பேருந்து டிரைவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பென்ஸ்... காரணத்தை கேட்டு அசந்துபோன ரோமானியர்கள்!

பேருந்து ஓட்டுநர் ஒருவரை மெர்சிடிஸ் நிறுவனம் கொண்டாடி வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பேருந்து டிரைவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பென்ஸ்... காரணத்தை கேட்டு அசந்துபோன ரோமானியர்கள்!

உலக புகழ்வாய்ந்த சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமாக மெர்சிடிஸ் பென்ஸ் திகழ்ந்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பிற்கென்று பெரும் ரசிகர்கள் பட்டாளம் இந்த உலகம் முழுவதும் காணப்படுகின்றது. இந்நிறுவனம், சொகுசு கார் உற்பத்தியில் மட்டுமின்றி பேருந்து, டிரக் போன்ற பெரிய வாகனங்களின் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றது.

பேருந்து டிரைவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பென்ஸ்... காரணத்தை கேட்டு அசந்துபோன ரோமானியர்கள்!

இந்த நிறுவனமே பேருந்து ஓட்டுநர் ஒருவரை ஆஹா, ஓஹோ என புகழ்ந்து தள்ள ஆரம்பித்துள்ளது. இந்த புகழுக்கு காரணமான பேருந்து ஓட்டுநர் ருமேனியா (Romania) நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அவருடைய பெயர் பற்றிய தகவல் வெளியாகவில்லை. ஆனால், அந்த ருமானிய நாட்டைச் சார்ந்தவருக்காகவே பென்ஸ் நிறுவனம் பிரத்யேக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

பேருந்து டிரைவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பென்ஸ்... காரணத்தை கேட்டு அசந்துபோன ரோமானியர்கள்!

பேருந்து ஓட்டுநரை ஏன் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பாராட்டி, வீடியோ வெளியிட்டிருக்கின்றது என்ற சந்தேகம் உங்களுக்கு எழும்பியிருக்கும். அதற்கான விடையைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். ரூமேனியா அரசு அந்த நாட்டின் தலைநகர் புக்கரெஸ்ட் (Bucharest), பயன்பாட்டிற்காக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சிட்டாரோ (Citaro) மாடல் பேருந்துகளைக் கணிசமான எண்ணிக்கையில் சில ஆண்டுகளுக்கு முன் களமிறக்கியது.

பேருந்து டிரைவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பென்ஸ்... காரணத்தை கேட்டு அசந்துபோன ரோமானியர்கள்!

இதில், ஓர் பேருந்தை இயக்கியவரையே தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் புகழ்ந்திருக்கின்றது. 2005ம் ஆண்டு வாங்கப்பட்ட இந்த பேருந்தில் பல பேருந்துகள் தற்போது பயனற்றதாக மாறியிருக்கின்றன. ஆனால், பெயர் வெளியாகாத அந்த ஓட்டுநர் இயக்கிய பேருந்தோ தற்போதும் புத்தம் புதிய தோற்றத்தில், நல்ல கன்டிஷனில் இருக்கின்றது.

பேருந்து டிரைவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பென்ஸ்... காரணத்தை கேட்டு அசந்துபோன ரோமானியர்கள்!

எனவேதான் அந்த ஓட்டுநரை ருமேனிய அரசும், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் பாராட்டி வருகின்றன. 2005ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்த இப்பேருந்து தற்போது வரை 1 மில்லியன் கிலோமீட்டர்களுக்கும் அதிகமாக பயணித்துள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பேருந்து பயன்பாட்டிற்காக களமிறக்கிய 15 ஆண்டுகளில், 12 ஆண்டுகள் வரை புகழ்ச்சிக்காக ஆளாகியிருக்கும் ஒற்றை ஓட்டுநரின் கையிலேயே இருந்திருக்கின்றது.

பேருந்து டிரைவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பென்ஸ்... காரணத்தை கேட்டு அசந்துபோன ரோமானியர்கள்!

