விட்டாரா பிரெஸ்ஸாவை மதிப்பை கூட்டும் புதிய நுட்பத்தை கையில் எடுத்த மாருதி!

வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வையும், மதிப்பையும் வழங்கும் விதத்தில் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் புதிய தொழில்நுட்ப வசதியை வழங்குவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது.

விட்டாரா பிரெஸ்ஸாவை மதிப்பை கூட்டும் புதிய நுட்பத்தை கையில் எடுத்த மாருதி!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிதான் நம்பர்-1 மாடலாக இருந்து வருகிறது. ஆனால், சந்தைப் போட்டி மிக கடுமையாக இருப்பதால், விட்டாரா பிரெஸ்ஸாவின் மதிப்பை கூட்டுவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து மாருதி கவனம் செலுத்தி வருகிறது.

விட்டாரா பிரெஸ்ஸாவை மதிப்பை கூட்டும் புதிய நுட்பத்தை கையில் எடுத்த மாருதி!

அந்த வகையில், பிஎஸ்6 தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், வடிவமைப்பில் சிறிய மாற்றங்களுடன் மெருகு ஏற்றப்பட்டது.

விட்டாரா பிரெஸ்ஸாவை மதிப்பை கூட்டும் புதிய நுட்பத்தை கையில் எடுத்த மாருதி!

அத்துடன், எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம் என பல சிறப்பம்சங்களுடன் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விற்பனைக்கு களமிறக்கப்பட்டது.

விட்டாரா பிரெஸ்ஸாவை மதிப்பை கூட்டும் புதிய நுட்பத்தை கையில் எடுத்த மாருதி!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டு வந்த 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு விடை கொடுக்கப்பட்டு புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்6 தரத்திற்கு இணையாக வந்தது. இந்த எஞ்சின் 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேலும், இந்த பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

விட்டாரா பிரெஸ்ஸாவை மதிப்பை கூட்டும் புதிய நுட்பத்தை கையில் எடுத்த மாருதி!

இந்த நிலையில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடலில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதனால், மேனுவல் கியர்பாக்ஸ் மாடலைவிட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலானது அதிக மைலேஜ் தரும் வகையில் உள்ளது. மேனுவல் மாடல் லிட்டருக்கு 17.03 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 18.76 கிமீ மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

விட்டாரா பிரெஸ்ஸாவை மதிப்பை கூட்டும் புதிய நுட்பத்தை கையில் எடுத்த மாருதி!

இந்த நிலையில், விட்டாரா பிரெஸ்ஸாவின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலிலும் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான ஆவணம் இந்தியன் ஆட்டோஸ்பிளாக் தளம் மூலமாக வெளியாகி இருக்கிறது. அப்படி வந்தால், கிட்டத்தட்ட லிட்டருக்கு 20 கிமீ என்ற அளவிற்கு மைலேஜை தரும் வகையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பெயர் பெறும்.

விட்டாரா பிரெஸ்ஸாவை மதிப்பை கூட்டும் புதிய நுட்பத்தை கையில் எடுத்த மாருதி!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவில் பயன்படுத்தப்பட்ட 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் அதிக நம்பிக்கையும், மிக அதிக எரிபொருள் சிக்கனத்தையும் வழங்க வல்லதாக இருந்தது. இந்த நிலையில், பிஎஸ்6 விதிகளால் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வந்துள்ள மாடலின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்களின் மைலேஜ் பழைய டீசல் மாடலைவிட குறைவாக இருக்கிறது.

விட்டாரா பிரெஸ்ஸாவை மதிப்பை கூட்டும் புதிய நுட்பத்தை கையில் எடுத்த மாருதி!

இதனை மனதில் வைத்து, விட்டாரா பிரெஸ்ஸா மேனுவல் மாடலை தற்போதைவிட அதிக எரிபொருள் சிக்கனம் தரும் வகையில் மேம்படுத்தி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது. இது மாருதி பிரியர்களுக்கும், பிரெஸ்ஸா வாங்க திட்டமிட்டிருப்போருக்கும் கூடுதல் மதிப்பையும், தேர்வையும் வழங்கும்.

Most Read Articles

English summary
According to report, Maruti Vitara Brezza petrol model will get manual gearbox with smart hybrid variant in India soon.
Story first published: Tuesday, April 7, 2020, 15:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X