புதிய மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!
புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. பழைய மாடலில் இருந்து பல்வேறு விதங்களிலும் இந்த புதிய மாடல் மேம்படுத்தப்பட்டு இருப்பதுடன், அதிக சிறப்பம்சங்களுடன் வர இருக்கிறது. இந்த காரின் வேரியண்ட் விபரங்கள் மற்றும் அவற்றில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வேரியண்ட்டுகள் விபரம்
புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார் பெட்ரோல் எஞ்சின் கொண்டதாக வர இருக்கிறது. இந்த காம்பேக் ரக எஸ்யூவி கார் LXi, VXi, ZXi மற்றும் ZXi+ ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த வேரியண்ட்டுகள் ஒவ்வொன்றிலும் கொடுக்கப்பட்டு இருக்கும் வசதிகளை தொடர்ந்து பார்க்கலாம்.

எல்எக்ஸ்ஐ வேரியண்ட்
இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றிருப்பது தெரிந்ததே. விலை குறைவான தேர்வாக வர இருக்கும் எல்எக்ஸ்ஐ வேரியண்ட்டானது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் ஹாலஜன் பல்புகளுடன் ஹெட்லைட், எல்இடி டெயில் லைட்டுகள், பாடி கலர் சைடு மிரர்கள், ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி, டே-நைட் ரியர் வியூ மிரர், யுஎஸ்பி, ஆக்ஸ் போர்ட், புளூடூத் இணைப்பு வசதியுடன் சிறிய பொழுதுபோக்கு சாதனம் இடம்பெற்றிருக்கும்.

இந்த வேரியண்ட்டில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஹை ஸ்பீடு அலர்ட் மற்றும் இதர அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், ரூஃப் ரெயில்கள், அலாய் வீல்கள், தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, புஷ் பட்டன் ஸ்டார்ட், க்ரூஸ் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் இடம்பெறவில்லை.

விஎக்ஸ்ஐ வேரியண்ட்
பொதுவாக மாருதி கார்களில் வாடிக்கையாளர்கள் அதிகம் தேர்வு செய்யும் வேரியண்ட் இதுதான். எல்எக்ஸ்ஐ வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் வசதிகளுடன் சேர்த்து கூடுதலாக பல அம்சங்கள் உள்ளன. இந்த வேரியண்ட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், வீல் கவர்கள், விளக்கு பொருத்தப்பட்ட க்ளவ் பாக்ஸ், ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டில் ஹில் ஹோல்டு அசிஸ்ட், கீ லெஸ் என்ட்ரி சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோ ஏசி சிஸ்டம் ஆகியவை உள்ளன.

இந்த வேரியண்ட்டில் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், எல்இடி பனி விளக்குகள், தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரியர் வைப்பர், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுKள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இல்லை.

இசட்எக்ஸ்ஐ வேரியண்ட்
விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் இருக்கும் வசதிகளுடன் சேர்த்து கூடுதலாக அலாய் வீல்கள், ரியர் வைப்பர், அட்ஜெஸ்ட் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை, 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, 60:40 என்ற அளவில் மடக்கும் வசதியுடன் பின் இருக்கைகள், க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை உள்ளன.

இந்த வேரியண்ட்டில் ரெயின் சென்சிங் ஆட்டோமேட்டிக் வைப்பர், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ரிவர்ஸ் கேமரா, தானியங்கி முறையில் மடங்கிக் கொள்ளும் சைடு மிரர்கள் ஆகியவை இல்லை.

இசட்எக்ஸ்ஐ ப்ளஸ்
புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் அதிகபட்சமான வசதிகள் கொண்ட வேரியண்ட் இதுதான். இந்த வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், காரை நிறுத்தும்போது தானியங்கி முறையில் மடங்கிக் கொள்ளும் சைடு மிரர்கள், ரிவர்ஸ் கேமரா, லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல், வெளிப்புறத்திற்கு இரட்டை வண்ணத் தேர்வு, எல்இடி பனி விளக்குகள், மியூசிக் சிஸ்டத்தில் கூடுதலாக 2 ட்வீட்டர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

எஞ்சின் விபரம்
புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் இதுவரை இருந்த 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக 1.5 லிட்டர் பெட்ரோ்ல எஞ்சின் தேர்வு வழங்கப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் மாடலில் மைல்டு ஹைப்ரிட் மாடலும் வழங்கப்பட உள்ளது.

முன்பதிவு
ரூ.11,000 முதல் ரூ.21,000 முன்பணத்துடன் புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. தற்போதைய மாடல் ரூ.7.62 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இதனைவிட சற்றே கூடுதல் விலையில் புதிய மாடல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








