எம்ஜி இஎம்ஜி6 ஹைப்ரிட் செடான் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

எம்ஜி மோட்டார் நிறுவனம் இ-எம்ஜி6 என்ற பெயரிலான புத்தம் புதிய ஹைப்ரிட் செடான் கார் மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி உள்ளது. இந்த தனித்துவமான அம்சங்கள் கொண்ட செடான் கார் குறித்து விரிவானத் தகவல்களை படங்களுடன் இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி இஎம்ஜி6 ஹைப்ரிட் செடான் கார் அறிமுகம்!

எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் ஏராளமான புதிய கார் மாடல்களை இந்தியர்களின் பார்வைக்கு கொண்டு அசரடித்துள்ளது. அதில், எஸ்யூவி அம்சங்களுடன் கூடிய எம்ஜி ஆர்சி6 செடான் கார் குறித்து ஏற்கனவே படித்திருப்பீர்கள். இதே வரிசையில் மற்றொரு இஎம்ஜி6 என்ற ஹைப்ரிட் செடான் கார் மாடலையும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி உள்ளது.

எம்ஜி இஎம்ஜி6 ஹைப்ரிட் செடான் கார் அறிமுகம்!

இந்த கார் பிளக் இன் ஹைப்ரிட் வகையை சேர்ந்தது. இந்த காரும் மிகவும் பிரிமீயம் மாடலாக இருப்பதுடன், மிக அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது. அதாவது, 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருக்கிரது. செடான் ரக கார்களில் இது கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கிறது.

எம்ஜி இஎம்ஜி6 ஹைப்ரிட் செடான் கார் அறிமுகம்!

இந்த கார் டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ், ஹோண்டா சிவிக், ஹூண்டாய் எலான்ட்ரா போன்ற கார்களுக்கு இணையான ரகத்திலான மாடலாக தெரிவிக்கப்படுகிறது.

எம்ஜி இஎம்ஜி6 ஹைப்ரிட் செடான் கார் அறிமுகம்!

புதிய இஎம்ஜி6 காரில் எம்ஜி நிறுவனத்தின் பாரம்பரிய க்ரில் அமைப்பு, எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள், முரட்டுத்தனமான பம்பர், வட்ட வடிவிலான பனி விளக்குகளுடன் காட்சித் தருகிறது. எல்இடி டெயில் லைட்டுகளும் இதன் முக்கிய அம்சமாக கூறலாம். இந்த காரில் எஸ்யூவி கார்கள் போன்று பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள் உள்ளன. சன்ரூஃப் அமைப்பும் உள்ளது.

எம்ஜி இஎம்ஜி6 ஹைப்ரிட் செடான் கார் அறிமுகம்!

புதிய எம்ஜி இஎம்ஜி6 செடான் காரில் இரண்டு திரை அமைப்புகள் டேஷ்போர்டை அலங்கரிக்கின்றன. ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்திற்கானதாகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரையாகவும் இருக்கிறது.

எம்ஜி இஎம்ஜி6 ஹைப்ரிட் செடான் கார் அறிமுகம்!

புதிய எம்ஜி இஎம்ஜி6 செடான் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வழங்கப்படுகிறது. மற்றொரு தேர்வு 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வாக இருக்கும். இந்த காரின் பெட்ரோல் ஹைப்ரிட் மாடலில் எலெக்ட்ரிக் மோட்டாரும் இணைந்து செயல்படும்.

எம்ஜி இஎம்ஜி6 ஹைப்ரிட் செடான் கார் அறிமுகம்!

பெட்ரோல் ஹைப்ரிட் மாடலானது 705 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த காரின் மின் மோட்டார் மற்றும் பேட்டரி இணைந்து 53 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

எம்ஜி இஎம்ஜி6 ஹைப்ரிட் செடான் கார் அறிமுகம்!

பெட்ரோல் எஞ்சின் துணையில்லாமலேயே, இது மின் மோட்டாரில் இயங்குவதால், தினசரி அலுவலகப் பணிகளுக்கு மின் மோட்டாரை பயன்படுத்தி செல்ல முடியும். மாசு உமிழ்வு பிரச்னை, எரிபொருள் செலவீனம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இது தீர்வாக இருக்கும். நீண்ட தூர பயணத்திற்கு பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் என இரண்டையும் பயன்படுத்தி 705 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 8, 2020, 11:00 [IST]
English summary
MG Motor India has showcased eMG6 hybrid sedan car at auto expo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+