்களின்போது அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. தீபாவளி பண்டிக்கையை குறிவைத்து விற்பனை கொண்டுவரப்படும் இந்த புதிய தலைமுறை கார் தற்போதைய செலிரியோவை காட்டிலும் மிகவும் புத்துணர்ச்சியான டிசைனில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

மூன்று புதிய கார்களை அறிமுகப்படுத்தவுள்ள மாருதி சுஸுகி... பெயர்களை பதிவுசெய்து கொண்டது...

ஃபேஸ்லிஃப்ட் மாற்றமாக காரின் முன்பகுதி சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் ஒய்என்சி என்ற குறியீட்டு பெயரால் அழைக்கப்பட்டு வரும் இந்த கார் மாருதியின் புதிய ஹார்ட்டெக் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மூன்று புதிய கார்களை அறிமுகப்படுத்தவுள்ள மாருதி சுஸுகி... பெயர்களை பதிவுசெய்து கொண்டது...

புதிய தலைமுறை செலிரியோவில் வேகன்ஆர் மாடலில் பொருத்தப்பட்டு வரும் பிஎஸ்6 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ற இரு என்ஜின் தேர்வுகளுடன் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதேபோல் இதில் 1.2 லிட்டர் என்ஜின் சற்று அதிக ஆற்றலை வழங்கும் விதத்தில் அப்கிரேட் செய்யப்பட்டு பொருத்தப்படும் எனவும் அவை தெரிவிக்கின்றன.

மூன்று புதிய கார்களை அறிமுகப்படுத்தவுள்ள மாருதி சுஸுகி... பெயர்களை பதிவுசெய்து கொண்டது...

இதன் அறிமுகத்தை தொடர்ந்து ஆல்டோவின் 9ஆம் தலைமுறை காரும் வருகிற டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படவுள்ளதாக ஜப்பான் ஊடகம் ஒன்று கூறியுள்ளது. மற்றப்படி புதிய தலைமுறை ஆல்டோ காரை பற்றிய வேறெந்த தகவலும் தற்போதைக்கு இல்லை.

மூன்று புதிய கார்களை அறிமுகப்படுத்தவுள்ள மாருதி சுஸுகி... பெயர்களை பதிவுசெய்து கொண்டது...

வேகன்ஆரின் 7 இருக்கை வெர்சன் காரின் அறிமுகம் 2021ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக வேகன்ஆரின் எலக்ட்ரிக் வெர்சனின் தயாரிப்பிலும் மாருதி சுஸுகி நிறுவனம் ஈடுப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Maruti Suzuki trademarks for three New cars. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X