நடைமேடையில் பென்ஸ் காரை ஓட்டிய இளைஞர்... மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த போலீஸ்! அது என்ன தெரியுமா?

விலையுயர்ந்த பென்ஸ் ஜிஎல்சி காரை இளைஞர் பாதசாரிகளின் நடைமேடையில் ஓட்டிச் சென்ற வீடியோ வைரலாகி வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்

என்னதான் விலையுயர்ந்த காரா இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க... சொகுசு காரை நடைமேடையில் இயக்கிய இளைஞர்... ஏன் தெரிஞ்சா கொந்தளிச்சிருவீங்க!

வரலாறு காணாத தேசியளவிலான ஊரடங்கிற்கு பின்னர் நாட்டின் முக்கிய சாலைகள் சில இப்போதுதான் பயன்பாட்டுக்கு வர தொடங்கியுள்ளன. வைரசின் தீவிர பரவல் காரணமாக இன்னும் பல முக்கிய சாலைகள் இழுத்து மூடப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன. இருப்பினும், தொற்று குறைவாக காணப்படும் பகுதிகளில் முந்தைய வழக்கமான நிலை அரும்பெடுக்கத் தொடங்கியுள்ளது.

என்னதான் விலையுயர்ந்த காரா இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க... சொகுசு காரை நடைமேடையில் இயக்கிய இளைஞர்... ஏன் தெரிஞ்சா கொந்தளிச்சிருவீங்க!

அத்துடன், விதிமீறல் என்னும் முட்களும் துளிர்விட ஆரம்பித்துள்ளன. லாக்டவுண் காலத்திலும் இந்த விதிமீறல் சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் இருந்தது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், தற்போது ஊரடங்கு விளக்கிக் கொள்ளப்பட்டு வருவதால் விதிமீறல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை உறுதிச் செய்யும் வகையில் வாகனங்களின் விதிமீறல் குறித்த தகவல்கள் வெளிவர தொடங்கியிருக்கின்றன.

என்னதான் விலையுயர்ந்த காரா இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க... சொகுசு காரை நடைமேடையில் இயக்கிய இளைஞர்... ஏன் தெரிஞ்சா கொந்தளிச்சிருவீங்க!

அந்தவகையில், லக்சூரி வாகனமான மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி காரின் விதிமீறல் பற்றிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் காணவிருக்கின்றோம்.

இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அதிலும் கோவாவில் பருவ மழை சற்றே தீவிரமெடுக்க ஆரம்பித்துள்ளது.

என்னதான் விலையுயர்ந்த காரா இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க... சொகுசு காரை நடைமேடையில் இயக்கிய இளைஞர்... ஏன் தெரிஞ்சா கொந்தளிச்சிருவீங்க!

இதன் விளைவாக அம்மாநிலத்தின் ஒரு சில சாலைகளை வெள்ள நீர் ஆக்கரமிப்பு செய்துள்ளன. இந்த நிலையில்தான் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் காரை இறக்காமல் இளைஞர் ஒருவர், அதனை பாதசாரிகளின் நடைமேடையில் இயக்கியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற அப்பகுதி மக்களில் ஒரு சிலர், சொகுசு கார் உரிமையாளரின் விதிமீறலை வீடியோவாகப் பதிவு செய்தனர். மேலும், அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு தங்களது கண்டத்தையும் முன்வைத்தனர்.

என்னதான் விலையுயர்ந்த காரா இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க... சொகுசு காரை நடைமேடையில் இயக்கிய இளைஞர்... ஏன் தெரிஞ்சா கொந்தளிச்சிருவீங்க!

இணையத்தில் மிக வேகமாக இந்த வீடியோ வைரலானதை அடுத்து கோவா போலீஸாரின் கண்களில் பட்டது. இதையடுத்து, குறிப்பிட்ட சொகுசு கார் உரிமையாளரை அவர்கள் அழைத்தனர். தொடர்ந்து அவரிடத்தில் விதிமீறல்குறித்த ஆய்வை மேற்கொண்டனர். அப்போது, அவர் தண்ணீரை புறக்கணிப்பதற்காகவே நடைமேடையில் காரை இயக்கியதாக கூறி, தவறை ஒப்புக் கொண்டார்.

என்னதான் விலையுயர்ந்த காரா இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க... சொகுசு காரை நடைமேடையில் இயக்கிய இளைஞர்... ஏன் தெரிஞ்சா கொந்தளிச்சிருவீங்க!

இதையடுத்து ஆவணங்களை சரிபார்த்த கோவா போக்குவரத்து போலீஸார், விதிமீறிய குற்றத்திற்காக ரூ. 700 அபராத்திற்கான செல்லாணை வழங்கினர்.

பொதுசாலையில் விதிமீறி வாகனங்களை இயக்குவதே இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும். இந்நிலையில், பாதசாரிகள் நடப்பதற்காக கட்டப்பட்டிருக்கும் நடைமேடையில் சொகுசு காரை இயக்கியது அந்த இளைஞரிந் அலட்சியப்போக்கை வெளிப்படுத்தும் வகையில் இருக்கின்றது.

