அசத்தும் அம்சங்களுடன் வருகிறது புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் !
அசத்தலான பல புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் சொகுசு கார் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காரின் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

உலக அளவில் அதிகம் விற்பனையாகும் சொகுசு கார் மாடல்களில் மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரும் ஒன்றாக இருந்து வருகிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையான சொகுசு கார் மாடல் என்ற பெருமையும் இந்த காருக்கு உண்டு. இந்த நிலையில், இந்த காரின் வலுவான வர்த்தக அடித்தளத்தை தக்க வைக்கும் விதத்தில், அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய இ க்ளாஸ் கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய பென்ஸ் இ க்ளாஸ் காரின் வருகையை உறுதிப்படுத்தி வாடிக்கையாளர் மத்தியில் ஆவலை அதிகரிக்கும் விதத்தில், டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த கார் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் மாற்றம் கண்டுள்ளது.

இந்த காரின் ஹெட்லைட் க்ளஸ்ட்டர், கண் புருவம் போன்ற எல்இடி பகல்நேர விளக்குகள், காரின் அழகை கூட்டும் விதத்தில் முகப்பை அலங்கரிக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் லோகோ ஆகியவை கவனத்தை ஈர்க்கின்றன.

காரின் பக்கவாட்டு டிசைனில் அதிக மாற்றங்கள் இல்லை. இந்த காரில் எல்இடி டெயில் லைட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், டெயில் க்ளஸ்ட்டர் அளவு கச்சிதமாக மாற்றம் செய்யப்பட்டு வசீகரமாக இருக்கிறது.

உட்புறத்திலும் அதிக மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உட்புற டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் இடம்பெறும் மிக பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் டேஷ்போர்டில் இடம்பெறும் என்று நம்பலாம்.

இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமானது MBUX தொழில்நுட்பமும் இந்த காரின் மிக முக்கிய அம்சமாக இருக்கும். இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமானது ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும்.

மேலும், 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், வென்டிலேட்டட் இருக்கைகள், ஏர் சஸ்பென்ஷன் ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரில் 8 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன்புற, பின்புற பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். இந்த எஞ்சின்களுடன் பிளக் இன் ஹைப்ரிட் தொழில்நுட்பமும் இடம்பெறும்.

தற்போதைய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் ரூ.59.08 லட்சம் முதல் ரூ.1.50 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








