விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி எக்ஸ்எல்6 கார்!

முதலாமாண்டு கொண்டாட்டத்துடன் சேர்த்து விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டி சாதித்துள்ளது மாருதி எக்ஸ்எல்-6 எம்பிவி கார். இதுகுறித்து கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி எக்ஸ்எல்6 கார்!

இந்தியாவின் எம்பிவி கார் மார்க்கெட்டில் மிகச் சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் மாடலாக மாருதி எர்டிகா பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், அதிக பிரிமீயம் அம்சங்கள், சொகுசான பயணத்தை விரும்பும் வாடிக்கையாளர்களை கவனத்தில் கொண்டு எர்டிகா அடிப்படையிலான புதிய எக்ஸ்எல்6 என்ற கார் மாடலை மாருதி களமிறக்கியது.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி எக்ஸ்எல்6 கார்!

விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடையும் நிலையில், வழக்கம்போல் எக்ஸ்எல்6 காருக்கும் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 25,000 எக்ஸ்எல்6 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி எக்ஸ்எல்6 கார்!

இந்தியாவின் பிரிமீயம் எம்பிவி கார் மார்க்கெட்டில் எக்ஸ்எல்6 கார் 14 சதவீத சந்தைப் பங்களிப்பை பெற்றுள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. எர்டிகா, ஈக்கோ, எக்ஸ்எல்6 கார்கள் மூலமாக எம்பிவி மார்க்கெட்டில் 51 சதவீத பங்களிப்பை வைத்துள்ளதாகவும் மாருதி தெரிவித்துள்ளது.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி எக்ஸ்எல்6 கார்!

மாருதி எர்டிகா காரிலிருந்து தனித்துவப்படுத்தும் விதத்தில் பல்வேறு சிறப்பு ஆக்ஸசெரீகள் மற்றும் சிறப்பம்சங்களுடன் இந்த கார் வந்தது. புதிய க்ரில் அமைப்பு, கருப்பு வண்ண அலாய் வீல்கள், பிரத்யேக ரூஃப் ரெயில்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்டுகள் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி எக்ஸ்எல்6 கார்!

இந்த காரின் மிக முக்கிய அம்சமாக இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், முழுமையான கருப்பு வண்ண இன்டீரீயர் இடம்பெற்றுள்ளதும் இதன் முக்கிய சிறப்பம்சமாக கூறலாம்.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி எக்ஸ்எல்6 கார்!

இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, ரியர் ஏசி வென்ட்டுகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி எக்ஸ்எல்6 கார்!

மாருதி எக்ஸ்எல்6 காரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி எக்ஸ்எல்6 கார்!

மாருதி எக்ஸ்எல்6 காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஸ்மார்ட் ஹைப்ரிட் சிஸ்டமும் உள்ளது. மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி எக்ஸ்எல்6 கார்!

மாருதி எக்ஸ்எல்6 கார் 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. ரூ.9.84 லட்சம் முதல் ரூ.11.51 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles

English summary
Maruti Suzuki XL6 registers over 25,000 units sold since its launch in the Indian market. The MPV was launched in August 2019 and is part of the brand's luxury Nexa dealership network. The XL6 has achieved a new sales milestone for Maruti Suzuki.
Story first published: Thursday, August 27, 2020, 19:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X