அக்டோபர் மாதம் 15,000க்கும் மேற்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் கார்கள் விற்பனை...

கடந்த அக்டோபர் மாதம் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார்களின் விற்பனை நிலவரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அக்டோபர் மாதம் 15,000க்கும் மேற்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் கார்கள் விற்பனை...

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா இருந்து வருகிறது. இந்த சூழலில், சுஸுகி மோட்டார் கம்பெனி உடனான கூட்டணியை பயன்படுத்தி கொண்டு, அர்பன் க்ரூஸர் என்ற சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரை சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது டொயோட்டா.

அக்டோபர் மாதம் 15,000க்கும் மேற்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் கார்கள் விற்பனை...

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் டொயோட்டா அர்பன் க்ரூஸர். கடந்த அக்டோபர் மாதத்தில், மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஒட்டுமொத்தமாக 15,000க்கும் மேற்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் கார்களை விற்பனை செய்துள்ளன.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

அக்டோபர் மாதம் 15,000க்கும் மேற்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் கார்கள் விற்பனை...

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த மாதம் 12,087 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை விற்பனை செய்துள்ளது. அதே சமயம் டொயோட்டா நிறுவனம் 3,006 அர்பன் க்ரூஸர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக இரண்டு நிறுவனங்களும் 15,093 விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் கார்களை விற்பனை செய்துள்ளன.

அக்டோபர் மாதம் 15,000க்கும் மேற்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் கார்கள் விற்பனை...

இந்த இரண்டு சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களிலும், 1.5 லிட்டர், நான்கு-சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 105 பிஎஸ் பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

அக்டோபர் மாதம் 15,000க்கும் மேற்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் கார்கள் விற்பனை...

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகிய இரண்டு கார்களும் ஏறக்குறைய வசதிகளையும் ஒன்றாக பகிர்ந்து கொண்டுள்ளன. இதில், டிஆர்எல்களுடன் எல்இடி ப்ரொஜெக்டர் ஆட்டோ ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லேம்ப்கள், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை முக்கியமானவை.

அக்டோபர் மாதம் 15,000க்கும் மேற்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் கார்கள் விற்பனை...

இதுதவிர ஆட்டோமெட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மற்றும் மடக்க கூடிய ஓஆர்விஎம்கள், மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர்கள், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை ஆகிய வசதிகளையும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகிய கார்கள் பெற்றுள்ளன.

அக்டோபர் மாதம் 15,000க்கும் மேற்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் கார்கள் விற்பனை...

பாதுகாப்பை பொறுத்தவரை இந்த இரண்டு கார்களும், முன் பகுதியில் இரண்டு ஏர் பேக்குகளை பெற்றுள்ளன. அத்துடன் இபிடி உடன் ஏபிஎஸ், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஹை-ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், முன் பகுதியில் சீட் பெல்ட் ரிமைண்டர்கள் ஆகிய வசதிகளும் வழங்கப்படுகின்றன.

அக்டோபர் மாதம் 15,000க்கும் மேற்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் கார்கள் விற்பனை...

இந்த இரண்டு கார்களும் தங்களுக்குள் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு வருவதுடன், கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடனும் போட்டியிட்டு வருகின்றன. இந்த செக்மெண்ட்டில் வரும் மாதங்களில் இன்னும் பல்வேறு புதிய கார்கள் களமிறங்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Maruti Suzuki Vitara Brezza And Toyota Urban Cruiser October 2020 Sales Analysis. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X