குறைவான விலையில் வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் செடான் கார்... ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!
இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. இதனை தக்க வைக்கும் விதமாக, வெவ்வேறு ரகத்தில் பல புதிய கார் மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் பட்ஜெட் விலையிலான புதிய செடான் கார் மாடலை அறிமுகப்படுத்த உள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் சொகுசு ஹேட்ச்பேக் காரின் அடிப்படையிலான செடான் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த கார் ஏ க்ளாஸ் லிமோசின் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இதுவரை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விலை குறைவான செடான் கார் மாடலாக இருந்து வரும் சிஎல்ஏ கார் மாடலைவிட விலை குறைவாக நிலைநிறுத்தப்பட இருக்கிறது. மேலும், சிஎல்ஏ செடான் காருக்கு மாற்றாகவே இது வர இருப்பதாகவும் தெரிகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் MFA என்ற கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான முக்கிய பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும்.

மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ காரைவிட இந்த கார் செடான் காருக்கு உரிய அனைத்து டிசைன் அம்சங்களையும் முழுமையாக பெற்றிருக்கிறது. எனவே, இடவசதியிலும் சிறப்பான மாடலாக இருக்கும்.

உட்புறமும் மிக வசீகரமாக இருக்கிறது. இந்த காரின் டேஷ்போர்டு இதர மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை போன்று இரண்டு திரைகளுடன் கூடிய அமைப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வாய்ஸ் கமாண்ட் வசதியுடன் வர இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரில் 2.0 லிட்டர் பிஎஸ்-6 பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் பயன்படுத்தப்படும். இந்த காரில் ஏழு ஏர்பேக்குகள், லேன் கீப் அசிஸ்ட் வசதி, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என பல பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

இந்த கார் இந்தியாவில் ஏஎம்ஜி ஏ 35 என்ற மாடலில் விற்பனைக்கு வர இருக்கிறது. ரூ.40 லட்சத்திற்கும் குறைவாக விலை நிர்யணம் செய்யப்படும். எனவே, இந்தியர்கள் மத்தியில் இந்த கார் பெரிய அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரும் ஜூன் மாதம் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் ஆடி ஏ3 கார் மாடலுடன் நேரடியாக போட்டி போடும். இந்த காரின் வருகை பல பணக்காரர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications








