கொரோனாவை சட்டை செய்யாத மாருதி பிரெஸ்ஸா... புக்கிங் எகிறுகிறது!

கொரோனாவால் பெரும் பிரளயமே நிகழ்ந்து வரும் நிலையில், மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புக்கிங் நிதானமாக அதிகரித்து வருகிறது.

கொரோனாவை சட்டை செய்யாத மாருதி பிரெஸ்ஸா... புக்கிங் எகிறுகிறது!

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிறிது நாட்களிலேயே கொரோனா வைரஸ் பிரச்னையால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. ஷோரூம்கள் மூடப்பட்டதால் முன்பதிவு, விற்பனை என இரண்டிலுமே கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது.

கொரோனாவை சட்டை செய்யாத மாருதி பிரெஸ்ஸா... புக்கிங் எகிறுகிறது!

எனினும், சுதாரித்துக் கொண்ட மாருதி கார் நிறுவனம் ஆன்லைன் மூலமாக புக்கிங்கை திறந்துவிட்டதுடன், கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஷோரூம்களை திறந்தது. இந்த நிலையில், மாருதி பிரெஸ்ஸா மீது வாடிக்கையாளர்களுக்கு மோகம் காரணமாக, தொடர்ந்து புக்கிங் அதிகரித்து வந்தது.

கொரோனாவை சட்டை செய்யாத மாருதி பிரெஸ்ஸா... புக்கிங் எகிறுகிறது!

அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை 26,000 பேர் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியை முன்பதிவு செய்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் மாருதி உயர் அதிகாரி சஷாங்க் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். இந்த மாதிரியான இக்கட்டான தருணத்தில் ரிஸ்க் எடுக்க வாடிக்கையாளர்கள் விரும்பவில்லை. மிகவும் நம்பகமான பிராண்டிலேயே முதலீடு செய்ய விரும்புவதை பிரெஸ்ஸா புக்கிங் காட்டுகிறது," என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை சட்டை செய்யாத மாருதி பிரெஸ்ஸா... புக்கிங் எகிறுகிறது!

புதிய மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியில் டீசல் எஞ்சின் தவிர்க்கப்பட்டு, பிஎஸ்6 தரத்திற்கு இணையான பெட்ரோல் எஞ்சின் தேர்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் கொடுக்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

கொரோனாவை சட்டை செய்யாத மாருதி பிரெஸ்ஸா... புக்கிங் எகிறுகிறது!

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் சுஸுகி நிறுவனத்தின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் உள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலமாக ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டம் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் மூலமாக பேட்டரியில் மின் ஆற்றல் சேமிக்கப்பட்டு, தேவைப்படும் நேரத்தில் கூடுதல் டார்க் திறனை வழங்கும். இதன்மூலமாக, அதிக எரிபொருள் சிக்கனத்தை உறுதி செய்வதுடன், சிறந்த செயல்திறனையும் வழங்கும்.

கொரோனாவை சட்டை செய்யாத மாருதி பிரெஸ்ஸா... புக்கிங் எகிறுகிறது!

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி வாடிக்கையாளர்களை கவர்ந்திருப்பதற்கு, முகப்பில் க்ரில், ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், பம்பர் ஆகியவற்றின் டிசைனில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

கொரோனாவை சட்டை செய்யாத மாருதி பிரெஸ்ஸா... புக்கிங் எகிறுகிறது!

இந்த காரில் 16 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய ஸ்மார்ட் பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சாதனம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.

கொரோனாவை சட்டை செய்யாத மாருதி பிரெஸ்ஸா... புக்கிங் எகிறுகிறது!

புதிய மாருதி பிரெஸ்ஸா கார் ரூ.7.34 லட்சம் முதல் ரூ.11.40 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 27, 2020, 11:30 [IST]
English summary
The 2020 Maruti Suzuki Vitara Brezza was launched right before the nation-wide lockdown came into effect. The compact-SUV bookings have reached 26,000 mark. The compact-SUV has managed to receive bookings despite the nation completely under lockdown.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+