மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி கூபே ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய வருகை எப்போது..?

ஜிஎல்சி மாடலின் கூபே ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் வருகிற மார்ச் 3ஆம் தேதி அறிமுகப்படுத்த மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் அன்றைய தினத்தில் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான இந்திய விலையும் இந்நிறுவனம் அறிவிக்கவுள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி கூபே ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய வருகை எப்போது..?

மெர்சிடிஸ் ஜிஎல்சி கூபே ஃபேஸ்லிஃப்ட் கடந்த ஆண்டு மத்தியில் சர்வதேச சந்தைக்கு கொண்டுவரப்பட்டது. இதன் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்கள் கிட்டத்தட்ட ஜிஎல்சி ஃபேஸ்லிஃப்ட்டுடன் ஒத்து போகக்கூடிய வடிவமைப்பில் இருந்தது. மெர்சிடிஸ் ஜிஎல்சி ஃபேஸ்லிஃப்ட் கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி கூபே ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய வருகை எப்போது..?

இந்நிறுவனம் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு நான்-ஏஎம்ஜி வெர்சனையும் தேர்வாக வழங்கியுள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவில் எஸ்யூவி-கூபே மாடல் ஒன்றிற்கு இத்தகைய வெர்சனை கூடுதல் தேர்வாக வழங்குவது இதுவே முதன்முறையாகும்.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி கூபே ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய வருகை எப்போது..?

ஜிஎல்சி கூபே மாடலில் இருந்து அப்டேட் செய்யப்பட்டுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சன், புதிய டைமண்ட் வடிவில் க்ரில், ஸ்டைல் சிறிது மாற்றப்பட்ட முன்புற மற்றும் பின்புற பம்பர்கள் மற்றும் புதிய எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் டெயில்-லைட்ஸ் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி கூபே ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய வருகை எப்போது..?

உட்புறத்தில் கவனித்தக்க மாற்றமாக, மெர்சிடிஸின் அப்டேட்டான MBUX இன்போடெயின்மெண்ட் மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மென்பொருள், 10.25 இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் உள்ள 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் செயல்படும் வகையில் நிலையாக வழங்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி கூபே ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய வருகை எப்போது..?

மேலும் இந்த MBUX மென்பொருள் மூலமாக 'ஹை மெர்சிடிஸ்' என்ற வாய்ஸ் கமெண்ட் இண்டர்ஃபேஸ் மற்றும் பெரிய சென்ட்ரல் டச்பேட் உள்ளிட்ட வசதிகளையும் பெறலாம். இவற்றுடன் கேபினின் மொத்த வடிவத்தையும் மெர்சிடிஸ் நிறுவனம் மாற்றியிருக்கும் என நம்பலாம்.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி கூபே ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய வருகை எப்போது..?

தற்போதைய ஸ்போர்டி ஏஎம்ஜி-பேட்ஜ்டு ஜிஎல்சி43 4மேட்டிக் மாடல் கார் 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு வி6 என்ற ஒரே ஒரு என்ஜினை மட்டுமே கொண்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 367 பிஎச்பி பவரையும் 520 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி கூபே ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய வருகை எப்போது..?

ஆனால் விரைவில் அறிமுகமாகவுள்ள இதன் ஃபேஸ்லிஃப்ட் ஜிஎல்சி 300 பெட்ரோல் மற்றும் ஜிஎல்சி 300டி டீசல் என்ற இரு தேர்வுகளில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஜிஎல்சி கூபே பெட்ரோல் வேரியண்ட் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினுடன் 258 பிஎச்பி பவர் மற்றும் 370 என்எம் டார்க் திறனை வெளிப்படுததவுள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி கூபே ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய வருகை எப்போது..?

இதன் டீசல் வேரியண்ட் 2.0 லிட்டர் டர்போ-டீசல் என்ஜினுடன் 245 பிஎச்பி பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கவுள்ளது. ட்ரான்ஸ்மிஷனிற்காக 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் மெர்சிடிஸின் 4மேட்டிக் ஆல்-வீல்-ட்ரைவ் சிஸ்டம் நிலையாக பொருத்தப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி கூபே ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய வருகை எப்போது..?

புதிய மெர்சிடிஸ் ஜிஎல்சி கூபே ஃபேஸ்லிஃப்ட் மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.55- 65 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தையில் இதற்கு போட்டியாகவுள்ள போர்ஷே மகன் ரூ.70-85 லட்சம் விலையிலும், பிஎம்டபிள்யூ எக்ஸ்4 ரூ.61-66 லட்சம் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Mercedes-Benz GLC Coupe Facelift India launch on March 3
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X