டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி பிரெஸ்ஸா பெயர் விபரம் வெளியானது

டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்து வர இருக்கும் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியின் பெயர் விபரம் வெளியாகி இருக்கிறது.

டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி பிரெஸ்ஸா பெயர் விபரம் வெளியானது

கார் உருவாக்கப் பணிகளுக்கான முதலீட்டை பெருமளவு குறைக்கும் விதத்தில், டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய நிறுவனங்கள் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. சுஸுகியின் அங்கமாக செயல்பட்டு வரும் மாருதி நிறுவனமும் டொயோட்டாவும் இணைந்து கார் உருவாக்கப் பணிகளில் மிச்சம் பிடிக்கும் முயற்சிகளில் இறங்கி உள்ளன.

டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி பிரெஸ்ஸா பெயர் விபரம் வெளியானது

இதன்படி, முதல் மாடலாக மாருதி பலேனோ கார் டொயோட்டா பிராண்டில் க்ளான்ஸா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காருக்கு மிகச் சிறப்பான வர்த்தகம் கிடைத்துள்ளது. இந்த உற்சாகத்துடன் இரண்டாவது மாடலை களமிறக்கும் முயற்சியில் மாருதி - டொயோட்டா கூட்டணி ஈடுபட்டுள்ளது.

டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி பிரெஸ்ஸா பெயர் விபரம் வெளியானது

இரண்டாவது மாடலாக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியானது டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த நிலையில், டொயோட்டா பிராண்டில் வர இருக்கும் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி பிரெஸ்ஸா பெயர் விபரம் வெளியானது

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் போன்று இது காம்பேக்ட் ரகத்தில் நகர்ப்புற பயன்பாட்டு மாடலாக வருவதால், இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. டொயோட்டா நிறுவனத்தின் எஸ்யூவி மாடல்கள் ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கு சிறந்ததாக இருக்கும்.

டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி பிரெஸ்ஸா பெயர் விபரம் வெளியானது

ஆனால், இந்த அர்பன் க்ரூஸர் மாடலானது இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக, நகர்ப்புற பயன்பாட்டை மனதில் வைத்து களமிறக்கப்பட உள்ளது. அதேநேரத்தில், டொயோட்டா லோகோ மற்றும் சிறிய அளவிலான டிசைன் மாற்றங்களுடன் தனித்துவம் பெற்றிருக்கும்.

டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி பிரெஸ்ஸா பெயர் விபரம் வெளியானது

ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் ஏற்கனவே ஒரு மாடலை டொயோட்டா விற்பனை செய்து வந்துள்ளது. இதே பெயர் தற்போது இந்திய எஸ்யூவி மாடலில் பயன்படுத்தப்பட இருக்கிறது.

டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி பிரெஸ்ஸா பெயர் விபரம் வெளியானது

மாருதி பிரெஸ்ஸா ரீபேட்ஜ் மாடலில் பிஎஸ்6 தரமுடைய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் மாடலில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்படும் வாய்ப்புள்ளது.

டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி பிரெஸ்ஸா பெயர் விபரம் வெளியானது

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 17.03 கிமீ மைலேஜையும், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 18.76 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்பட்டது. இதே மைலேஜ் அளவுடன் டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியும் விற்பனைக்கு வரும்.

டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி பிரெஸ்ஸா பெயர் விபரம் வெளியானது

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 16 அங்குல சக்கரங்கள், எல்இடி டெயில் லைட்டுகள், இரட்டை வண்ணத் தேர்வு ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக எதிர்பார்க்கலாம்.

டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி பிரெஸ்ஸா பெயர் விபரம் வெளியானது

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் 7.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்கிறது. இதே யூனிட்தான் டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது.

டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி பிரெஸ்ஸா பெயர் விபரம் வெளியானது

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி பெட்ரோல் மாடலில் மட்டுமே கிடைக்கிறது ரூ.7.34 லட்சம் முதல் ரூ.11.40 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையை ஒட்டியே டொயோட்டா அர்பன் க்ரூஸர் விலையும் நிர்ணயிக்கப்படும். ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 28, 2020, 11:13 [IST]
English summary
Japanese car maker, Toyota is working on Maruti Vitara Brezza based new compact SUV for India and is likely to be called ‘Urban Cruiser’.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+