பெருத்த ஏமாற்றத்தை வழங்கிய மாருதி வேகன்ஆர் மின்சார கார் கனவு... இப்படி செய்வாங்கனு எதிர்பார்க்கல!

மாருது சுசுகி நிறுவனத்தின் வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார்குறித்த கனவில் இருந்தவர்களுக்கு அந்த நிறுவனம் பெருத்த ஏமாற்றத்தை வழங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

பெருத்த ஏமாற்றத்தை வழங்கிய மாருதி வேகன்ஆர் மின்சார கார் கனவு... இப்படி செய்வாங்கனு எதிர்பார்க்கல!

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு நாளுக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை உறுதிச் செய்யும் வகையில் புதுமுக மின்வாகனங்களின் அறிமுக படையெடுப்பு தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றது. இதில், உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமின்றி சில வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களின் பங்காக மின் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

பெருத்த ஏமாற்றத்தை வழங்கிய மாருதி வேகன்ஆர் மின்சார கார் கனவு... இப்படி செய்வாங்கனு எதிர்பார்க்கல!

அந்தவகையில், டாடா நிறுவனம் அதன் பிரபல மாடலான நெக்ஸான் காரில் மின்சார வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இத்துடன், டியாகோ மற்றும் டிகோர் ஆகிய மாடல்களிலும் மின்சார கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றது. இதன் தொடக்கமாக ஏற்கனவே வணிக சந்தையில் இதன் விற்பனையை டாடா தொடங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

பெருத்த ஏமாற்றத்தை வழங்கிய மாருதி வேகன்ஆர் மின்சார கார் கனவு... இப்படி செய்வாங்கனு எதிர்பார்க்கல!

இதேபோன்று, ஹூண்டாய் நிறுவனமும் புதிய மின்சார வாகனமாக கோனா காரை அறிமுகம் செய்துள்ளது. இவ்வாறு, நாட்டில் ஜாம்பவான்களாக திகழும் இரு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கியுள்ள நிலையில் இவற்றின் போட்டி நிறுவனமாக இருந்து வரும் மாருதி சுசுகி நிறுவனம் இன்னும் மின்சார வாகனத்தை எந்தவொரு பயன்பாட்டிற்கும் அறிமுகம் செய்யாமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றது.

பெருத்த ஏமாற்றத்தை வழங்கிய மாருதி வேகன்ஆர் மின்சார கார் கனவு... இப்படி செய்வாங்கனு எதிர்பார்க்கல!

மாருதி சுசுகியின் இந்த நிலை அதன் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வருகின்றதே என்றே கூறலாம். ஆம், பலர் மாருதி சுசுகி நிறுவனத்தின் மின்சார தயாரிப்பிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கேற்ப விரைவில் மாருதி நிறுவனம் வேகன்ஆர் மாடலிலான மின்சார காரை அறிமுகம் செய்ய இருப்பதாக அண்மைக் காலாங்களாக தகவல் வெளியாகி வந்தன. இதனால் மாருதி ரசிகர்கள் சற்றே மன நிம்மதியில் ஆழ்ந்திருந்தனர்.

பெருத்த ஏமாற்றத்தை வழங்கிய மாருதி வேகன்ஆர் மின்சார கார் கனவு... இப்படி செய்வாங்கனு எதிர்பார்க்கல!

அதேசமயம், மாருதி வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் வணிக சந்தையில் மட்டுமே களமிறக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன. அரசல் புரசலாக வெளியாகிக் கொண்டிருந்த இந்த தகவலை உறுதிச் செய்கின்ற வகையில் வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் வணிக சந்தையில் மட்டுமே களமிறக்க இருப்பதாக உறுதி வாய்ந்த தகவல் வெளியாகியுள்ளது.

பெருத்த ஏமாற்றத்தை வழங்கிய மாருதி வேகன்ஆர் மின்சார கார் கனவு... இப்படி செய்வாங்கனு எதிர்பார்க்கல!

அதேசமயம், வணிக ரீதியாக இயங்கக்கூடிய நிறுவனங்கள் மற்றும் வாடகை வாகன சேவைகளுக்கு மட்டும் முதல்கட்டமாக அழை விற்பனைக்கு வழங்கப்பட இருப்பதாக அந்த தகவல் கூறியிருக்கின்றது. மாருதி நிறுவனத்தின் இந்த கூற்றால் அதன் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்தை தழுவியிருக்கின்றனர்.

பெருத்த ஏமாற்றத்தை வழங்கிய மாருதி வேகன்ஆர் மின்சார கார் கனவு... இப்படி செய்வாங்கனு எதிர்பார்க்கல!

