இந்த புது கடன் திட்டம் மூலமாக சீக்கிரமே புது பென்ஸ் கார் வாங்க பிராப்பி ரஸ்து!

கொரோனாவால் நெருக்கடிக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் புது பென்ஸ் கார் வாங்கும் ஆசையை தீர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு நெருங்கி உள்ளது.

சீக்கிரமே புது பென்ஸ் கார் கிடைக்க பிராப்பி ரஸ்து!

கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்து போன நிலையில், வேறு வழியில்லாமல் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் தயார்படுத்திக் கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், ஆட்டோமொபைல் தொழில்களும் பெரும் அடி வாங்கி இருக்கிறது. இந்த சூழலிலிருந்து சீக்கிரமே விடுபட்டு வெளி வருவதற்கான முயற்சிகளை கார் நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.

சீக்கிரமே புது பென்ஸ் கார் கிடைக்க பிராப்பி ரஸ்து!

இப்போது வேலை இழப்பு, சம்பள குறைப்பு, தொழில் நசிவு, வருவாய் இழப்பு போன்ற பிரச்னைகளால் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறப்பு கடன் திட்டங்களை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. இதுவரை இந்தியாவின் முன்னணி சாதாரண ரக கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த கடன் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை இழுக்க முயன்று வருகின்றன.

MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

சீக்கிரமே புது பென்ஸ் கார் கிடைக்க பிராப்பி ரஸ்து!

இந்த வரிசையில், நம் நாட்டின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸும் சிறப்பு கார் கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை Wishbox 2.0 என்ற பெயரில் அறிமுகப்படுத்தி உள்ளது மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனம். மூன்று விதமான சிறப்பு திட்டங்களில் இந்த கார் கடன் கிடைக்கும்.

சீக்கிரமே புது பென்ஸ் கார் கிடைக்க பிராப்பி ரஸ்து!

இந்த புதிய விஷ்பாக்ஸ் 2.0 சிறப்பு கடன் திட்டத்தில் அதிகபட்சமாக 10 ஆண்டுகளில் மாதத் தவணைகளை திருப்பிச் செலுத்தும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அதாவது, நீண்ட திருப்பி செலுத்தும் கால அளவுடன் இது கிடைப்பதால், மாதத் தவணை செலுத்துவதற்கு பலருக்கு எளிதாக இருக்கும்.

சீக்கிரமே புது பென்ஸ் கார் கிடைக்க பிராப்பி ரஸ்து!

மேலும், இந்த கார் கடனில் லட்சத்திற்கு ரூ.1,499 என்ற மாதத் தவணையை கணக்கிட்டு செலுத்த முடியும். இதுவரை வழங்கப்பட்டு வரும் கார் கடன்களில் மிக குறைவான மாதத் தவணை கணக்கீடுகளுடன் இது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு பின் காரை சொந்தமாக்கிக் கொண்டு ரீபைனான்ஸ் முறையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கடன் தொகையை மாதத் தவணைகளில் செலுத்த முடியும்.

சீக்கிரமே புது பென்ஸ் கார் கிடைக்க பிராப்பி ரஸ்து!

மேலும், சாதாரண கார் கடனை வாங்கினால் முதல் மூன்று மாதங்களுக்கு மாதத் தவணை கிடையாது என்றும் மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக புதிய கார் வாங்குவதை தள்ளிப்போட நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் மூலமாக உடனடியாக வாங்குவதற்கான வாய்ப்பை வழங்கும்.

சீக்கிரமே புது பென்ஸ் கார் கிடைக்க பிராப்பி ரஸ்து!

மற்றொரு கடன் திட்டத்தில் 20 சதவீத டவுன்பேமண்ட் செலுத்தி புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் முதல் 6 மாதங்களுக்கு குறைவான மாதத் தவணையை செலுத்திக் கொள்ளலாம். 7வது மாதத்திலிருந்து மாதத் தவணை தொகையை சிறிது சிறிதாக அதிகரிக்கும்.

சீக்கிரமே புது பென்ஸ் கார் கிடைக்க பிராப்பி ரஸ்து!

மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்துள்ள புதிய கார் கடன் திட்டங்கள் வருவாய் நெருக்கடியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், தற்காலிகமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளவர்கள் சில மாதங்கள் கழித்து நிலைமை சீரடையும்போது, தங்களது கார் கடனை எளிதாக கட்டுவதற்கான வாய்ப்பையும் இந்த கார் கடன் திட்டங்கள் வழிவகுக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, May 25, 2020, 22:30 [IST]
English summary
Mercedes-Benz has launched a special car loan schemes called Wishbox 2.0 for its Indian customers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+