இவரின் கைகளே அப்பேருந்த நல்ல முறையில் பயன்படுத்தவும், பராமரிக்கவும் காரணமாக அமைந்துள்ளது. எனவேதான் பேருந்தையும், ஓட்டநரையும் வர்ணிக்கும் விதமாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வீடியோ சமூக வலைதளம் வாயிலாக வெளியிட்டு, பாராட்டி வருகின்றது.

பேருந்து டிரைவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பென்ஸ்... காரணத்தை கேட்டு அசந்துபோன ரோமானியர்கள்!

அது வெளியிட்டிருக்கும் டுவிட்டில், "1 மனிதன், 1 பேருந்து, 1 மில்லியன் கிமீ: 2005ம் ஆண்டில் ருமேனிய அரசு அதன் தலைநகருக்காக 500 மெர்சிடிஸ் பென்ஸ் சிட்டாரோ சிட்டி பேருந்துகளை களமிறக்கியது. இதில், ஓர் பேருந்து 1 மில்லியன் கி.மீட்டர்களைக் கடந்தும் சிறப்பான கன்டிஷனில் காட்சியளிக்கின்றது. பெரியளவில் பராமரிப்பு செய்யப்படாமலே இது தற்போதும் சிறப்பான நிலையில் உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக ஒரே ஒரு ஓட்டுநர் மட்டுமே அந்த பேருந்தை இயக்கி வருவது கவரும் வகையில் அமைந்துள்ளது" என பதிவிட்டுள்ளது.

பேருந்து டிரைவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பென்ஸ்... காரணத்தை கேட்டு அசந்துபோன ரோமானியர்கள்!

மெர்சிடிஸ் பென்ஸ் சிட்டாரோ பேருந்துகள், குறைந்த தளம் (low-floor) கொண்ட சிட்டி பேருந்துகள் ஆகும். இந்த பேருந்து கார்களைப் போல் பன்முக தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இருக்கை எண்ணிக்கை வித்தியாசங்களுடன் அவை கிடைக்கின்றன. ஐரோப்பிய மற்றும் ஆசியாவின் ஒரு சில நாடுகளுக்கு ஏற்ற வடிவமைப்புகளில் இப்பேருந்து காணப்படுகின்றது.

பேருந்து டிரைவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பென்ஸ்... காரணத்தை கேட்டு அசந்துபோன ரோமானியர்கள்!

இதன் வடிவம் மற்றும் குறைந்த தள அமைப்பு இந்தியா போன்ற கரடு முரடான சாலைகளைக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு பொருந்தாத ஒன்று. மேலும், இந்த பேருந்தின் விலையும் சற்று அதிகம் என்பதால் இவற்றைப் பொது போக்குவரத்தில் காண்பது மிகவும் கடினமானதாக இருக்கின்றது.

பேருந்து டிரைவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பென்ஸ்... காரணத்தை கேட்டு அசந்துபோன ரோமானியர்கள்!

இப்பேருந்தில் பயணிப்பது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சொகுசு கார்களில் பயணிப்பதைப் போன்ற அனுபவத்தை வழங்கும். அதற்கேற்ப அம்சங்கள் அனைத்தையும் சிட்டாரோ பேருந்துகள் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, இதன் தோற்றமும் கவர்ச்சிகரமானதாக காட்சியளிக்கின்றது. இதன் முகப்பு பகுதி மின் விளக்கு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கே உரித்தான ஸ்டைலை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

பேருந்து டிரைவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பென்ஸ்... காரணத்தை கேட்டு அசந்துபோன ரோமானியர்கள்!

இத்துடன், ப்ளூ எஃபிசியன்ஸி பவர் டிரைவ் சிஸ்டம் இப்பேருந்தில் வழங்கப்பட்டுள்ளது. இது வழக்கமான பேருந்தைக் காட்டிலும் அதிக சிறப்பான இயக்க அனுபவத்தை வழங்கும். தொடர்ந்து பாதுகாப்பு அம்சமாக ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டமும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றது. இது மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பான பிரேக்கிங் அனுபவத்தை வழங்க உதவும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mercedes Benz Praises Bus Driver Who Clocking 1 Million KM's In Citaro Bus. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X