புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா: வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரின் வேரியண்ட்டுகளில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா: வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் LXi, VXi, ZXi, ZXi+ ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இதில், மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் அனைத்து வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலானது VXi, ZXi, ZXi+ ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா: வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

விட்டாரா பிரெஸ்ஸா LXi

மேனுவல் கியர்பாக்ஸ் விலை: ரூ.7.34 லட்சம்

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் மிக குறைவான விலை வேரியண்ட்டாக எல்எக்ஸ்ஐ வந்துள்ளது. இந்த வேரியண்ட்டில் ஹாலஜன் பல்புகளுடன் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல ஸ்டீல் வீல்கள், ரூஃப் மவுண்ட் ஸ்பாய்லர், முன்புற, பின்புற பவர் விண்டோ வசதி, இண்டிகேட்டர் பொருத்தப்பட்ட எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட சைடு மிரர்கள் உள்ளன.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா: வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

இந்த காரில் டில்ட் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ஸ்டீயரிங் வீல் உள்ளது. மல்டி இன்பர்ஃபமேஷன் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர், புளூடூத், ஆக்ஸ், யுஎஸ்பி போர்ட்டுடன் ஆடியோ சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள், மேனுவல் ஏசி சிஸ்டம் ஆகியவை உள்ளன.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா: வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

விலை குறைவான இந்த வேரியண்ட்டில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன்புற சீட்பெல்ட் பிரிடென்ஷனர், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா: வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

விட்டாரா பிரெஸ்ஸா VXi

மேனுவல் கியர்பாக்ஸ் விலை: ரூ.8.35 லட்சம்

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விலை: ரூ.9.75 லட்சம்

பொதுவாக மாருதி கார்களில் இந்த விஎக்ஸ்ஐ வேரியண்ட்டுதான் அதிக அளவில் விற்பனையாகிறது. இந்த வேரியண்ட்டில் கூடுதலாக ரியர் டீஃபாகர், ஹில் டிசென்ட் கன்ட்ரோல் (ஆட்டோமேட்டிக் மாடலில் மட்டும்), எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 16 அங்குல ஸ்டீல் வீல்கள், வீல் கவர்கள், கருப்பு வண்ண ரூஃப் ரெயில்கள், எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்றுள்ளன.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா: வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

மேலும், கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்- ஸ்டாப், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ஃபேப்ரிக் இன்சர்ட்டுகள், அட்ஜெஸ்ட்டபிள் ரியர் ஹெட்ரெஸ்ட்டுகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், அப்பர் க்ளவ் பாக்ஸ், கியர் பொசிஷன் இண்டிகேட்டர் (ஆட்டோமேட்டிக் மாடலில் மட்டும்) ஆகியவை வழங்கப்படுகின்றன.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா: வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

விட்டாரா பிரெஸ்ஸா ZXi

மேனுவல் கியர்பாக்ஸ்:ரூ.9.10 லட்சம்

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்: ரூ.10.50 லட்சம்

இந்த விலை உயர்ந்த வேரியண்ட்டில் ரியர் வாஷர் மற்றும் வைப்பர், 16 அங்குல கருப்பு வண்ண அலாய் வீல்கள் டேஷ்போர்டிற்கான பியானோ பிளாக் வண்ணத்திலான அலங்கார ஆக்சஸெரீகள், க்ரோம் பூச்சுடன் கைப்பிடிகள், அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ஓட்டுனர் இருக்கை, 60:40 அளவில் மடக்கும் பின் இருக்கைகள், கப் ஹோல்டருடன் ரியர் சென்டர் ஆர்ம்ரெஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் கமாண்ட் வசதிகள் உள்ளன.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா: வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

விட்டாரா பிரெஸ்ஸா ZXi+

மேனுவல் கியர்பாக்ஸ் விலை: ரூ.9.75 லட்சம்

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விலை: ரூ.11.40 லட்சம்)

இதுதான் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் மிக விலை உயர்ந்த வேரியண்ட்டாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வேரியண்ட்டில் இரட்டை வண்ணக் கலவை தேர்வு, 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி பனி விளக்குகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், முன் இருக்கைகளுக்கு மத்தியில் ஆர்ம்ரெஸ்ட், லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், 4 ஸ்பீக்கர்கள் மற்றும் 2 ட்வீட்டர்களுடன் மியூசிக் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா: வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

எஞ்சின் தேர்வு

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கிடைக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 25, 2020, 11:07 [IST]
English summary
Here are the details of variant wise features on Maruti Vitara Brezza facelift model.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+