வித்தியாசமான தோற்றத்தில் தமிழ்நாட்டு சாலையில் காட்சிதந்த பென்ஸ் கார்!! ஆச்சிரியத்துடன் பார்த்த மக்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் கார் ஒன்று மேபேக் மட் தொகுப்புகளுடன் நமது தமிழ்நாட்டில் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள இந்த மாடிஃபை பென்ஸ் காரின் ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வித்தியாசமான தோற்றத்தில் தமிழ்நாட்டு சாலையில் காட்சிதந்த பென்ஸ் கார்!! ஆச்சிரியத்துடன் பார்த்த மக்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதன் அடையாள மாடலான ஜிஎல்எஸ் எஸ்யூவி காரின் ப்ரீமியம் வெர்சனை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. மேக்பேக் ஜிஎல்எஸ் என்ற பெயரில் வருகை தரவுள்ள இந்த எஸ்யூவி கார் ஜெர்மனை சேர்ந்த மெர்சிடிஸின் விலையுயர்ந்த தயாரிப்புகளுள் ஒன்றாகும்.

வித்தியாசமான தோற்றத்தில் தமிழ்நாட்டு சாலையில் காட்சிதந்த பென்ஸ் கார்!! ஆச்சிரியத்துடன் பார்த்த மக்கள்

சீனாவில் நடைபெற்ற 2019 குவாங்சோ மோட்டார் கண்காட்சியின் மூலம் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎல்எஸ் மேபேக் அமெரிக்க சந்தையில் இந்த 2020ன் துவக்கத்தில் கிட்டத்தட்ட ரூ.1.2 கோடி என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

வித்தியாசமான தோற்றத்தில் தமிழ்நாட்டு சாலையில் காட்சிதந்த பென்ஸ் கார்!! ஆச்சிரியத்துடன் பார்த்த மக்கள்

அதன்பின் இந்தியாவிலும் இந்த பேமேக் மாடலை விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்ட மெர்சிடிஸ் நிறுவனத்திற்கு கொரோனாவினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகள் பெரும் தடையாக அமைந்துவிட்டன. ஆனால் தற்போது ஊரடங்குகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுவிட்டதால் இந்தியாவில் இந்த காரை விற்பனைக்கு கொண்டுவர இந்த நிறுவனம் தீவிரமாக உள்ளது.

வித்தியாசமான தோற்றத்தில் தமிழ்நாட்டு சாலையில் காட்சிதந்த பென்ஸ் கார்!! ஆச்சிரியத்துடன் பார்த்த மக்கள்

இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு, திருச்சியில் மேபேக் ஜிஎல்எஸ் கார் ரஷ்லேன் செய்திதளத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இந்த சோதனை கார் மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் கிடையாது. மேபேக் பாடிகிட்களுடன் உள்ள மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் 400டி காராகும்.

வித்தியாசமான தோற்றத்தில் தமிழ்நாட்டு சாலையில் காட்சிதந்த பென்ஸ் கார்!! ஆச்சிரியத்துடன் பார்த்த மக்கள்

இந்த மாடிஃபிகேஷன் மாற்றங்கள் கோயம்புத்தூரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.99 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகின்ற மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் 400டி காரில் அதிகப்பட்சமாக 326 எச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 3-லிட்டர் 6-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

வித்தியாசமான தோற்றத்தில் தமிழ்நாட்டு சாலையில் காட்சிதந்த பென்ஸ் கார்!! ஆச்சிரியத்துடன் பார்த்த மக்கள்

அதுவே மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் ஒரே ஒரு ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இதில் 4.0 லிட்டர் டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் என்ஜின் 48 வோல்ட் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டார்டர் மோட்டார் உடன் சர்வதேச சந்தைகளில் வழங்கப்படுகிறது.

வித்தியாசமான தோற்றத்தில் தமிழ்நாட்டு சாலையில் காட்சிதந்த பென்ஸ் கார்!! ஆச்சிரியத்துடன் பார்த்த மக்கள்

அதிகப்பட்சமாக 6000 ஆர்பிஎம்-ல் 558 பிஎச்பி மற்றும் 2,500- 5,000 ஆர்பிஎம்-ல் 730 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இதன் என்ஜினின் ஆற்றலை அனைத்து சக்கரங்களுக்கும் வழங்க 9-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் மெர்சிடிஸின் 4மேட்டிக் அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டம் ஜிஎல்எஸ்600 4மேட்டிக் வேரியண்ட்டில் வழங்கப்படுகிறது.

வித்தியாசமான தோற்றத்தில் தமிழ்நாட்டு சாலையில் காட்சிதந்த பென்ஸ் கார்!! ஆச்சிரியத்துடன் பார்த்த மக்கள்

ஜிஎல்எஸ் பேமேக் காரின் வெளிப்புறத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு இணையான ரேடியேட்டர் க்ரில், 22-இன்ச் அல்லது 23-இன்ச் தேர்வுகளில் மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவையும், உட்புறத்தில் 12.3 இன்ச்சில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 12.3 இன்ச்சில் எம்பக்ஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் பர்ம்ஸ்டர் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் மற்ற நாட்டு சந்தைகளில் வழங்கப்படுகிறது.

வித்தியாசமான தோற்றத்தில் தமிழ்நாட்டு சாலையில் காட்சிதந்த பென்ஸ் கார்!! ஆச்சிரியத்துடன் பார்த்த மக்கள்

முழு-அளவு ப்ரீமியம் எஸ்யூவி மாடலான மேபேக் ஜிஎல்எஸ் காரில் நான்கு நபர்கள் மட்டுமே அமர முடியும். பெண்ட்லீ பெண்டாய்காவிற்கு போட்டியாக அடுத்த வருடத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் மெர்சிடிஸின் இந்த லக்சரி எஸ்யூவி காரின் விலை நம் நாட்டில் ரூ.2.5 கோடியில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
Mercedes GLS SUV With Maybach Mod Kit Spotted In Tamilnadu
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X