மீண்டும் கேமரா கண்களில் சிக்கியது மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார்... எப்போது அறிமுகம்?

மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரின் ஸ்பை படங்கள் மீண்டும் ஒரு முறை வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மீண்டும் கேமரா கண்களில் சிக்கியது மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார்... எப்போது அறிமுகம்?

இந்தியாவில் தற்போது பல்வேறு எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் காற்று மாசுபாடு பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்பதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதியையும் குறைக்கலாம். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மத்திய, மாநில அரசுகளும் ஆர்வமாக உள்ளன.

மீண்டும் கேமரா கண்களில் சிக்கியது மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார்... எப்போது அறிமுகம்?

இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம், சாலை வரி மற்றும் பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு போன்ற பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாக அறிவித்து வருகின்றன. அரசிடம் இருந்து கிடைக்கும் இந்த ஆர்வம் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வருவதில், வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

மீண்டும் கேமரா கண்களில் சிக்கியது மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார்... எப்போது அறிமுகம்?

எலெக்ட்ரிக் கார்களை பொறுத்தவரை தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி, ஹூண்டாய் கோனா, எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி போன்ற எலெக்ட்ரிக் கார்கள் கிடைக்கின்றன. சமீபத்தில் மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவி கூட விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் கேமரா கண்களில் சிக்கியது மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார்... எப்போது அறிமுகம்?

இப்படி முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் ஆர்வமாக உள்ளன. இதில், இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியும் ஒன்று. வேகன் ஆர் எலெக்ட்ரிக் காருடன் (Maruti Suzuki Wagon R EV) தனது மின்சார வாகன பயணத்தை தொடங்க மாருதி சுஸுகி முடிவு செய்துள்ளது.

மீண்டும் கேமரா கண்களில் சிக்கியது மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார்... எப்போது அறிமுகம்?

இதுதான் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் எலெக்ட்ரிக் கார். இந்த சூழலில் ஹரியானா மாநிலம் குர்கானில் சாலை சோதனையில் ஈடுபடுத்தப்பட்டபோது, மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் தற்போது கேமரா கண்களில் சிக்கியுள்ளது. இதுகுறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மீண்டும் கேமரா கண்களில் சிக்கியது மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார்... எப்போது அறிமுகம்?

ஆனால் மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரின் ஸ்பை படங்கள் வெளியாவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாகவும் சாலை சோதனையில் இருந்த மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரின் ஸ்பை படங்கள் பல முறை வெளியாகியுள்ளன. மாருதி சுஸுகி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை நீண்ட காலமாவே சாலை சோதனையில் ஈடுபடுத்தி வருகிறது.

மீண்டும் கேமரா கண்களில் சிக்கியது மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார்... எப்போது அறிமுகம்?

மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக தற்போது வரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. என்றாலும் மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் கேமரா கண்களில் சிக்கியது மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார்... எப்போது அறிமுகம்?

ஆனால் ஆரம்பத்தில் வாடகை கார் நிறுவனங்களுக்கு மட்டுமே மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் இந்த எலெக்ட்ரிக் கார் தனிநபர் பயன்பாட்டு சந்தைக்கு வருவது சந்தேகம்தான். எனினும் குறைவான விலையில் கொடுக்க கூடிய நிலை ஏற்படும்போது, தனி நபர் பயன்பாட்டு சந்தைக்கும் மாருதி சுஸுகி கொண்டு வரும் என தெரிகிறது.

Most Read Articles

English summary
Maruti Suzuki Wagon R Electric Car Spied Once Again. Read in Tamil
Story first published: Saturday, November 14, 2020, 20:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X