அதிசெயல்திறன் மிக்க மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்திய கோடீஸ்வர கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 கூபே கார் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

அதிசெயல்திறன் மிக்க மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிசெயல்திறன் மிக்க சொகுசு கார்கள் ஏஎம்ஜி பிரிவின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான சி க்ளாஸ் சொகுசு செடான் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள சி 63 கூபே கார் இன்று மெர்சிடிஸ் - ஏஎம்ஜி பிராண்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதிசெயல்திறன் மிக்க மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காருக்கு ரூ.1.33 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதான் மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் சொகுசு கார் குடும்பத்தில் அதிக விலை கொண்ட மாடலாகவும் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

அதிசெயல்திறன் மிக்க மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த கார் ஏற்கனவே செடான் வடிவமைப்புடன் ஏஎம்ஜி பிராண்டில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது கூபே ரக வடிவமைப்பில் இந்தியர்களின் கைகளுக்கு சவால் கொடுக்க வந்துள்ளது. சி க்ளாஸ் கார் குடும்பத்தில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட இந்த மாடலானது வடிவமைப்பிலும், வசதிகளிலும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

புதிய எல்இடி பகல்நேர விளக்குகள், வலிமையான பானட், முன்புறத்தில் பெரிய ஏர் இன்டேக்குகளுடன் கூடிய பம்பர் அமைப்பு, 18 அங்குல அலாய் வீல்கள், டிஃபியூசர், நான்கு புகைப்போக்கி குழாய்கள் ஆகியவை இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன.

அதிசெயல்திறன் மிக்க மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 கூபே காரின் உட்புறத்தில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பக்கெட் இருக்கைகள், தட்டையான அடிப்பாகம் கொண்ட ஏஎம்ஜி ஸ்டீயரிங் வீல், கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட சென்ட்ரல் கன்சோல் ஆகியவை உட்புறத்தில் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

அதிசெயல்திறன் மிக்க மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் இரண்டு டர்போசார்ஜர்கள் கொண்ட 4.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 469 பிஎச்பி பவரையும், 650 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் ஏஎம்ஜி பிரிவின் விசேஷமான 9ஜி ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரின் எஞ்சின் சக்தி பின்புற சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது. மேலும், கம்போர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் ப்ளஸ், ரேஸ், ஸ்லிப்பரி மற்றும் இன்டிவியூஜுவல் என 6 விதமான டிரைவிங் மோடுகளும் வழங்கப்பட்டுள்ளது. சாலை நிலைகளுக்கு தக்கவாறும், அதிக செயல்திறனில் செலுத்துவதற்கு சூழல் ஒத்துழைக்கும்போதும் இந்த டிரைவிங் மோடுகளை பயன்படுத்த முடியும்.

அதிசெயல்திறன் மிக்க மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த சக்திவாய்ந்த கூபே ரக கார் 0 - 100 கிமீ வேகத்தை 4 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது. மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது. கோடீஸ்வர வாடிக்கையாளர்களை இந்த காரின் செயல்திறன் கவர்வதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 27, 2020, 16:28 [IST]
English summary
Mercedes-AMG has launched new C 63 performance coupe car in India priced at Rs.1.33 crore (Ex-showroom).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+