இவ்ளோ ஃபாஸ்டா சார்ஜ் செய்ய முடியுமா? வெளியாகிய புதிய தகவல்... ஆச்சரியத்தில் மின்வாகன பிரியர்கள்!

புதிய தொழில்நுட்ப அப்கிரேஷன் வாயிலாக தனது முதல் புதுமுக மின்சார காரில் அதி வேகமாக சார்ஜாகும் திறனை பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இவ்ளோ ஃபாஸ்டா காரை சார்ஜ் செய்ய முடியுமா? வெளியாகிய புதிய தகவல்... ஆச்சரியத்தில் மின்சார வாகன பிரியர்கள்!

உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பென்ஸ், அண்மையில் இக்யூசி எனும் புதிய மாடல் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் மின்சார காராகும். இதுவே இந்த நிறுவனத்தின் முதல் மின்சார கார் மாடல். இந்த காரிலேயே வெகு வேகமாக சார்ஜேறும் வசதியை பென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இவ்ளோ ஃபாஸ்டா காரை சார்ஜ் செய்ய முடியுமா? வெளியாகிய புதிய தகவல்... ஆச்சரியத்தில் மின்சார வாகன பிரியர்கள்!

இதற்காக எக்ஸ்-ஃபேக்டரி வாட்டர்-கூல்ட் எனும் புதிய சார்ஜிங் தொழில்நுட்பத்தை அது பயன்படுத்தியுள்ளது. இதன் ஊடாகவே புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி மின்சார காரை வேகமாக சார்ஜ் செய்யும் வசதி பென்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இது 11kW வெளியேற்றத்தை (output) வழங்கும்.

இவ்ளோ ஃபாஸ்டா காரை சார்ஜ் செய்ய முடியுமா? வெளியாகிய புதிய தகவல்... ஆச்சரியத்தில் மின்சார வாகன பிரியர்கள்!

ஆகாவே, வீட்டில்வைத்து சார்ஜ் செய்தாலும்கூட பென்ஸ் இக்யூசி காரை மிக வேகமாக சார்ஜ் செய்ய முடியும். ஆகையால், வேகமாக சார்ஜ் செய்ய பொது சார்ஜ் நிலையங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிலை இக்காரின் பயனர்களுக்கு ஏற்படாது.

இவ்ளோ ஃபாஸ்டா காரை சார்ஜ் செய்ய முடியுமா? வெளியாகிய புதிய தகவல்... ஆச்சரியத்தில் மின்சார வாகன பிரியர்கள்!

அதாவது, 10 சதவீத சார்ஜ் அளவில் இருந்து நூறு சதவீத சார்ஜைப் பெற வெறும் 7.30 மணி நேரங்களே போதும் என கூறப்படுகின்றது. முன்னதாக இதற்கு 11 மணி நேரங்கள் தேவைப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. புதிய தொழில்நுட்ப வசதியின் காரணமாக சுமார் 4 மணி நேரங்கள் குறைந்துள்ளன. எனவேதான் புதிய தொழில்நுட்பம் வேகமான சார்ஜ் திறன் கொண்டது என கூறப்படுகின்றது.

இவ்ளோ ஃபாஸ்டா காரை சார்ஜ் செய்ய முடியுமா? வெளியாகிய புதிய தகவல்... ஆச்சரியத்தில் மின்சார வாகன பிரியர்கள்!

அதேசமயம், பொது அதி-வேக சார்ஜிங் நிலையங்களைப் பயன்படுத்தும்போது இக்காரை முழுமையாக சார்ஜ் செய்ய ஒரு சில மணி நேரங்களே போதுமானதாக உள்ளது. சி கிளாஸ் ரகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி காருக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இந்தியாவில் இப்போதே இக்கார் பிரபலமடையத் தொடங்கியுள்ளது.

இவ்ளோ ஃபாஸ்டா காரை சார்ஜ் செய்ய முடியுமா? வெளியாகிய புதிய தகவல்... ஆச்சரியத்தில் மின்சார வாகன பிரியர்கள்!

இதன் விலை பல மடங்கு அதிகம் என்பதால் தொழிலதிபர்கள் மத்தியில் மட்டுமே பிரபலமடைந்து வருகின்றது. அந்தவகையில், உலகம் முழுவதிலும் சுமார் 2,500 யூனிட் கார்களை இது அண்மையில் டெலிவரிக் கொடுத்துள்ளது. இக்யூசி மின்சார கார் இந்தியாவில் ரூ. 99.30 லட்சங்கள் என்ற உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

இவ்ளோ ஃபாஸ்டா காரை சார்ஜ் செய்ய முடியுமா? வெளியாகிய புதிய தகவல்... ஆச்சரியத்தில் மின்சார வாகன பிரியர்கள்!

இந்த கார் இந்தியாவின் குறிப்பிட்ட ஆறு நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. முதல் கட்டமாக வெறும் 50 யூனிட்டுகள் மட்டுமே விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இக்காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 350 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் பேட்டரி பேக்கிற்கு சிறப்பு வாரண்டியாக 8 வருடங்களை அது வழங்கியுள்ளது.

Most Read Articles

English summary
Mercedes-Benz EQC Gets New Tech Upgradation For Fast Charging. Read In Tamil.
Story first published: Wednesday, November 18, 2020, 10:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X