விலை குறைவான 2 புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்கள் எப்போது அறிமுகம்?

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் மற்றும் ஜிஎல்ஏ கார்கள் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளன என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

விலை குறைவான 2 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் எப்போது அறிமுகம்?

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏ க்ளாஸ் லிமோசின் மற்றும் ஜிஎல்ஏ கார்கள் வருகை இந்தியர்கள் மத்தியில் பல மாதங்களாக ஆவலை ஏற்படுத்தி உள்ளது. ஏ க்ளாஸ் லிமோசின் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்களில் விலை குறைவான செடான் மாடலாகவும், ஜிஎல்ஏ எஸ்யூவி விலை குறைவான மெர்சிடிஸ் பென்ஸ் மாடலாகவும் வர இருப்பதே முக்கிய காரணம்.

விலை குறைவான 2 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் எப்போது அறிமுகம்?

இந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த மாடல்கள் வருகை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.அதன்படி, இந்த ஆண்டின் நான்காவது காலாாண்டு காலத்தில் ( அக்டோபர் - டிசம்பர்) இடையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

விலை குறைவான 2 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் எப்போது அறிமுகம்?

கொரோனா பிரச்னை காரணமாக, இந்த இரண்டு விலை குறைவான மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் வருகையில் சற்றே தாமதம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. மார்க்கெட் நிலவரம் சற்று மேம்பட்டவுடனே இந்த கார்களை கொண்டு வருவதற்கும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

விலை குறைவான 2 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் எப்போது அறிமுகம்?

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் மற்றும் ஜிஎல்ஏ கார்கள் முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட உள்ளது. இதில், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மாடலானது இரண்டாம் தலைமுறை மாடலாக இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

விலை குறைவான 2 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் எப்போது அறிமுகம்?

மறுபுறத்தில் ஏ க்ளாஸ் செடான் லிமோசின் கார் மேம்பட்ட இடவசதி, சொகுசு அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை வசீகரிக்க உள்ளது. தற்போது விற்பனையில் உள்ள சிஎல்ஏ செடான் காருக்கு மாற்றாக இந்த புதிய மாடலை மெர்சிடிஸ் பென்ஸ் களமிறக்க உள்ளது.

விலை குறைவான 2 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் எப்போது அறிமுகம்?

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் செடான் கார் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. இதில், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 162 பிஎச்பி பவரையும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும்.

விலை குறைவான 2 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் எப்போது அறிமுகம்?

ஏ க்ளாஸ் செடான் காரின் ஏஎம்ஜி வெர்ஷன் ஏஎம்ஜி ஏ35 என்ற மாடலில் வர இருக்கிறது. இந்த பவர்ஃபுல் மாடலில் 2.0 லிட்டர் ட்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 305 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். ஏ க்ளாஸ் செடான் கார் ரூ.32 லட்சம் முதல் ரூ.40 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

விலை குறைவான 2 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் எப்போது அறிமுகம்?

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ செடான் கார் முந்தைய மாடலின் டிசைனிலிருந்து சற்று வேறுபாடுகளுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் MBUX என்ற இன்டர்ஃபேஸ் தொழில்நுட்பமும் இடம்பெற்றிருக்கும்.

விலை குறைவான 2 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் எப்போது அறிமுகம்?

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவியின் 200 வேரியண்ட்டில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 162 பிஎச்பி பவரை வழங்கும். 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 189 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 18, 2020, 12:30 [IST]
English summary
The Mercedes-Benz A-Class Limousine and the new-gen GLA India launch timelines have been revealed. Both the entry-level models from the brand are set to be launched sometime in the fourth quarter of 2020.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+