புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்!

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து படிக்கலாம்.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்!

கடந்த 5ந் தேதி கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ திருவிழா துவங்கியது. இந்த ஆட்டோ எக்ஸ்போவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாடல்களில் ஒன்று மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார். இந்த நிலையில், அனைவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் புதிய பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருப்பதுடன், வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்பட்ட மாடலாக வந்துள்ளது.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்!

எனினும், விலை அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், வரும் 15ந் தேதி மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் முதன்மையான தேர்வாக இருந்து வரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி இப்போது பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் மதிப்பை கூட்டி க் கொண்டுள்ளது. இதுவரை பயன்படுத்தப்பட்ட 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக 1.5 லிட்டர் பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட இருக்கிறது.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்!

இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது. மைல்டு ஹப்ரிட் சிஸ்டம் கொண்ட வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும்.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்!

பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 17.03 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட மாடல் லிட்டருக்கு 18.76 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்!

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. புதிய 10 ஸ்போக் டியூவல் டோன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்!

உட்புறத்திலும் பல மாறுதல்களுடன் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது. இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரை கொண்ட புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை இந்த சிஸ்டம் சப்போர்ட் செய்யும்.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்!

கீ லெஸ் என்ட்ரி, ஸ்டார்ட் - ஸ்பாட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் வசி, மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் ஆகியவை உள்ளன. இந்த காரில் இரண்டு ஏர்பேக்குகள் மற்றும் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்!

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடலின் விலை சற்று கூடுதலாக நிர்ணயிக்கப்படும். ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 11, 2020, 16:16 [IST]
English summary
Maruti Suzuki is all set to launch Vitara Brezza facelift model in India on February, 15.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+