வெறும் 4.5 ஆண்டுகளில்... 5.5 லட்சம் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை...

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி அதன் காம்பெக்ட் எஸ்யூவி கார் மாடலான விட்டாரா பிரெஸ்ஸாவின் விற்பனையில் 5.5 லட்சம் என்ற மைல்கல்லை கடந்துள்ளதாக இன்று (அக்.6) அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் 4.5 ஆண்டுகளில்... 5.5 லட்சம் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை...

முற்றிலும் புதுமையான தோற்றத்தில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா முதன்முதலாக இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இருந்து வெறும் 4.5 ஆண்டுகளில் இந்த மாருதி தயாரிப்பு இத்தகைய இமாலய சாதனையை விற்பனையில் பதிவு செய்துள்ளது.

வெறும் 4.5 ஆண்டுகளில்... 5.5 லட்சம் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை...

இந்த 2020ஆம் வருட துவக்கத்தில் விட்டாரா பிரெஸ்ஸாவை பிஎஸ்6 தரத்தில் மாருதி நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த வகையில் இதில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.5 லிட்டர், 4 சிலிண்டர் கே-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

வெறும் 4.5 ஆண்டுகளில்... 5.5 லட்சம் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை...

அதேநேரம் முன்பு வழங்கப்பட்டுவந்த டீசல் என்ஜின் தேர்வை தயாரிப்பு நிறுவனம் நிறுத்திவிட்டது. பிஎஸ்6 விட்டாரா பிரெஸ்ஸா அறிமுகமாகி இந்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 32,000 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் மாருதி நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வெறும் 4.5 ஆண்டுகளில்... 5.5 லட்சம் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை...

இவ்வாறு காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் தவிர்க்க முடியாத காராக உருவெடுத்து நிற்கும் விட்டாரா பிரெஸ்ஸாவின் தற்போதைய புதிய மைல்கல் குறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தாவா கூறுகையில், விட்டாரா ப்ரெஸாவின் இந்த 5.5 லட்சம் விற்பனை மைல்கல், தற்போதைய நுகர்வோர் விருப்பத்தேர்வுகள் மற்றும் சந்தை போக்குகளுக்கு ஏற்ப மாருதி சுசுகியின் போர்ட்ஃபோலியோவை தொடர்ந்து புதுமைப்படுத்தவும் வலுப்படுத்தவும் நாங்கள் மேற்கொண்ட முயற்சியின் ஒரு அங்கீகாரமாகும்" என தெரிவித்தார்.

வெறும் 4.5 ஆண்டுகளில்... 5.5 லட்சம் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை...

மேலும் பேசிய அவர், கம்பீரமான தோற்றம் மற்றும் டிசைன் மொழியினாலும் ஆற்றல்மிக்க செயல்திறன் மற்றும் ஸ்போர்டியான பண்பினாலும் எஸ்யூவி பிரியர்களால் அதிகளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவதால் விட்டாரா பிரெஸ்ஸா காம்பெக்ட் எஸ்யூவி பிரிவை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

வெறும் 4.5 ஆண்டுகளில்... 5.5 லட்சம் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை...

குறிப்பிடத்தக்க டிசைன் அப்டேட்களுடன் சக்திவாய்ந்த 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், விட்டாரா பிரெஸ்ஸா வாடிக்கையாளர்களை மேலும் மகிழ்வித்துள்ளது. மேலும் இந்த பிரிவில் அதன் துருவ நிலையை உறுதிப்படுத்தியுள்ளது எனவும் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தாவா கூறியுள்ளார்.

வெறும் 4.5 ஆண்டுகளில்... 5.5 லட்சம் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை...

இந்திய சந்தையில் ரூ.7.34 லட்சத்தை ஆரம்ப விலையாக கொண்டுள்ள விட்டாரா பிரெஸ்ஸா காம்பெக்ட் எஸ்யூவி காரின் எக்ஸ்ஷோரூம் விலை அதிகப்பட்சமாக ரூ.11.41 லட்சம் வரையில் உள்ளது. விற்பனையில் இந்த மாருதி தயாரிப்பு போட்டியினை அளிக்கும் வகையில் ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்டவை உள்ளன.

Most Read Articles

English summary
Maruti Vitara Brezza Reaches 5.5 Lakh Sales
Story first published: Tuesday, October 6, 2020, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X