2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ63 ஃபேஸ்லிஃப்ட் கார்.. கார் என்று சொல்ல கூடாது.. கப்பல் என்று தான் சொல்லனும்

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ப்ராண்ட் அதன் இ63 ரேஞ்ச்சை புதிய ஃபேஸிஃப்ட் வெர்சன் காருடன் அப்டேட் செய்துள்ளது. இந்த வகையில் புதியதாக வெளிவந்துள்ள இ63 ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ63 ஃபேஸ்லிஃப்ட் கார்.. கார் என்று சொல்ல கூடாது.. கப்பல் என்று தான் சொல்லனும்

மெர்சிடிஸ் நிறுவனம் புதிய ஏஎம்ஜி இ63 ஃபேஸ்லிஃப்ட் காரை செயல்திறனில் எந்தவொரு சமரசமும் செய்து கொள்ளாமல் ஓட்டுனருக்கு கூடுதல் சவுகரியமாக கொண்டுவந்துள்ளது. இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் தோற்றம் உலகளாவிய சந்தைக்காக தற்போது வெளியிடப்பட்டிருந்தாலும், இந்திய சந்தைக்கு இன்னும் வரவில்லை.

2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ63 ஃபேஸ்லிஃப்ட் கார்.. கார் என்று சொல்ல கூடாது.. கப்பல் என்று தான் சொல்லனும்

தற்போது வெளியாகியுள்ள படங்களின் மூலம் பார்க்கும்போது, மெர்சிடிஸ்-ஏஎம்ஜி-ன் க்ளோபல் ஸ்போர்ட்ஸ்கார் ரேஞ்ச் உடன் அப்டேட் செய்யப்பட்ட இ63 மாடல் நெருக்கமான தோற்றத்தை பெற்றிருப்பது தெரிய வருகிறது.

2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ63 ஃபேஸ்லிஃப்ட் கார்.. கார் என்று சொல்ல கூடாது.. கப்பல் என்று தான் சொல்லனும்

இதன்படி பெரிய அளவிலான க்ரில் அமைப்பை ஏற்றுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் க்ரிப் மற்றும் என்ஜினிற்கான ஏர்ஃப்லோ என இரண்டையும் மேம்படுத்தும் விதமாக ஏரோடைனாமிக்ஸ் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த 2021 மாடலில் 4.0 லிட்டர் வி8 பைடர்போ என்ஜினை மெர்சிடிஸ் நிறுவனம் பொருத்தியுள்ளது.

2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ63 ஃபேஸ்லிஃப்ட் கார்.. கார் என்று சொல்ல கூடாது.. கப்பல் என்று தான் சொல்லனும்

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 603 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க் திறனை டாப்-லைனான எஸ் வெர்சனில் வெளிப்படுத்துகிறது. என்ஜின் ஆற்றலை அனைத்து சக்கரங்களுக்கும் வழங்க உதவும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.

2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ63 ஃபேஸ்லிஃப்ட் கார்.. கார் என்று சொல்ல கூடாது.. கப்பல் என்று தான் சொல்லனும்

காரின் டேம்பர்கள் மற்றும் சேசிஸில் மெர்சிடிஸ் நிறுவனம் அப்டேட் பணிகளை மேற்கொண்டுள்ளது. அதேபோல் டைனாமிக் என்ஜின் மௌண்ட்ஸும் இ63 எஸ் மாடலில் திருத்தியமைக்கப்பட்டுள்ளதால் அவை விரைவாகவே ட்ரைவிங் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் மாறிவிடும்.

2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ63 ஃபேஸ்லிஃப்ட் கார்.. கார் என்று சொல்ல கூடாது.. கப்பல் என்று தான் சொல்லனும்

இவை மட்டுமின்றி ட்ரைவ் ப்ரோகிராம்கள், ஆல்-வீல்-ட்ரைவ் சிஸ்டம்ஸ் மற்றும் இஎஸ்பி ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஏஎம்ஜி டைனாமிக் செலக்ட் சாஃப்ட்வேரும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் இ63 எஸ் மாடலில் வழங்கப்பட்டு வரும் ஏஎம்ஜி டைனாமிக்ஸ் ப்ளஸ் பேக்கேஜ் முதன்முதலாக இந்த மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டிற்கும் கூடுதல் தேர்வாக வழங்கப்பட்டுள்ளது.

2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ63 ஃபேஸ்லிஃப்ட் கார்.. கார் என்று சொல்ல கூடாது.. கப்பல் என்று தான் சொல்லனும்

இந்த ஏஎம்ஜி டைனாமிக்ஸ் ப்ளஸ் பேக்கேஜில் ரேஸ் ட்ரைவ் மோட் மற்றும் சறுக்கல் செயல்பாடு உள்ளிட்டவை அடங்கும். 0-விலிருந்து 100 kmph என்ற வேகத்தை 3.5 வினாடிகளில் அடைந்துவிடும் இ63 செடான் மாடலின் டாப் வேரியண்ட்டான எஸ் இந்த வேகத்தை 0.1 வினாடி முன்பே எட்டிவிடும்.

