நடமாடும் இல்லம் போன்ற சொகுசு காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்

நடமாடும் இல்லம் போன்ற கட்டமைப்பு வசதிகள் கொண்ட புதிய கார் மாடலை இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த காரின் அறிமுக தேதி மற்றும் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

நடமாடும் இல்லம் போன்ற சொகுசு காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்

இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த சொகுசு ரக எம்பிவி கார் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் விற்பனையில் உள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு மாடல்களை வி க்ளாஸ் காரில் ஒன்றன் பின் ஒன்றாக மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

நடமாடும் இல்லம் போன்ற சொகுசு காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்

அந்த வகையில், நடமாடும் இல்லம் போன்று பயன்படுத்தும் வசதி கொண்ட வி க்ளாஸ் காரின் மார்கோ போலோ கேம்பர் வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ். வரும் பிப்ரவரி 6ந் தேதி ஆட்டோ எக்ஸ்போவில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியின் மூலமாக இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

நடமாடும் இல்லம் போன்ற சொகுசு காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்

இந்த காரை மொபைல் மினி ஹோம் என்று மெர்சிடிஸ் பென்ஸ் குறிப்பிடுகிறது. அதாவது, வீட்டில் இருப்பது போன்ற பல வசதிகளை இந்த கார் வழங்கும்.

நடமாடும் இல்லம் போன்ற சொகுசு காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்

இந்த காரின் பின் இருக்கைகளை மடக்கி படுக்கை போல மாற்றிக் கொள்ள முடியும். முன் இருக்கைகளை பின்னோக்கி திருப்பி வைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

நடமாடும் இல்லம் போன்ற சொகுசு காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்

சிறிய சமையலறைக்குரிய வசதிகள், மடக்கி விரிக்கும் வசதியுடன் டேபிள்கள், காரின் கூரையில் டென்ட் வசதிகளுடன் இந்த கார் வர இருக்கிறது.

நடமாடும் இல்லம் போன்ற சொகுசு காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்

பொருட்களை வைத்துக் கொள்வதற்கான சிறிய அலமாரி போன்ற அறைகளும் இந்த காரில் கொடுக்கப்ப்டடு இருக்கும். இது தவிர்த்து, இந்த காருக்கு ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகளையும் மெர்சிடிஸ் பென்ஸ் வழங்கும்.

நடமாடும் இல்லம் போன்ற சொகுசு காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்

வெளியூர் பயணிப்பவர்கள் மற்றும் சாகசப் பயணங்கள் செல்வோர் குறிப்பிட்ட இடங்களில் தங்குவதற்கு விருப்பப்பட்டால், இந்த காரிலேயே தங்க இயலும். அதாவது, சற்று ஓய்வாக இருப்பதற்கான வசதியை இந்த கார் வழங்கும்.

நடமாடும் இல்லம் போன்ற சொகுசு காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்

சாதாரண வி க்ளாஸ் காரில் இருக்கும் அதே 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த மாடலிலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 161 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

நடமாடும் இல்லம் போன்ற சொகுசு காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் கார் மார்க்கெட்டை குறிவைத்து டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது முதல் வி க்ளாஸ் காரின் அனைத்து மாடல்களையும் இந்தியாவில் களமிறக்கி வருகிறது மெர்சிடிஸ் பென்ஸ்.

நடமாடும் இல்லம் போன்ற சொகுசு காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்

இந்த புதிய மாடலும் சொகுசு கேம்பர் வாகன பிரியர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கலாம். இதுதவிர்த்து, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பல புதிய கார் மாடல்களை ஆட்டோ எக்ஸபோவில் களமிறக்க உள்ளது.

Article Published On: Monday, January 27, 2020, 17:24 [IST]
English summary
German luxury car maker, Mercedes-Benz has revealed to launch the V-Class Marco Polo camper van on February 6 at the 2020 Auto Expo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+