ஜெட் விமானத்துடன் போட்டியிட்ட மெக்லாரன் சூப்பர் கார்... நீங்கள் எதிர்பார்க்காத ஆச்சரிய பதில் -வீடியோ

ஜெட் விமானத்துடன், மெக்லாரன் நிறுவனத்தின் ஸ்பீடுடெயில் கார் போட்டியிடுவதைப் போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இந்த போட்டியில் எது வெற்றிப் பெற்றது என்பதுகுறித்த சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஜெட் விமானத்துடன் போட்டியிட்ட மெக்லாரன் சூப்பர் கார்... நீங்கள் எதிர்பார்க்காத ஆச்சரிய பதில்.. வீடியோ!

காருக்கும், காருக்கும் பந்தயம் நடப்பது, பைக்கிற்கும் பைக்கிற்கும் பந்தயம் நடப்பது இவையிரண்டையும் நாம் வீடியோவாகவோ அல்லது நேரிலோ பார்த்திருக்கக்கூடும். ஏன், சில நேரங்களில் பைக்கிற்கும், காருக்கும்கூட போட்டி நடப்பதைக்கூட நாம் பார்த்திருப்போம். ஆனால், காருக்கும் ஜெட் விமானத்திற்கும் இடையே போட்டி நிகழ்வதை நம்மில் பலர் பார்த்திருக்க முடியாது. இது அபூர்வமான ஒன்றாகவே தற்போது வரை இருக்கின்றது.

ஜெட் விமானத்துடன் போட்டியிட்ட மெக்லாரன் சூப்பர் கார்... நீங்கள் எதிர்பார்க்காத ஆச்சரிய பதில்.. வீடியோ!

இந்நிலையில், காரும்-ஜெட் விமானம் ஒன்றும் பந்தயம் செய்வதைப் போன்ற காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. பொதுவாக ஓட்ட பந்தயத்தை வாகனத்தின் திறமையை கண்டறியும் விதமாக பலர் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும், உன்னுடைய வாகனம் திறன் அதிகம் வாய்ந்ததா, இல்லை என்னுடையது அதிக திறன் கொண்டதா என்பதை வெளிக்கொணரும் வகையிலேயே அவர்கள் இவ்வாறு போட்டியை செய்து வருகின்றனர்.

ஜெட் விமானத்துடன் போட்டியிட்ட மெக்லாரன் சூப்பர் கார்... நீங்கள் எதிர்பார்க்காத ஆச்சரிய பதில்.. வீடியோ!

அந்தவகையிலேயே எது அதிக திறன் கொண்டது என்கிற ஆய்வை மேற்கொள்ளும் விதமாக கார் மற்றும் ஜெட் விமானம் போட்டியைச் சந்தித்திருக்கின்றன. இவையிரண்டும் வெவ்வேறு விதமான எஞ்ஜின்களைக் கொண்டவை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதாவது, போட்டியைச் சந்தித்திருக்கும் காரில் ஹைபர் எஞ்ஜினும், ஜெட் விமானத்தில் ஏர் கிராஃப்டுகளுக்கான எஞ்ஜினும் இருக்கின்றன.

ஜெட் விமானத்துடன் போட்டியிட்ட மெக்லாரன் சூப்பர் கார்... நீங்கள் எதிர்பார்க்காத ஆச்சரிய பதில்.. வீடியோ!

இவையிரண்டிற்கும் இடையே போட்டியா., சற்று பொருத்தமில்லாததாக இருக்கே என்று நம்மில் பலருக்கு தோன்றலாம். ஆனால், ஹைபர் எஞ்ஜின்கள் ஜெட் விமானங்களின் திறனுக்கு சற்றும் சலைத்தது அல்ல என்பதை நாம் இங்கு தெரிந்து கொள்ள வேண்டும். இவை சில நொடிகளிலேயே 0-த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை எட்டும் திறன் கொண்டவையாக இருக்கின்றன.

ஜெட் விமானத்துடன் போட்டியிட்ட மெக்லாரன் சூப்பர் கார்... நீங்கள் எதிர்பார்க்காத ஆச்சரிய பதில்.. வீடியோ!

இந்த ஓர் காரணத்தினாலயே ஜெட் விமானத்துடன் ஹைபர் எஞ்ஜினைக் கொண்ட கார் பந்தயத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த பந்தயத்தில் மெக்லாரன் ஸ்பீட்டெயில் மற்றும் எஃப்35 ஃபைட்டர் ஜெட் ரக விமான மோதியிருக்கின்றன. இவை போட்டி செய்யும் வீடியோவை டாப் கியர் என்னும் யுடியூப் சேனல் வெளியிட்டுள்ளது.

ஜெட் விமானத்துடன் போட்டியிட்ட மெக்லாரன் சூப்பர் கார்... நீங்கள் எதிர்பார்க்காத ஆச்சரிய பதில்.. வீடியோ!

அந்த வீடியோவில், அழகிய படைப்புகளாக காட்சியளிக்கும் இரு விதமான வாகனங்களும், ஓட்ட பந்தயத்திற்கு தயாராக இருக்கும் வீரர்களைப் போல் ஒன்றை அடுத்து ஒன்றாக பக்கத்தில் நிற்கின்றன.