என்னதான் விலையுயர்ந்த காரா இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க... சொகுசு காரை நடைமேடையில் இயக்கிய இளைஞர்... ஏன் தெரிஞ்சா கொந்தளிச்சிருவீங்க!

இதன் காரணத்தினாலேயே போலீஸார் அவருக்கு தக்க தண்டனை வழங்கும் விதமாக ரூ. 700 அபராதத்தை வழங்கினர். மழைக் காலங்களில் இதுபோன்ற செயல்களை மிகவும் சர்வசாதாரணமாக இந்திய சாலைகளில் நம்மால் காண முடியும். ஏனென்றால், பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தினால் சாலையின் பள்ளம், மேடு எங்கிருக்கின்றது என்பதை நம்மால் யூகிக்கவே முடியாது.

என்னதான் விலையுயர்ந்த காரா இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க... சொகுசு காரை நடைமேடையில் இயக்கிய இளைஞர்... ஏன் தெரிஞ்சா கொந்தளிச்சிருவீங்க!

அந்தளவிற்கு இந்தியச் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இதனால்தான் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மழைக் காலங்களில் தண்ணீர் நிறைந்த பகுதியைத் தவிர்க்கின்றனர்.

மேலும், பாதசாரிகள் பயன்படுத்தும் நடைமேடைகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதேபாணியைதான் பென்ஸ் கார் உரிமையாளரும் மேற்கொண்டுள்ளார்.

என்னதான் விலையுயர்ந்த காரா இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க... சொகுசு காரை நடைமேடையில் இயக்கிய இளைஞர்... ஏன் தெரிஞ்சா கொந்தளிச்சிருவீங்க!

அவர் காரை இயக்கிய அந்த நடைமேடையானது ஓர் கடையின் நுழைவாயில் பகுதி ஆகும். அதில்தான் மற்றவர்கள் நடக்க முடியாத வகையில் காரை இயக்கிச் சென்றார் அந்த நபர். இந்த சம்பவம் அரங்கேறிய அதே நேரத்தில் மற்ற வாகனங்கள் அனைத்தும் சாலையில் இருந்த நீரை கிழித்த வண்ணம் சென்றுக் கொண்டிருந்ததை நம்மால் பார்க்க முடிகின்றது. ஏன், வாகனங்கள் பலவும் அதே மழை நீரில் நின்றவாறும் இருந்தன.

இதன் மூலம் சாலையில் பெரியளவில் நீர் இல்லை என்பதை நம்மால் உணர முடிகின்றது. எனவே, பென்ஸ் கார் உரிமையாளர் தனது வாகனத்தின் மீதிருந்த அதிக அக்கறை காரணமாக நடைமேடையில் எடுத்துச் சென்றுள்ளார்.

ஆனால், பென்ஸ் நிறுவனத்தின் ஜிஎல்சி மாடலோ 300 மிமீ வரையிலான ஆழத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த காரில் 183 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

என்னதான் விலையுயர்ந்த காரா இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க... சொகுசு காரை நடைமேடையில் இயக்கிய இளைஞர்... ஏன் தெரிஞ்சா கொந்தளிச்சிருவீங்க!

அத்துடன், எளிதில் நீர் புகாத திறனும் காரின் உட்பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அந்த சாலையில் இருந்த நீரை அது அசால்டாக கடந்திருக்கும் என தெரிகின்றது.

இருப்பினும், அறியாமையாலும், காரின் மீதான அதிக அக்கறையினாலும் அவர் நடைமேடையில் வைத்து இயக்கியுள்ளார்.

என்னதான் விலையுயர்ந்த காரா இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க... சொகுசு காரை நடைமேடையில் இயக்கிய இளைஞர்... ஏன் தெரிஞ்சா கொந்தளிச்சிருவீங்க!

இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸானது நீர் நிறைந்த சாலையை மட்டுமின்றி இந்தியாவின் கரடு முரடான சாலைகளையும் எளிதில் கடக்கும் திறனைக் கொண்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதற்கேற்ப 4மேட்டிக் தொழில்நுட்பம் அக்காருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற அம்சங்களை இக்கார் கொண்டிருப்பதனால்தான் இந்திய சொகுசு கார் விரும்புகளின் தேர்வில் இக்காரும் இடம்பிடித்துள்ளது.

என்னதான் விலையுயர்ந்த காரா இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க... சொகுசு காரை நடைமேடையில் இயக்கிய இளைஞர்... ஏன் தெரிஞ்சா கொந்தளிச்சிருவீங்க!

இந்த அம்சம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரில் மட்டுமின்றி உயர்நிலை எஸ்யூவி கார்கள் பலவற்றில் காணப்பபடுகின்றது. அந்த கார்கள் நீர் மட்டுமின்றி பனி, பாறை மற்றும் மணல் ஆகியவை குன்றுபோல் குவிந்திருந்தாலும் மிக அசால்டாக கடக்கும் திறனைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, நீர் நிறைந்த சாலைகளை மிகவும் சுலபமாக கடக்கும்.

More from DriveSpark

.
Article Published On: Wednesday, June 17, 2020, 18:29 [IST]
English summary
Mercedes Benz GLC Owner Gets Fine For Driving On Footpath. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+