2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ63 ஃபேஸ்லிஃப்ட் கார்.. கார் என்று சொல்ல கூடாது.. கப்பல் என்று தான் சொல்லனும்

டிசைன் அமைப்பை பொறுத்தவரையில், புதிய இ63 செடான் மாடலானது ஏஎம்ஜி வரிசை கார்களுக்கே உண்டான ரேடியேட்டர் க்ரில் அமைப்பை செங்குத்தான 12 ஸ்லேட்களுடன் கொண்டுள்ளது. அதேநேரம் காரின் முன்புறத்தில் சற்று விரிவாக்கப்பட்ட மெர்சிடிஸ் ஸ்டார் லோகோவும் உள்ளது.

2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ63 ஃபேஸ்லிஃப்ட் கார்.. கார் என்று சொல்ல கூடாது.. கப்பல் என்று தான் சொல்லனும்

டிசைன் அமைப்பு குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார், பளிச்சிடும் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் அகலமான ட்ராக்கிற்காக முன்புறத்தில் பெரியதாக்கப்பட்ட 22மிமீ சக்கர அச்சுக்களை பெற்றுள்ளது. சக்கர அச்சு அமைப்பில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்டால் காரின் மொத்த செயல்திறன் மற்றும் ஏரோடைனாமிக்ஸ் மேம்படுத்தப்பட்டுள்ளது.

2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ63 ஃபேஸ்லிஃப்ட் கார்.. கார் என்று சொல்ல கூடாது.. கப்பல் என்று தான் சொல்லனும்

பின்புறத்தில் பளபளப்பான ப்ரேக் லைட்கள் மற்றும் மறு வடிவத்திலான விளக்கு கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவும் காரின் ஏரோடைனாமிக்ஸை மேம்படுத்த மெர்சிடிஸ் நிறுவனம் கொண்டுவந்துள்ள மாற்றமே ஆகும். இந்த கவசங்கள் கருப்பு நிறத்தில் சில்வர் ட்ரிம் ஸ்ட்ரிப் உடன் வழங்கப்பட்டுள்ளன.

2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ63 ஃபேஸ்லிஃப்ட் கார்.. கார் என்று சொல்ல கூடாது.. கப்பல் என்று தான் சொல்லனும்

மேலும் பின்பக்கத்தில் புதிய டிஃப்யூஸரும் காட்சியளிக்கிறது. ஸ்டாண்டர்ட் இ63 மாடலின் சக்கரங்கள் 19 இன்ச்சிலும், எஸ் வெர்சனில் 20 இன்ச்சிலும் பொருத்தப்பட்டுள்ளன. உட்புறத்தில் புதிய இ63 மாடல், மெர்சிடிஸ் இ-க்ளாஸ் ரேஞ்சில் உள்ள மற்ற ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்களை போன்ற மாற்றங்களை தான் ஏற்றுள்ளது.

2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ63 ஃபேஸ்லிஃப்ட் கார்.. கார் என்று சொல்ல கூடாது.. கப்பல் என்று தான் சொல்லனும்

இந்த வகையில் உட்புற கேபினில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களில் எம்பக்ஸ் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தின் லேட்டஸ்ட் வெர்சன் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் திரை உள்ளிட்டவை அடங்குகின்றன. இவை இரண்டிற்கும் பைஸ்போக் ஏஎம்ஜி திரை தேர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ63 ஃபேஸ்லிஃப்ட் கார்.. கார் என்று சொல்ல கூடாது.. கப்பல் என்று தான் சொல்லனும்

உட்புறத்தில் உள்ள புதிய ட்வின்-ஸ்போக் ஏஎம்ஜி பெர்ஃபார்மன்ஸ் ஸ்டேரிங் சக்கரமானது ஹாப்டிக் பின்னூட்டக் கட்டுப்பாடுகள் மற்றும் ‘ஹேண்ட்ஸ் ஆன்' சென்சார் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஹேண்ட்ஸ் ஆன் சென்சார் ஆனது இயக்கத்தின்போது ஓட்டுனரின் கைகள் ஸ்டேரிங் சக்கரத்தின் மீது இல்லாவிட்டால் முதலில் எச்சரிக்கையையும், பிறகு அவசரகால ப்ரேக்-ஐ தானாகவும் செயல்படுத்திவிடும்.

2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ63 ஃபேஸ்லிஃப்ட் கார்.. கார் என்று சொல்ல கூடாது.. கப்பல் என்று தான் சொல்லனும்

இந்த ஸ்டேரிங் உடன் 9-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷனை கட்டுப்படுத்தும் பெரிய அலுமினியம் பெடல்ஷிஃப்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இ63 மாடல் டாப் எஸ் வெர்சனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் நமது நாட்டு சந்தைக்கும், மெர்சிடிஸின் அடுத்த இந்திய அறிமுக மாடலான இ-க்ளாஸ் செடானிற்கு பிறகு வருகை தரலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, June 19, 2020, 20:30 [IST]
English summary
Mercedes-AMG E 63 S Facelift unveiled
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+