சோதனையில் மாருதியின் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்... சந்தைக்கு எப்போது வருகிறது...?

2019 அக்டோபர் மாதத்தில் மாருதியின் எதிர்கால தயாரிப்பு மாடலான வேகன்ஆர் ஹேட்ச்பேக்கின் ப்ரீமியம் வெர்சனான எக்ஸ்எல்5 மாடலின் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து தற்போது இந்த கார் இந்தியாவில் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் மாடலாக தயாரிக்கப்பட்டு வரும் இந்த காரின் இந்த சோதனையின் மூலம் கிடைத்துள்ள தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

சோதனையில் மாருதியின் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்... சந்தைக்கு எப்போது வருகிறது...?

இந்த ஆண்டிற்காக மாருதி நிறுவனத்தில் இருந்து எந்தவொரு எலக்ட்ரிக் காரின் அறிமுகமும் ஒதுக்கப்படாத நிலையில் இவி காரின் இந்த சோதனை ஓட்ட புகைப்படங்கள் ஜிக்வீல்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களின் மூலம் பார்க்கும்போது புதிய எக்ஸ்எல்5 மாடல் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது.

சோதனையில் மாருதியின் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்... சந்தைக்கு எப்போது வருகிறது...?

இருப்பினும் சில காஸ்மெட்டிக் மாற்றங்களை இந்த கார் நிச்சயம் ஏற்றிருக்கும். வேகன்ஆர் இவி மாடல் தற்போதைய வேகன்ஆர் மாடலின் தோற்றத்தில் தான் உள்ளது. அதேபோல் கேபினின் தோற்றத்திலும் எந்தவொரு மாற்றமும் கொண்டுவரப்பட்டுள்ளதுபோல் தெரியவில்லை.

MOST READ: தாயுடன் வந்த மகன்... புது மாப்பிள்ளைபோல் மாலை அணிவித்து கவுரவித்த போலீஸ்... ஏன் தெரியுமா?

சோதனையில் மாருதியின் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்... சந்தைக்கு எப்போது வருகிறது...?

இதனால் வேகன்ஆர் மாடலின் எலக்ட்ரிக் வெர்சனிலும் 7.0 தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் க்ளைமேட் கண்ட்ரோல் ஏர்கான் யூனிட் போன்றவை தொடர்ந்திருக்கும். ஆனால் பிளவுப்பட்ட ஹெட்லேம்ப் அமைப்பு, நேர்த்தியான க்ரில் மற்றும் சிறிய அளவிலான மாற்றங்களுடன் பின்புற பகுதி உள்ளிட்டவற்றை இதன் எலக்ட்ரிக் வெர்சனில் எதிர்பார்க்கலாம்.

MOST READ: நடுரோட்டில் தீப்பிடித்த கார்... போலீஸாரால் மயிரிழையில் காப்பாற்றப்பட்ட கல்யாண மாப்பிள்ளை

சோதனையில் மாருதியின் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்... சந்தைக்கு எப்போது வருகிறது...?

இந்த ஸ்பை படங்களின் மூலம் வேகன்ஆர் இவி மாடலில் 15-இன்ச் அலாய் சக்கரங்கள் இக்னிஸ் மாடலில் இருந்து பெறப்பட்டிருப்பது தெரிய வருகிறது. தற்சமயம் சந்தைப்படுத்தப்பட்டிருக்கும் வேகன்ஆர் ஹேட்ச்பேக் மாடலில் மாருதி நிறுவனம் கே12பி 1.2 லிட்டர் என்ஜினை பொருத்தி வருகிறது.

சோதனையில் மாருதியின் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்... சந்தைக்கு எப்போது வருகிறது...?

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 81 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

MOST READ: கியா, எம்ஜி-ஐ தொடர்ந்து இந்தியாவில் நுழைய வரிசைக்கட்டி நிற்கும் நிறுவனங்கள்...

சோதனையில் மாருதியின் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்... சந்தைக்கு எப்போது வருகிறது...?

இதன் இவி வெர்சனான எக்ஸ்எல்5 மாடலில் பொருத்தப்படவுள்ள எலக்ட்ரிக் மோட்டார் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் நமக்கு தெரிந்தவரை தற்போதைய ட்ரெண்ட்டிற்கு ஏற்ற விதத்தில் எலக்ட்ரிக் மற்றும் எரிபொருள் என்ஜின் என இரு விதமான வெர்சன்களில் இந்த இவி கார் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம்.

MOST READ: அம்பானியிடமே இல்லாத சொகுசு கார்கள்.. வெளிநாடுகளில் கொடிகட்டி பறக்கும் 3 இந்தியர்களின் சொகுசு கார்!

சோதனையில் மாருதியின் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்... சந்தைக்கு எப்போது வருகிறது...?

எக்ஸ்எல்5/வேகன்ஆர் இவி காரின் இந்திய அறிமுகம் அதன் அதிகப்படியான உருவாக்க செலவினாலும், நம் நாட்டில் இவி கார்களுக்கான உள்கட்டமைப்பு பாகங்களின் குறைப்பாட்டாலும் தொடர்ந்து தாமாதமாகி கொண்டே வருகிறது. இதனால் இதன் அறிமுகம் 2021ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கலாம் என தெரிகிறது. தற்போதைய வேகன்ஆர் மாடல் ரூ.4.46 லட்சத்தில் இருந்து ரூ.5.95 லட்சம் வரையில் எக்ஸ்ஷோரூமில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Most Read Articles

English summary
Maruti Suzuki’s Upcoming EV Hatchback Continues Testing
Story first published: Wednesday, May 6, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X