மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மேனுவல் மாடலிலும் ஹைப்ரிட் நுட்பம் அறிமுகமாகிறது!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலிலும் ஹைப்ரிட் நுட்பம் வழங்கப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மேனுவல் மாடலிலும் ஹைப்ரிட் நுட்பம் அறிமுகமாகிறது!

வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கடந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மேலும், பிஎஸ்-6 எஞ்சினுடன் வந்தது. ஏற்கனவே, 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் மட்டும் வழங்கப்பட்ட நிலையில், அந்த எஞ்சினுக்கு பதிலாக 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா அறிமுகம் செய்யப்பட்டது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மேனுவல் மாடலிலும் ஹைப்ரிட் நுட்பம் அறிமுகமாகிறது!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவில் கொடுக்கப்பட்டுள்ள புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பழைய 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், புதிய பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மேனுவல் மாடலிலும் ஹைப்ரிட் நுட்பம் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடலில் மட்டும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், மேனுவல் மாடலைவிட ஆட்டோமேட்டிக் மாடல் அதிக மைலேஜ் தரும் வகையில் அமைந்தது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மேனுவல் மாடலிலும் ஹைப்ரிட் நுட்பம் அறிமுகமாகிறது!

பொதுவாக, ஆட்டோமேட்டிக் மாடலைவிட மேனுவல் கியர்பாக்ஸ்தான் அதிக மைலேஜ் தரும் வகையில் இருக்கும். ஆனால், புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 17.03 கிமீ மைலேஜ் தரும் நிலையில், ஆட்டோமேட்டிக் மாடலில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் இருப்பதால், லிட்டரு்கு 18.76 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மேனுவல் மாடலிலும் ஹைப்ரிட் நுட்பம் அறிமுகமாகிறது!

இதனால், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஆட்டோமேட்டிக் மாடல் குறிப்பிடத்தக்க அளவு கவர்ந்து வருகிறது. மேலும், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த டீசல் எஞ்சின் தேர்வை ஒப்பிடும்போது பெட்ரோல் மாடலின் மைலேஜ் குறைவாக இருக்கிறது. இதனை மனதில் வைத்து இப்போது மேனுவல் கியர்பாக்ஸ் மாடலிலும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்தை மாருதி வழங்க இருப்பது தெரிய வந்துள்ளது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மேனுவல் மாடலிலும் ஹைப்ரிட் நுட்பம் அறிமுகமாகிறது!

இந்த புதிய மாடலுக்கான அரசு பதிவு தொடர்பான ஆவணமும் வெளியாகி இருக்கின்றன. அதில், புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் மேனுவல் மாடலில் விஎக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ் ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட உள்ளது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மேனுவல் மாடலிலும் ஹைப்ரிட் நுட்பம் அறிமுகமாகிறது!

ஆட்டோமேட்டிக் மைல்டு ஹைப்ரிட் மாடலைவிட பிரெஸ்ஸாவின் மேனுவல் ஹைப்ரிட் மாடலின் விலை குறைவாக இருக்கும். இதனால், வாடிக்கையாளர்களின் கவனத்தை எளிதாக கவரும் வாய்ப்புள்ளது. தற்போது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார் ரூ.7.34 லட்சம் முதல் ரூ.9.98 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மேனுவல் மாடலிலும் ஹைப்ரிட் நுட்பம் அறிமுகமாகிறது!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் விற்பனையில் முன்னிலையில் இருந்தாலும், இந்த ரகத்தில் பல சிறந்த மாடல்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற வேண்டி இருக்கிறது. டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 போன்ற கார்களும் இந்த ரகத்தில் மிகச் சிறந்த தேர்வாக வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. எனவே, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரின் மதிப்பை கூட்டும் முயற்சிகளில் மாருதி சுஸுகி ஈடுபட்டுள்ளது.

Source: Zigwheels

More from DriveSpark

Article Published On: Tuesday, March 10, 2020, 11:50 [IST]
English summary
Maruti Suzuki is all set to launch Vitara Brezza petrol manual model with mild hybrid technology in India very soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+