இதில், விமானம் ஜெயித்ததா அல்லது கார் ஜெயித்ததா என்பதை அறிந்துகொள்வதற்கு முன்பாக கார் மற்றும் விமானத்தைப் பற்றிய தகவலை அறிந்துகொள்வது அவசியமானதாக மாறியிருக்கின்றது.

ஜெட் விமானத்துடன் போட்டியிட்ட மெக்லாரன் சூப்பர் கார்... நீங்கள் எதிர்பார்க்காத ஆச்சரிய பதில்.. வீடியோ!

அழகின் மறு உருவமாக இருக்கும் மெக்லாரன் ஸ்பீடுடெயில் காரில் 4.0 லிட்டர் வி8 எஞ்ஜின் மற்றும் மின் மோட்டாரைப் பெற்றிருக்கின்றது. இவ்விரு எஞ்ஜின்களும் இணைந்து 1035 பிஎச் மற்றும் 1150 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

அதாவது, இந்த திறனானது மணிக்கு 0த்தில் இருந்து 299கிமீ என்ற வேகத்தை வெறும் 12.8 செகண்டுகளிலேயே தொடுவதற்கு உதவும்.

ஜெட் விமானத்துடன் போட்டியிட்ட மெக்லாரன் சூப்பர் கார்... நீங்கள் எதிர்பார்க்காத ஆச்சரிய பதில்.. வீடியோ!

இதேபோன்று, எஃப்35 ரக ஜெட் ஃபைட்டர் விமானம் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் பொறியியல் அம்சங்களைப் பெற்றிருக்கின்றது. அதுமட்டுமின்றி, இதன் எஞ்ஜின் ஒரு சக்திவாய்ந்த இயந்திரமாக இருக்கின்றது. இந்த திறனானது செங்குத்தாக விமானத்தை தரையிறக்கும் அளவிற்கு திறன் வாய்ந்ததாக இருக்கின்றது. மேலும், இந்த எஞ்ஜினானது அதிகபட்சமாக 2,000 கிமீ வேகத்தில் பறக்கும் திறனைக் கொண்டிருக்கின்றது.

ஜெட் விமானத்துடன் போட்டியிட்ட மெக்லாரன் சூப்பர் கார்... நீங்கள் எதிர்பார்க்காத ஆச்சரிய பதில்.. வீடியோ!

இந்த திறனை வைத்து பார்க்கையில் எப்படியும் ஏர்-கிராஃப்ட் தான் வெற்றி பெற்றிருக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆம், நீங்கள் நினைத்தது சரிதான். இந்த போட்டியில் எஃப்35 ரக ஜெட் ஃபைட்டர் விமானமே வெற்றி பெற்றது.

ஜெட் விமானத்துடன் போட்டியிட்ட மெக்லாரன் சூப்பர் கார்... நீங்கள் எதிர்பார்க்காத ஆச்சரிய பதில்.. வீடியோ!

அதேசமயம், இந்த விமானத்திற்கு மெக்லாரன் ஸ்பீட்டெயில் கார் கடுமையான டஃப் வழங்கியதை நாம் எந்தவொரு மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புகொண்டுதான் ஆகவேண்டும்.

போட்டி தொடங்கிய ஆரம்பத்தில் சீறி பாய்ந்த மெக்லாரன் ஸ்பீடுடெயில், எஃப்35 ரக ஜெட் ஃபைட்டர் விமானத்தை பின்னுக்கு தள்ளி மிக அதிக வேகத்தில் சென்றது.

ஜெட் விமானத்துடன் போட்டியிட்ட மெக்லாரன் சூப்பர் கார்... நீங்கள் எதிர்பார்க்காத ஆச்சரிய பதில்.. வீடியோ!

ஆனால், வெகு விரைவிலேயே ஜெட் விமானம் அதை நெருங்கியது. அதேசமயம், ஹைப்பர் காரை அது நெருங்க சில நொடிகள் கால தாமதம் ஆனது என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், அதி வேக பறக்கும் திறன், அதை வெற்றிப் பெற செய்திருக்கின்றது.

ஜெட் விமானத்துடன் போட்டியிட்ட மெக்லாரன் சூப்பர் கார்... நீங்கள் எதிர்பார்க்காத ஆச்சரிய பதில்.. வீடியோ!

இந்த வெற்றியில் கார் மற்றும் விமானத்திற்கு இடையே ஒரு சில நொடிகள் மட்டுமே இடைவெளியாக இருக்கின்றது. அது மிகப்பெரிய வித்தியாசமாக இல்லை. எனவே, இந்த போட்டியில் மெக்லாரன் கார் ஜெட் விமானத்தின் வேகத்திற்கு இணையானது என்பது தெரியவந்துள்ளது.

அதேசமயம், காற்றை கிழித்துக் கொண்டு செல்லும் விமானத்தின் தோற்றம் மற்றும் பறக்கும்போது அதீத திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜின் பவர் உள்ளிட்டவையே எஃப்35 ரக ஜெட் ஃபைட்டர் விமானத்தின் வெற்றிக்கு பின்னால் மறைந்திருக்கும் ரகசியமாக உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mclaren Speedtail Hypercar Competing With F35 B Fighter Jet - Video. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X