புதிய பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு குவியும் புக்கிங்... மாருதி ஹேப்பி அண்ணாச்சி!

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

புதிய பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு குவியும் புக்கிங்... மாருதி ஹேப்பி அண்ணாச்சி!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிதான் விற்பனையில் நம்பர்-1 மாடலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார் இந்த மாத துவக்கத்தில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.

புதிய பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு குவியும் புக்கிங்... மாருதி ஹேப்பி அண்ணாச்சி!

இதைத்தொடர்ந்து, அண்மையில் புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார் முறைப்படி சந்தையில் விற்பனைக்கும் கொண்டு வரப்பட்டது. ரூ.7.34 லட்சம் ஆரம்ப விலையில் புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கிடைக்கிறது.

புதிய பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு குவியும் புக்கிங்... மாருதி ஹேப்பி அண்ணாச்சி!

இந்த நிலையில், இந்த புதிய மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டு 20 நாட்களில் 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த சிறப்பான வரவேற்பு மாருதி நிறுவனத்திற்கு உற்சாகத்தை தரும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

புதிய பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு குவியும் புக்கிங்... மாருதி ஹேப்பி அண்ணாச்சி!

புதுப்பொலிவுடன் வந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய க்ரில் அமைப்பு, பம்பர், அலாய் வீல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இதன் மதிப்பை உயர்த்தும் விஷயமாக இருக்கிறது.

புதிய பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு குவியும் புக்கிங்... மாருதி ஹேப்பி அண்ணாச்சி!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் ஏற்கனவே 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டது. புதிய மாடலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு ஒப்பான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு குவியும் புக்கிங்... மாருதி ஹேப்பி அண்ணாச்சி!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே வழங்கப்பட்ட ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு நீக்கப்பட்டு, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுக்கு மாறி இருக்கிறது.

புதிய பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு குவியும் புக்கிங்... மாருதி ஹேப்பி அண்ணாச்சி!

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் முன்புறத்தில் காயில் ஸ்பிரிங்குகள் கொண்ட மெக்பர்ஷன் ஸ்ட்ரட் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் காயில் ஸ்பிரிங்குகள் கொண்ட டார்ஷன் பீம் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது இந்த காரில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் டிரம் பிரேக்குகளும் உள்ளன.

புதிய பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு குவியும் புக்கிங்... மாருதி ஹேப்பி அண்ணாச்சி!

இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன்புற இருக்கைகளுக்கு சீட் பெல்ட் வார்னிங் சிஸ்டம், அதிவேகம் குறித்த தொடர்ந்து எச்சரிக்கை வழங்கும் வசதி, ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

புதிய பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு குவியும் புக்கிங்... மாருதி ஹேப்பி அண்ணாச்சி!

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார் ரூ.7.34 லட்சம் முதல் ரூ.11.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Source: Financial Express

More from DriveSpark

Article Published On: Saturday, February 29, 2020, 14:37 [IST]
English summary
Maruti Suzuki India Limited has announced a sales milestone for the Maruti Suzuki Vitara Brezza BS6 model. The facelift model has registered 10,000 units in bookings in just 20 days. The SUV was unveiled at the recent Auto Expo event at Delhi.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+