புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரில் நிகழ்ந்துள்ள 7 முக்கிய மாற்றங்கள்!

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் மத்தியில் பேராவலை ஏற்படுத்தியுள்ள இந்த மாடலில் இடம்பெற்றிருக்கும் 7 முக்கிய மாற்றங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனையில் நம்பர்-1

விற்பனையில் நம்பர்-1

காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விற்பனையில் நம்பர்-1 தேர்வாக இருந்து வருகிறது. கடும் சந்தைப் போட்டி எழுந்துள்ள இந்த நிலையில், புதிய மாசு உமிழ்வு தரத்திற்கு ஒப்பாக இந்த காரில் புதிய எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. தவிரவும், வாடிக்கையாளர்களை கவரும் ஏராளமான கூடுதல் அம்சங்களுடன், வடிவமைப்பு மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன.

புதிய எஞ்சின்

புதிய எஞ்சின்

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் இதுவரை 90 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் மட்டுமே கிடைத்து வந்தது. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் காரணமாக, 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் 1.5 லிட்டர் பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சின் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த எஞ்சின் 105 பிஎஸ் பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பழைய டீசல் எஞ்சினைவிட புதி யபெட்ரோல் எஞ்சின் 15 பிஎஸ் பவரை கூடுதலாக வெளிப்படுத்தும். ஆனால், இது பெட்ரோல் எஞ்சின் என்பதால், டார்க் திறன் வெகுவாக குறைவாக உள்ளது.

அதிக பவர்

அதிக பவர்

இந்த எஞ்சின் 105 பிஎஸ் பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பழைய டீசல் எஞ்சினைவிட புதி யபெட்ரோல் எஞ்சின் 15 பிஎஸ் பவரை கூடுதலாக வெளிப்படுத்தும். ஆனால், இது பெட்ரோல் எஞ்சின் என்பதால், டார்க் திறன் வெகுவாக குறைவாக உள்ளது.

கியர்பாக்ஸ் தேர்வு

கியர்பாக்ஸ் தேர்வு

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் டீசல் மாடலில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், புதிய விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் மட்டும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும், ஹில் ஹோல்டு அசிஸ்ட் வசதியும் வழங்கப்படுகிறது.

 மைலேஜ்

மைலேஜ்

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் டீசல் மாடல் லிட்டருக்கு 24.3 கிமீ மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது. ஆனால், புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 17.03 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மைல்டு ஹைப்ரிட் மாடல் லிட்டருக்கு 18.76 கிமீ மைலேஜையும் வழங்கும் திறன் வாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிப்புற சிறப்பம்சங்கள்

வெளிப்புற சிறப்பம்சங்கள்

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் முகப்பு க்ரில், ஹெட்லைட் க்ளஸ்ட்டர், டெயில் லைட் க்ளஸ்ட்டர் வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்றுள்ளன. 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

உட்புற சிறப்பம்சங்கள்

உட்புற சிறப்பம்சங்கள்

பதிய சீட் அப்ஹோல்ஸ்ட்ரி, ஸ்டிக்கர் அலங்கார பாகங்கள், தானியங்கி முறையில் பகல் மற்றும் இரவுக்கு தக்கவாறு மாறிக் கொள்ளும் உட்புற ரியர் வியூ மிரர், 7 அங்குல ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

புதிய வண்ணத் தேர்வுகள்

புதிய வண்ணத் தேர்வுகள்

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் புதிய வண்ணத் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. கருப்பு- சிவப்பு, நீலம்- கருப்பு, சாம்பல் மறறும் ஆரஞ்ச் வண்ணக் கூரை ஆகிய வண்ணத் தேர்வுகளில் வந்துள்ளது. இதுதவிர்த்து, ஒற்றை வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும்.

அறிமுக விபரம்

அறிமுக விபரம்

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி இந்த மாத மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. கொடுக்கும் பணத்திற்கு ஏராளமான மதிப்புமிக்க விஷயங்களுடன் வர இருக்கிறது. பழைய மாடலைவிட சற்று கூடுதல் விலையில் விற்பனைக்கு வரும்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 8, 2020, 12:50 [IST]
English summary
Here are 7 new things in new Maruti Vitara Brezza as compared to the outgoing model. Read in Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+