மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

பல்வேறு மாற்றங்கள் மற்றும் பிஎஸ்-6 எஞ்சினுடன் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விலை மற்றும் முக்கிய விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிதான் விற்பனையில் நம்பர்-1 மாடலாக இருந்து வருகிறது. 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வகை கார்களில் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக தொடர்ந்து தக்க வைத்து வருகிறது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

இந்த நிலையில், பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி அண்மையில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

இன்று புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார் முறைப்படி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதுவரை பிஎஸ்-4 அம்சம் கொண்ட 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் விற்பனை செய்யப்பட்டு வந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் தற்போது 1.5 லிட்டர் பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சின் தேர்வில் வந்துள்ளது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியானது LXi, VXi, VXi AT, ZXi, ZXi+, ZXi AT, ZXi AT Dual Tone என ஏழு விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் இருக்கும் 1. 5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இந்த காரில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கொடுக்கப்படுகிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் மேனுவல் மாடலானது லிட்டருக்கு 17.03 கிமீ மைலேஜையும், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலானது லிட்டருக்கு 18.76 கிமீ மைலேஜையும் வழங்கும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் முகப்பு க்ரில் அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், ஸ்கிட் பிளேட்டுகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், கருப்பு வண்ண பில்லர்கள், சாம்பல் வண்ண ரூஃப் ரெயில்கள், எல்இடி டெயில் லைட்டுகள், இரட்டை வண்ணத் தேர்வு ஆகியவையும் முக்கிய அம்சங்களாக உள்ளன.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். இந்த சாதனம் மூலமாக, நிகழ்நேர போக்குவரத்து நிலவரம் குறித்த தகவல்கள், கார் இயக்கத்தில் இருக்கும் பிரச்னைகள் உள்ளிட்டவற்றையும் வழங்கும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார் ரூ.7.34 லட்சம் முதல் ரூ.11.40 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Lxi Rs 7.34 Lakh
Vxi Rs 8.35 Lakh
Vxi AT Rs 9.75 Lakh
Zxi Rs 9.10 Lakh
Zxi AT Rs 10.50 Lakh
Zxi+ Rs 9.75 Lakh
Zxi+ AT Rs 11.15 Lakh
Zxi+ AT Dual Tone Rs 11.40 Lakh
Article Published On: Monday, February 24, 2020, 13:31 [IST]
English summary
Maruti Suzuki India Limited (MSIL) has launched the Vitara Brezza facelift model in India and prices starting at Rs.7.34 Lakh (Ex-Showroom).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+