அதிசக்திவாய்ந்த 2 எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குகிறது மஸேரட்டி!

உயர் வகை கார் தயாரிப்பில் உலகின் மிகவும் பிரபலமான இத்தாலியை சேர்ந்த மஸேரட்டி கார் நிறுவனம் இரண்டு பிரிமீயம் வகை எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது.

அதிசக்திவாய்ந்த 2 எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குகிறது மஸேரட்டி!

பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, பெரு நிறுவனங்கள் வாகன புகையால் மூச்சுத் திணறி வருகின்றன. இந்த சூழலில், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக, புகையில்லா வாகனங்களை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

அந்த வகையில், இத்தாலியை சேர்ந்த மஸேரட்டி கார் நிறுவனமும் மின்சார கார் தயாரிப்பில் இறங்கி உள்ளது. மேலும், அடுத்த ஆண்டு இரண்டு புதிய மின்சார கார்களுடன் சந்தையை கலக்க ஆயத்தமாகி வருகிறது.

அதிசக்திவாய்ந்த 2 எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குகிறது மஸேரட்டி!

இதன்படி, கிரான்டூரிஷ்மோ மற்றும் கிரான்கேப்ரியோ கார்களின் மின்சார வெர்ஷன்களை அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வர மஸேரட்டி திட்டமிட்டுள்ளது. இந்த கார்களுக்காக 800 மில்லியன் யூரோவை மஸேரட்டி முதலீடு செய்துள்ளது. அந்நிறுவனத்தின் மிராபியோரி வாகன உற்பத்தி ஆலையில் இந்த கார்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

அதிசக்திவாய்ந்த 2 எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குகிறது மஸேரட்டி!

அடுத்த ஆண்டுதான் உற்பத்தித் துவங்கபட உள்ளது. இதனிடையே, கிப்லி ஹைப்ரிட் கார் மாடலை பல்வேறு நாடுகளில் கொண்டு செல்லும் பணிகளிலும் மும்முரமாக இருக்கிறது மஸேரட்டி. இந்த கார் மாடலானது மொடெனா ஆலையில் உற்பத்தி செய்யப்படும்.

அதிசக்திவாய்ந்த 2 எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குகிறது மஸேரட்டி!

மஸேரட்டியின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களின் பேட்டரி மற்றும் மின் மோட்டார்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த கார்களில் மூன்று மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கும்.

அதிசக்திவாய்ந்த 2 எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குகிறது மஸேரட்டி!

இந்த கார்களில்800V எலெக்ட்ரிக் சிஸ்டம் பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. மஸேரட்டி எலெக்ட்ரிக் கார்கள் 0 - 100 கிமீ வேகத்தை 2 வினாடிகளில் எட்டிவிடும் வாய்ப்பும் உள்ளது. மேலும், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், டார்க் வெக்டரிங் சிஸ்டம் போன்றவையும் இடம்பெற்றிருக்கும்.

அதிசக்திவாய்ந்த 2 எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குகிறது மஸேரட்டி!

இதைத்தொடர்ந்து, குவார்ட்ரோபோர்ட்டே எலெக்ட்ரிக் மாடல் 2022ம் ஆண்டிலும், லெவன்ட்ட எலெக்ட்ரிக் மாடல் 2023ம் ஆண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, தனது அனைத்து மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களையும் அடுத்த மூன்று ஆண்டுகளில் சந்தைக்கு கொண்டு வரும் திட்டத்தை அந்நிறுவனம் வைத்திருக்கிறது.

Most Read Articles
மேலும்... #மஸராட்டி #maserati
English summary
Italian luxury vehicle manufacturer Maserati has announced that its first two all-electric products will be the GranTurismo and GranCabrio models, and that they will be launched across the brand's global markets at some point next year.
Story first published: Saturday, July 18, 2020, 17:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X