மாருதி எர்டிகாவிற்கு தயாராகும் சவால்கள்!! வருகின்றன கியா, எம்ஜியின் காம்பெக்ட் எம்பிவி கார்கள்

கியா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி மோட்டார் நிறுவனங்கள் இந்திய சந்தையில் புதிய காம்பெக்ட் எம்பிவி கார்களை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி எர்டிகாவிற்கு தயாராகும் சவால்கள்!! வருகின்றன கியா, எம்ஜியின் காம்பெக்ட் எம்பிவி கார்கள்

கியா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி மோட்டார் நிறுவனங்கள் கடந்த ஆண்டில் இந்திய சந்தையில் அறிமுகமாகி மிக குறைந்த காலத்திற்குள் முன்னணி நிறுவனங்களாக உருவெடுத்துள்ளன. இதில் தென் கொரியா நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ் செல்டோஸ் எஸ்யூவி மூலம் இந்தியாவில் அறிமுகமானது.

மாருதி எர்டிகாவிற்கு தயாராகும் சவால்கள்!! வருகின்றன கியா, எம்ஜியின் காம்பெக்ட் எம்பிவி கார்கள்

அதன்பின் இந்த வருட துவக்கத்தில் கார்னிவல் எம்பிவி காரை அறிமுகப்படுத்திய இந்நிறுவனம் சமீபத்தில் சொனெட் மூலமாக காம்பெக்ட் எஸ்யூவி பிரிவுக்குள் நுழைந்தது. பிரிட்டிஷ் ஆட்டோமொபைல் நிறுவனமான எம்ஜி மோட்டார் ஹெக்டர் ப்ரீமியம் எஸ்யூவி கார் மூலமாக இந்திய சந்தைக்குள் அடியெடுத்து வைத்தது.

மாருதி எர்டிகாவிற்கு தயாராகும் சவால்கள்!! வருகின்றன கியா, எம்ஜியின் காம்பெக்ட் எம்பிவி கார்கள்

தற்சமயம் எம்ஜி பிராண்டில் இருந்து ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ், இசட்எஸ் இவி மற்றும் க்ளோஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த இரு நிறுவனங்களின் நோக்கமும் தற்சமயம் புதிய காம்பெக்ட் எம்பிவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில்தான் உள்ளது.

மாருதி எர்டிகாவிற்கு தயாராகும் சவால்கள்!! வருகின்றன கியா, எம்ஜியின் காம்பெக்ட் எம்பிவி கார்கள்

இந்த பிரிவில் மாருதியின் எர்டிகாவின் ஆதிக்கம் தொடர்ந்துவரும் நிலையில் கியாவின் புதிய காம்பெக்ட் எம்பிவி செல்டோஸின் பி-எஸ்யூவி ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் இந்த கார் அதிக வலிமை கொண்ட இரும்பினால் உருவாக்கப்படும் என்பது உறுதி.

மாருதி எர்டிகாவிற்கு தயாராகும் சவால்கள்!! வருகின்றன கியா, எம்ஜியின் காம்பெக்ட் எம்பிவி கார்கள்

இந்த கட்டமைப்பு தளம் அனைத்து-சக்கர-ட்ரைவ் (AWD) சிஸ்டம் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாருடன் உருவாக்கப்படும் கார்களுக்கும் ஏற்றதாகும். தனது புதிய காம்பெக்ட் எம்பிவி கார் ஏழு பயணிகளுக்கு போதுமான இட வசதியுடன் மலிவான விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று ஏற்கனவே கியா நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது.

மாருதி எர்டிகாவிற்கு தயாராகும் சவால்கள்!! வருகின்றன கியா, எம்ஜியின் காம்பெக்ட் எம்பிவி கார்கள்

மற்றப்படி இதன் அறிமுக தேதி குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி புதிய கியா காம்பெக்ட் எம்பிவி காரின் அறிமுகம் அடுத்த ஆண்டு இறுதியில் இருக்கலாம். இதன் தயாரிப்பு பணிகள் ஆந்திராவில் உள்ள கியாவிற்கு சொந்தமான அனந்தபூர் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படும்.

மாருதி எர்டிகாவிற்கு தயாராகும் சவால்கள்!! வருகின்றன கியா, எம்ஜியின் காம்பெக்ட் எம்பிவி கார்கள்

இந்தியாவில் காம்பெக்ட் எம்பிவி பிரிவில் எம்ஜி நிறுவனம் எம்ஜி 360எம் காரின் மூலம் இடம் பிடிக்கலாம். இந்தியாவில் 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த எம்ஜி 360எம் கார் சீனாவில் விற்பனையில் உள்ள பாஜூன் 360 காரின் ரீ-பேட்ஜ்டு வெர்சனாகும்.

மாருதி எர்டிகாவிற்கு தயாராகும் சவால்கள்!! வருகின்றன கியா, எம்ஜியின் காம்பெக்ட் எம்பிவி கார்கள்

4615மிமீ நீளத்தில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த எம்பிவி காரின் அகலம் 1735மிமீ, உயரம் 1660மிமீ ஆகும். மாருதி எர்டிகாவுடன் ஒப்பிடும்போது இதன் வீல்பேஸ் 10மிமீ கூடுதல் நீளமானதாக உள்ளது. இந்த காரில் ஹெக்டரில் வழங்கப்பட்டு வருகின்ற 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.

மாருதி எர்டிகாவிற்கு தயாராகும் சவால்கள்!! வருகின்றன கியா, எம்ஜியின் காம்பெக்ட் எம்பிவி கார்கள்

இருப்பினும் என்ஜின் 103 பிஎச்பி மற்றும் 135 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டு வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதனுடன் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக பெற்றுவரலாம் என கூறப்படும் எம்360 எம்பிவி காருக்கு ஜீப்பின் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வையும் எம்ஜி நிறுவனம் வழங்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Kia and MG To Launch Compact MPVs In India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X