அதேநேரத்தில் மாருதி நிறுவனத்தின் இந்த தயக்கத்திற்கு ஓர் தகுந்த காரணம் இருக்கின்றது. தற்போது இந்தியாவில் மின்சார வாகனங்கள் பெயரளவில் மட்டுமே விற்பனையாகி வருகின்றது. இதற்கு மின் வாகனங்களின் உயர்ந்த விலை மற்றும் போதிய கட்டமைப்பு வசதி இல்லாததே முக்கிய காரணமாக இருக்கின்றது.

பெருத்த ஏமாற்றத்தை வழங்கிய மாருதி வேகன்ஆர் மின்சார கார் கனவு... இப்படி செய்வாங்கனு எதிர்பார்க்கல!

அரசு தரப்பில் மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டாலும், அதனை வாங்கிய பின்னர் தங்குதடையின்றி பயன்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கு சார்ஜிங் நிலையத்தின் பற்றாக்குறையே முக்கிய காரணணம். இந்த நிலையில் வேகன்ஆர் மின்சார காரை களமிறக்குவது பயனளிக்காது என்பதை உணர்ந்தே மாருதி நிறுவனம் இத்தகைய நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றது.

பெருத்த ஏமாற்றத்தை வழங்கிய மாருதி வேகன்ஆர் மின்சார கார் கனவு... இப்படி செய்வாங்கனு எதிர்பார்க்கல!

இருப்பினும், மாருதி சுசுகி நிறுவனம் தற்போது மின்சார வாகனங்களின்றி மற்று பசுமை வாகனங்களான சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. உலகெங்கிலும் மின்சார வாகனங்களுக்கு இணையாக சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவேதான், தனது முழு சக்தியையும் தற்போது அந்த வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் மாருதி காட்டி வருகின்றது.

பெருத்த ஏமாற்றத்தை வழங்கிய மாருதி வேகன்ஆர் மின்சார கார் கனவு... இப்படி செய்வாங்கனு எதிர்பார்க்கல!

தற்போது மாருதி சுசுகி நிறுவனம், அதன் பிரபல மாடல்களான ஆல்டோ, வேகன்ஆர், ஈகோ, எர்டிகா, டூர் எஸ் மற்றும் சூப்பர் கேரி ஆகிய மாடல்களில் சிஎன்ஜி வேரியண்டை இந்தியாவில் அறிமுகம் செய்து, விற்பனைச் செய்து வருகின்றது. இவற்றிற்கான வரவேற்பு இந்தியாவில் ஏகபோகம். குறிப்பிட்டு கூற வேண்டுமானால், இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் 2019-20 நிதியாண்டில் மில்லியனுக்கும் அதிகமான விற்பனையை எட்டி சாதனைப் படைத்துள்ளது.

பெருத்த ஏமாற்றத்தை வழங்கிய மாருதி வேகன்ஆர் மின்சார கார் கனவு... இப்படி செய்வாங்கனு எதிர்பார்க்கல!

இருப்பினும், வேகன்ஆர் மின்சார காரின்மீது பலருக்கு ஒரு கண்ணாகவே உள்ளது. அப்படி என்னதான் இருக்கு அந்த காரில் என உங்களிடம் கேள்வியெழும்பலாம். அதுகுறித்த தகவல் பின்வருமாறு...

இந்த காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஸ்டியரிங் வீல் மவுண்டட் கன்ட்ரோல்கள், ஆட்டோமேட்டிக் ஏர் கன்டிஷனர், 7 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெருத்த ஏமாற்றத்தை வழங்கிய மாருதி வேகன்ஆர் மின்சார கார் கனவு... இப்படி செய்வாங்கனு எதிர்பார்க்கல!

இத்தகைய அம்சங்கள் இடம்பெற்றிருந்தால் யாருக்கு இதன்மீது ஆர்வம் இருக்காது. அதேசமயம், இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்ரை சப்போர்ட் செய்யும் வசதி இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும், இந்த காரில் ஒரு முழுமையான சார்ஜில் 130 கிமீ ரேஞ்ஜ் வழங்கும் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டிருப்பதகாவும் கூறப்படுகின்றது.

பெருத்த ஏமாற்றத்தை வழங்கிய மாருதி வேகன்ஆர் மின்சார கார் கனவு... இப்படி செய்வாங்கனு எதிர்பார்க்கல!

இந்தியர்கள் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியிருக்கும் இந்த கார் அதிகபட்சமாக ரூ. 8 லட்சங்கள் முதல் 12 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இது, 2021ம் ஆண்டிற்கான பின்னர் ஷோரூம்களில் காட்சியளிக்கலாம் என தெரிகின்றது. அதேசமயம், இந்தியாவில் போதிய சார்ஜிங் கட்டமைப்பு வந்த பின்னரே இக்கார் களமிறக்கப்படும் என்ற தகவலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது.

Most Read Articles
English summary
Maruti Wagon R EV Only For Commercial Segment. Read In Tamil.
Story first published: Saturday, June 6, 2020, 20:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X