எம்ஜி 360 எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்... மாருதி எர்டிகா காருக்கு அடுத்த போட்டி!

எம்ஜி 360 எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து இந்தியர்களின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மாருதி எர்டிகா காருக்கு நேரடி போட்டியாக வர இருக்கும் இந்த கார் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

எம்ஜி 360 எம்பிவி கார் அறிமுகம்... மாருதி எர்டிவாவுக்கு அடுத்த போட்டி!

இந்திய மார்க்கெட்டில் மிக வலுவான வர்த்தகத்தை பெறுவதற்காக பல புதிய கார் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் வரிசை கட்டி நிற்க வைத்துள்ளது எம்ஜி மோட்டார் நிறுவனம். இதில், பெரும்பாலான இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ள மாடல் எம்ஜி 360 எம்பிவி கார்.

எம்ஜி 360 எம்பிவி கார் அறிமுகம்... மாருதி எர்டிவாவுக்கு அடுத்த போட்டி!

மாருதி எர்டிகா மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ கார்களுக்கு நேரடி போட்டியான ரகத்தில் வர இருப்பதால், இந்த மாடல் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் விற்பனையாகும் பவ்ஜுன் 360 எம்பிவி கார்தான் இந்தியாவில் எம்ஜி பிராண்டில் 360எம் என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு அறிமுகமாக உள்ளது.

எம்ஜி 360 எம்பிவி கார் அறிமுகம்... மாருதி எர்டிவாவுக்கு அடுத்த போட்டி!

வடிவமைப்பில் பிற எம்ஜி தயாரிப்புகள் போலவே, குறை சொல்ல முடியாத வடிவமைப்பை பெற்றிருக்கிறது. எம்ஜி 360எம் கார் 4,615 மிமீ நீளமும், 1,735 மிமீ அகலமும், 1,660 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 2,750 மிமீ வீல் பேஸ் நீளத்தை பெற்றிருக்கிறது. இதனால், இந்த கார் 7 பேர் பயணிப்பதற்கான போதுமான இடவசதியை வழங்கும்.

எம்ஜி 360 எம்பிவி கார் அறிமுகம்... மாருதி எர்டிவாவுக்கு அடுத்த போட்டி!

இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 103 பிஎச்பி பவரையும், 135 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

எம்ஜி 360 எம்பிவி கார் அறிமுகம்... மாருதி எர்டிவாவுக்கு அடுத்த போட்டி!

இந்த காரில் 8.0 அங்குல ஃப்ளோட்டிங் தொடுதிரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் சன்ரூஃப், இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள், பார்க்கிங் கேமரா, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன

எம்ஜி 360 எம்பிவி கார் அறிமுகம்... மாருதி எர்டிவாவுக்கு அடுத்த போட்டி!

புதிய எம்ஜி 360எம் எம்பிவி கார் மாடலானது ரூ.10 லட்சத்திற்குள்ளான ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். மாருதி எர்டிகா காருக்கு சிறந்த மாற்று தேர்வை எதிர்பார்ப்பவர்களை குறிவைத்து இந்த கார் நிலைநிறுத்தப்படும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 5, 2020, 18:34 [IST]
English summary
MG Motor India has revealed the 360 MPV in India ongoing Auto Expo 2020.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+