குறுக்கே யானையே வந்தாலும் பயப்பட வேண்டாம்... இந்த கார் தானாகவே பிரேக் பிடிக்கும்! எப்படினு தெரியுமா?

எம்ஜி நிறுவனத்தின் புதிய கார் குளோஸ்டர் எஸ்யூவி பற்றி ஆச்சரியமளிக்கும் தகவல்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கியுள்ளது. அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

குறுக்கே யானையே வந்தாலும் பயப்பட வேண்டாம்... இந்த கார் தானாகவே பிரேக் பிடிக்கும்... எப்படினு தெரியுமா?

இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் எம்ஜி நிறுவனம், விரைவில் குளோஸ்டர் எனும் புதிய எஸ்யூவி ரக காரை இந்தியாவில் களமிறக்க இருக்கின்றது. இந்த நிலையில் இக்காரின் பக்கம் மக்களைக் கவரும் விதமாக இணையத்தில் பல்வேறு தகவல்கள் உலா வரத் தொடங்கியிருக்கின்றன.

குறுக்கே யானையே வந்தாலும் பயப்பட வேண்டாம்... இந்த கார் தானாகவே பிரேக் பிடிக்கும்... எப்படினு தெரியுமா?

அந்தவகையில், குளோஸ்டரின் புதிய பாதுகாப்பு வசதியான தானியங்கி பிரேக்கிங் அம்சம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. ஆம், எம்ஜி குளோஸ்டர் காரில் அவசர கால தானியங்கி பிரேக்கிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

குறுக்கே யானையே வந்தாலும் பயப்பட வேண்டாம்... இந்த கார் தானாகவே பிரேக் பிடிக்கும்... எப்படினு தெரியுமா?

இது அவசர கால சூழல் ஏற்படுவதற்கு முன்னரே பிரேக்கை செயல்படுத்தி காரையும், காரில் பயணிப்பவரையும் பாதுகாக்க உதவும். அதாவது, விபத்து ஏற்படுவதற்கு முன்னரே நுண்ணுணர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மற்றொரு காருடன் மோதலை சந்திப்பதற்கு முன்னரே காரை நிறுத்த இந்த தொழில்நுட்பம் உதவுகின்றது.

குறுக்கே யானையே வந்தாலும் பயப்பட வேண்டாம்... இந்த கார் தானாகவே பிரேக் பிடிக்கும்... எப்படினு தெரியுமா?

எனவே, இக்காரில் பயணிக்கும்போது காரின் முன்பு ஆடு, மாடு என எது குறுக்கே வந்தாலும் பயப்பட தேவையில்லை என்பது தெரிய வருகின்றது. இதுமட்டுமின்றி பல்வேறு சிறப்பு வசதிகளும் இக்காரில் இடம் பெறவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

குறுக்கே யானையே வந்தாலும் பயப்பட வேண்டாம்... இந்த கார் தானாகவே பிரேக் பிடிக்கும்... எப்படினு தெரியுமா?

எம்ஜி ஹெக்டார் மற்றும் இசட்எஸ் மின்சார கார்களைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் காராக எம்ஜி குளோஸ்டர் அமைந்திருக்கின்றது. இக்கார் வருகின்ற அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறுக்கே யானையே வந்தாலும் பயப்பட வேண்டாம்... இந்த கார் தானாகவே பிரேக் பிடிக்கும்... எப்படினு தெரியுமா?

வரும் தீபாவளி அன்று விற்பனைக்கு வரும் என சில தகவல்கள் உறுதியாக கூறி வருகின்றன. இந்த நிலையிலேயே கார் பற்றிய சிறப்பம்சங்கள் இணையத்தில் தொடர்ச்சியாக வெளிவர தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில் கார் பற்றி அண்மையில் வெளியாகிய வீடியோவை நீங்கள் கீழே காணலாம். முதிலில் காரின் அவசர பிரேக்கிங் சிஸ்டம் பற்றிய வீடியோவை காணலாம்.

இந்த காரில் லெவல்-1 தன்னாட்சி திறன் வழங்கப்பட்டிருப்பது அனைவரின் மத்தியிலும் மிகப் பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அம்சம் தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் எந்தவொரு காரிலும் இல்லாத அம்சமாக உள்ளது. எனவேதான், வாகன ஆர்வலர்களின் மத்தியில் இக்காரின் அறிமுகம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

எம்ஜி குளோஸ்டரில் தன்னாட்சி ஓட்டுநர் வசதியும் வழங்கப்பட இருக்கின்றது. இதன் ஒரு பகுதியே தானியங்கி அவசரகால பிரேக்கிங் சிஸ்டம். இது ஒரு ரேடார் அடிப்படையிலான அமைப்பாகும். இதுவே தனக்கு முன்னாள் சென்றிருக்கும் வாகனத்தை ரேடார் அலைகள் மூலம் கண்கானிப்பு செய்யும்.

குறுக்கே யானையே வந்தாலும் பயப்பட வேண்டாம்... இந்த கார் தானாகவே பிரேக் பிடிக்கும்... எப்படினு தெரியுமா?

மேலும், முன் செல்லும் வாகனம் திடீரென நிருத்தப்படுமேயானால், அது தன்னிச்சையாக பிரேக்கை செயல்படுத்தி விபத்து நேர்வதற்கு முன்னரே காரை நிறுத்தும். இதுமட்டுமின்றி திடீரென குறுக்கில் தோன்றும் கார்களில் இருந்து மோதலைக் கட்டுப்படுத்தும் விதமாக தானியங்கி பிரேக்கை அது செயல்படுத்த உதவும்.

குறுக்கே யானையே வந்தாலும் பயப்பட வேண்டாம்... இந்த கார் தானாகவே பிரேக் பிடிக்கும்... எப்படினு தெரியுமா?

எனவே இக்காரில் பயணிக்கும்போது விபத்து என்பது மிக அரிதே. முதலில் காரின் வேகத்தை குறைத்து, பின்னரே பிரேக் பிடிக்கப்படுகின்றது. இவையனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறிவிடும். இதுமட்டுமின்றி பல்வேறு சொகுசு வசதிகளைக் கொண்ட காராகும் இது இந்தியாவில் களமிறங்க இருக்கின்றது. குறிப்பாக, டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டீயோவர் ஆகிய கார்களுக்கு போட்டியாக இது களமிறங்க உள்ளது.

குறுக்கே யானையே வந்தாலும் பயப்பட வேண்டாம்... இந்த கார் தானாகவே பிரேக் பிடிக்கும்... எப்படினு தெரியுமா?

இதுவரை இல்லாத வகையிலான பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்டு இக்கார் இந்தியாவில் களமிறங்க இருப்பதால் அதிகபட்சமாக ரூ. 45 லட்சம் வரையிலான விலையைக் கொண்டு குளோஸ்டர் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மிகப்பெரியதாகும்.

குறுக்கே யானையே வந்தாலும் பயப்பட வேண்டாம்... இந்த கார் தானாகவே பிரேக் பிடிக்கும்... எப்படினு தெரியுமா?

7 இருக்கை வசதிகளுடன் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த காரின் எஞ்ஜின் விபரம் பற்றிய தகவல் வெளிவராத காரணத்தால் அதுகுறித்த உறுதியாக எங்களால் தெரிவிக்க முடியவில்லை. இருப்பினும், தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றது.

Most Read Articles

English summary
MG Gloster Automatic Emergency Braking System In Action On Video. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X