புதிய ஹூண்டாய் ஐ20 எஃபெக்ட்... வருகிறது புதிய பலேனோ மாடல்? அவசரமாக டீசரை வெளியிட்ட மாருதி!

புதிய ஹூண்டாய் ஐ20 கார் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், அதன் நெருக்கடியை சமாளிக்கும் விதத்தில் புதிய பலேனோ கார் மாடலை மாருதி களமிறக்க உள்ளதாக தெரிகிறது. இதற்காக டீசர் ஒன்றை இன்று அவசரமாக வெளியிட்டுள்ளது மாருதி சுஸுகி கார் நிறுவனம்.

புதிய ஹூண்டாய் ஐ20 எஃபெக்ட்... வருகிறது புதிய பலேனோ மாடல்? அவசரமாக டீசரை வெளியிட்ட மாருதி!

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மாருதி பலேனோ காருக்கும், ஹூண்டாய் ஐ20 காருக்கும் எப்போதுமே போட்டா போட்டி நிலவுகிறது. இந்த ரகத்தில் இந்த இரண்டு மாடல்கள்தான் விற்பனையில் முன்னிலை வகிக்கின்றன. இந்த நிலையில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் புதிய தளத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ள புதிய ஐ20 கார் நேற்று விற்பனைக்கு வந்தது.

புதிய ஹூண்டாய் ஐ20 எஃபெக்ட்... வருகிறது புதிய பலேனோ மாடல்? அவசரமாக டீசரை வெளியிட்ட மாருதி!

அசரடிக்கும் தொழில்நுட்ப வசதிகள், புதிய டிசைன் தாத்பரியங்கள் ஆகியவை ஐ20 காருக்கான வாடிக்கையாளர் தளத்தை வெகுவாக அதிகரிக்கும் என தெரிகிறது. அதற்கு தக்கவாறு புக்கிங் எண்ணிக்கையும் அமைந்துள்ளது. இதனால், இந்த ரகத்தில் முதலிடத்தில் இருக்கும் மாருதி பலேனோ காருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் ஐ20 எஃபெக்ட்... வருகிறது புதிய பலேனோ மாடல்? அவசரமாக டீசரை வெளியிட்ட மாருதி!

இந்த நெருக்கடியை போக்கிக் கொள்ளும் விதமாக, பலேனோ காரின் புதிய மாடலை களமிறக்க மாருதி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பலேனோ மீது விரைவில் பெரிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது என்ற வாசகத்துடன் டீசர் ஒன்றை மாருதி சுஸுகி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் ஐ20 எஃபெக்ட்... வருகிறது புதிய பலேனோ மாடல்? அவசரமாக டீசரை வெளியிட்ட மாருதி!

இந்த புதிய பலேனோ கார் மாடலானது ஸ்பெஷல் எடிசன் மாடலாகவோ அல்லது டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலாகவோ இருக்கலாம் என்று தெரிகிறது. ஏனெனில், டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடல் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதால், அதிக வாய்ப்பு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் ஐ20 எஃபெக்ட்... வருகிறது புதிய பலேனோ மாடல்? அவசரமாக டீசரை வெளியிட்ட மாருதி!

இதுதொடர்பாக, மாருதி கார் நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது தகவல்களை பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, தீபாவளிக்கு முன்னதாகவே புதிய மாடலை எதிர்பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் ஐ20 எஃபெக்ட்... வருகிறது புதிய பலேனோ மாடல்? அவசரமாக டீசரை வெளியிட்ட மாருதி!

பலேனோ காரின் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலில் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் எஞ்சின் பிஎஸ்6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வரும் வாய்ப்பு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் ஐ20 எஃபெக்ட்... வருகிறது புதிய பலேனோ மாடல்? அவசரமாக டீசரை வெளியிட்ட மாருதி!

மறுபுறத்தில் ஹூண்டாய், கியா நிறுவனங்கள் டீசல் கார்களை இறக்கி வருவதால், மாருதிக்கு கடும் நெருக்கடி உள்ளது. இதற்காக, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுடன் பலேனோ காரை கொண்டு வரும் வாய்ப்பும் இருக்கிறது. மாருதி கார் நிறுவனத்தின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 94 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

Most Read Articles

English summary
Maruti Suzuki has released new teaser for new baleno model ahead of reveal in India.
Story first published: Friday, November 6, 2020, 17:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X