மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் புதிய சாதனை!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் புதிய சாதனை!

காம்பேக்ட் எஸ்யூவி வகை கார் மார்க்கெட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் விற்பனையை குறிவைத்து பல்வேறு புதிய மாடல்கள் களமிறக்கப்பட்ட போதிலும், ஸ்திரமான விற்பனையை பதிவு செய்து வருகிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் புதிய சாதனை!

கடந்த 2016ம் ஆண்டு எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் அனைத்து விதங்களிலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்டு 46 மாதங்களில் 5 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் புதிய சாதனை!

அறிமுகம் செய்யப்பட்டது முதல் கடந்த மாதம் வரை 5,08,673 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் விற்பனையாகி உள்ளன. மாருதி நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய மாடலாகவும் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு மாருதிக்கு சோதனையான காலமாக இருந்தாலும், குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பை வழங்கி மாருதி பிரெஸ்ஸா உற்றத் துணையாக மாறி இருக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் புதிய சாதனை!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், 5 பேர் பயணிப்பதற்கான சிறப்பான இடவசதியை அளிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு மன நிறைவை தரும் பல்வேறு சிறப்புகளை பெற்றிருக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் புதிய சாதனை!

இந்த காரில் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் புதிய சாதனை!

போட்டியாளர்களை ஒப்பிடும்போது இந்த எஸ்யூவியின் பவர் சற்று குறைவாக இருந்தாலும், மைலேஜில் சமரசம் செய்து விடுகிறது. ஆம், இந்த காரின் எஞ்சின் லிட்டருக்கு 24.29 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்றளித்துள்ளது. நடைமுறையில் லிட்டருக்கு 20 கிமீ சராசரியை வழங்கும் என்பது வாடிக்கையாளர்களை கவர்ந்த விஷயம்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் புதிய சாதனை!

ஏனெனில், எஸ்யூவி கார்களில் மைலேஜ் என்பது மூன்றாம் பட்சமாகவே பார்க்க முடியும். ஆனால், நம்பிக்கையான இந்த 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதால், வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் புதிய சாதனை!

இந்த நிலையில், தற்போது பயன்படுத்தப்படும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் கடுமையான மாசு உமிழ்வு விதிகளால் பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட இருக்கிறது. இதனால், மாருதி எர்டிகா, சியாஸ் கார்களில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் பயன்படுத்தப்பட இருக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் புதிய சாதனை!

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருப்பதாக தெரிகிறது. வரும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் புதிய சாதனை!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் ரூ.7.80 லட்சம் முதல் ரூ.10.73 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய கார்களுக்கு கடும் சவாலை கொடுத்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 7, 2020, 10:16 [IST]
English summary
Maruti Suzuki India announced that its compact SUV - Vitara Brezza has marked another milestone by achieving 5 lakh sales in a record time of just 46 months since its launch.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+