ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதா..? வாகன நெரிசலில் நிலை தடுமாறிய தலைநகர்...

தலை நகரின் முக்கியமான சாலைகளில் ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான வாகனங்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதா..? வாகன நெரிசலில் நிலை தடுமாறிய தலைநகர்...

உலக நாடுகள் அனைத்திற்கும் ஒற்றை ஆளாக சவால் விடுத்து வருகின்றது உயிர் கொல்லி வைரஸ் கொரோனா. இதன் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் உலக நாடுகள் பல தத்தளித்து வருகின்றன. இதில், சிற்றரசுகள் முதல் வல்லரசு நாடுகள் வரை அடங்கும். குறிப்பாக, வைரசுக்கு எதிரான போரில் பல வளர்ந்த நாடுகளும்கூட பின்னடைவையேச் சந்தித்து வருகின்றன. இதற்கு மிக சிறந்த உதாரணம் அமெரிக்கா.

ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதா..? வாகன நெரிசலில் நிலை தடுமாறிய தலைநகர்...

வல்லரசு நாடுகள் மட்டுமின்றி மருத்துவத்துறையில் வளர்ச்சியைக் கண்ட நாடுகளும்கூட வைரசின் தாக்கத்தால் பேரழிவைச் சந்தித்திருக்கின்றன. இதற்கு பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் கோரமான நிலையே எடுத்துக்காட்டாக உள்ளது.

MOST READ: எலக்ட்ரிக் ஸ்கூட்டராக தனி அடையாளத்தை பெற்றுவரும் பஜாஜ் சேத்தக்... விற்பனையில் அமோகம்...

ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதா..? வாகன நெரிசலில் நிலை தடுமாறிய தலைநகர்...

இவ்வாறு, அபரிதமான வளர்ச்சியைக் கண்ட நாடுகளையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா, இந்தியா போன்ற வளர்ந்து வரும் மற்றும் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளை மட்டும் விட்டுவைக்குமா என்ன..? ஆரம்பத்தில் என்னமோ நூற்றுக்கணக்கில் மட்டுமே காணப்பட்ட வைரஸ் தொற்று தற்போது 19 ஆயிரத்தை தொட இருக்கின்றது.

ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதா..? வாகன நெரிசலில் நிலை தடுமாறிய தலைநகர்...

இன்றைய (ஏப்ரல் 21) நிலவரப்படி இந்த வைரசால் இந்தியாவில் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். மேலும், இதுவரை 590 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடாது என்பதற்காகவும், வைரஸ் தொற்றும் அதிகம் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 2.0 வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த தடையுத்தரவு கடந்த 14ம் தேதியில் இருந்து அமலில் இருக்கின்றது. வருகின்ற மே 3ம் தேதி வரை அமலில் இருக்கும்.

MOST READ: கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... கொத்து கொத்தாக தூக்கும் தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம்...

ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதா..? வாகன நெரிசலில் நிலை தடுமாறிய தலைநகர்...

ஆனால், இதுவும் முந்தைய ஊரடங்கைப் போல்தான், எப்போது வேண்டுமானாலும் நீட்டிக்கப்படலாம். ஏனென்றால் வரைசின் பரவும் தன்மை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதற்கு மக்களின் ஒத்துழையாமையே முக்கிய காரணமாக உள்ளது. தேசிய ஊரடங்கில் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியில் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதா..? வாகன நெரிசலில் நிலை தடுமாறிய தலைநகர்...

ஆனால், பெரும்பாலானோர் சில தேவையற்ற காரணங்களுக்காகவும் வெளியில் சுற்றி திரிந்த வண்ணம் இருக்கின்றனர். இம்மாதிரியானவர்களால் அரசின் நோக்கம் சீர்குலைவதுடன், வைரஸ் தொற்று அதிகரிக்கும் அபாயமும் ஏற்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தலைநகர் டெல்லியில், வழக்கத்திற்கு மாறான வாகன நெரிசல் சம்பவம் கடந்த ஞாயிறன்று ஏற்பட்டிருக்கின்றது. இதுகுறித்த புகைப்படங்களை டுவிட்டர் பயனர்கள் சிலர் டுவிட்டுகளின் வாயிலாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

MOST READ: எம்டி-15 பைக்கின் வெள்ளை நிறத்தில் தயாராகும் 2020 யமஹா எஃப்இசட்25 மற்றும் எஃப்இசட்எஸ்25...

ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதா..? வாகன நெரிசலில் நிலை தடுமாறிய தலைநகர்...

இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 2 சதவீதம் பேர் டெல்லியில்தான் வசித்து வருகின்றனர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரும் 12 சதவீதம் தலை நகரில்தான் இருக்கின்றனர். இம்மாதிரியான சூழ்நிலையில் மக்கள் பலர் சமூக அக்கறையின்றி செயல்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, புகைப்படத்தில் காணப்படும் வாகன நெரிசல் போலீஸாரின் பரிசோதனையின்போது ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதா..? வாகன நெரிசலில் நிலை தடுமாறிய தலைநகர்...

இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டிலும் பேரதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை நிலவரப்படி தலை நகர் டெல்லியில் மட்டும் 110பேர் புதிதாக கொரோனா தொற்றுடையவர்களாக கண்டறியப்பட்டனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால், பாதிப்படைந்தவர்களின் 2003ஆக உயர்ந்தது. இதுமட்டுமின்றி, வைரஸ் தொற்றால் இதுவரை 45 பேர் அங்கு உயிரிழந்திருக்கின்றனர்.

MOST READ: பிரபலமான சுசுகி ஜிம்னி காருக்கு வயது 50... இந்த காரில் அப்படி என்ன தான் உள்ளது..?

ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதா..? வாகன நெரிசலில் நிலை தடுமாறிய தலைநகர்...

இவ்வாறு நகரம் முழுவதும் அதிக ஆபத்து நிலவுகின்ற சூழ்நிலையிலும் மக்கல் வீதியில் சுலபமாக நடமாடி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சில ஆராய்ச்சி வல்லுநர்கள், வரும் நாட்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் கூறப்பட்டு வரும் வேலையில், டெல்லியில் அரங்கேறியிருக்கும் சம்பவம் சற்றே கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதா..? வாகன நெரிசலில் நிலை தடுமாறிய தலைநகர்...

இம்மாதிரியான சூழ்நிலையில் மருத்துவர் அல்லது சுகாதாரப்பணியாளர்கள் யாரேனும் சிக்கினால் நிலைமை என்னவாகும் என்பதும் சமூக வலைதளவாசிகளின் கேள்வியாக உள்ளது.

இதேபோன்று நிலைமைதான் நாட்டின் பல பகுதிகளில் நிலவுகின்றது. இதனால், போலீஸார் கண்கானிப்பை நிறுத்திவிட்டனரா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Massive Traffic On Delhi Roads. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X