குறைவான விலையில் வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் செடான் காருக்கு முன்பதிவு துவங்கியது!

சொகுசு கார் மார்க்கெட்டில் அதகளப்படுத்த வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காருக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குறைவான விலையில் வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் செடான் காருக்கு முன்பதிவு துவங்கியது!

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்தான் விற்பனையில் நம்பர்-1 நிறுவனமாக இருந்து வருகிறது. தனது நம்பர்-1 இடத்தை தக்க வைப்பதற்காக, பல்வேறு ரகங்களில் புதிய கார் மாடல்களை தொடர்ந்து இந்திய சந்தையில் களமிறக்கி வருகிறது.

குறைவான விலையில் வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் செடான் காருக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த நிலையில், சாதாரண ரக கார்களை வைத்திருந்து சொகுசு கார் வாங்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வுகளை வழங்குவதற்கான முயற்சிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, தனது விலை குறைவான புதிய செடான் கார் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

குறைவான விலையில் வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் செடான் காருக்கு முன்பதிவு துவங்கியது!

இதற்காக, ஏ க்ளாஸ் லிமோசின் என்ற கார் மாடலை இந்தியாவில் களமிறக்க உள்ளது மெர்சிடிஸ் பென்ஸ். அண்மையில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. மிக விரைவில் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், இதற்கான முன்பதிவும் துவங்கப்பட்டு இருக்கிறது.

குறைவான விலையில் வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் செடான் காருக்கு முன்பதிவு துவங்கியது!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விலை குறைவான சொகுசு செடான் கார் மாடலாக விற்பனையில் இருக்கும் சிஎல்ஏ காரைவிட விலை குறைவாக இந்த கார் வர இருப்பதாக தெரிகிறது. மேலும், சிஎல்ஏ காருக்கு மாற்றாக நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது.

குறைவான விலையில் வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் செடான் காருக்கு முன்பதிவு துவங்கியது!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் மாடலானது பெட்ரோல், டீசல் மற்றும் ஏஎம்ஜி என மூன்று மாடல்களில் வர இருக்கிறது. இந்த காருக்கு ரூ.2 லட்சம் முன்பணத்துடன் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

குறைவான விலையில் வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் செடான் காருக்கு முன்பதிவு துவங்கியது!

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரில் எள்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி இண்டிகேட்டர்கள், கருப்பு வண்ண பில்லர், தாழ்வான பின்புற கூரை அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. 16 முதல் 19 அங்குல அளவில் அலாய் வீல்கள் தேர்வுக்கு கிடைக்கும். இந்த கார் 2,729 மிமீ வீல் பேஸ் நீளம் கொண்டதாக இருக்கிறது.

குறைவான விலையில் வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் செடான் காருக்கு முன்பதிவு துவங்கியது!

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் காரின் உட்புற வடிவமைப்பை இந்த செடான் மாடலிலும் அதிகம் பார்க்க முடிகிறது. தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

குறைவான விலையில் வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் செடான் காருக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த காரில் MBUX மல்டிமீடியா சிஸ்டம் இதன் முக்கிய விஷயமாக இருக்கும். ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும். வயர்லெஸ் சார்ஜர் வசதியும் உள்ளது.

குறைவான விலையில் வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் செடான் காருக்கு முன்பதிவு துவங்கியது!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

குறைவான விலையில் வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் செடான் காருக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த காரில் 7 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், லேன் கீப்பிங் அசிஸ்ட் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது.

குறைவான விலையில் வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் செடான் காருக்கு முன்பதிவு துவங்கியது!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் ரூ.40 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். எனவே, இந்த கார் மீது இப்போதே அதிக ஆவல் இருந்து வருகிறது. ஜூன் மாதம் முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது. ஆடி ஏ3 செடான் கார் மாடலுடன் நேரடியாக போட்டி போடும்.

Article Published On: Thursday, February 27, 2020, 12:36 [IST]
English summary
Mercedes-Benz India has officially announced the start of bookings for their new entry-level sedan, the A-Class Limousine in the market. The new Mercedes-Benz A-Class Limousine is now open for bookings in the country for an amount of Rs 2 lakh.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+