புதிய எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்கள்!

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக வர இருக்கும் புதிய எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பது குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்கள்!

அண்மையில் கிரேட்டர் நொய்டாவில் நடந்து முடிந்த ஆட்டோ எக்ஸ்போவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது அரங்கில் க்ளோஸ்டர் என்ற ஃபுல் சைஸ் எஸ்யூவி மாடலை காட்சிப்படுத்தி இருந்தது. இந்த எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போ வந்த பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

புதிய எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்கள்!

மேலும், எப்போது இந்த எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் என்ற ஆவலையும் கிளப்பியது. இந்த நிலையில், புதிய எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்கள்!

அதாவது, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்த புதிய மாடல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த பிரம்மாண்ட எஸ்யூவியின் வருகையை இந்தியர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

புதிய எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்கள்!

புதிய எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, எல்இடி டெயில் லலைட்டுகள் இடம்பெற்றுள்ளன. டெயில் லைட்டுகளை பெரிய க்ரோம் பட்டை அமைப்பு இணைக்கிரது

புதிய எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்கள்!

இந்த ஃபுல் சைஸ் எஸ்யூவி கார் 5,005 மிமீ நீளமும், 1,932 மிமீ அகலமும், 1,875 மிமீ உயரமும் கொண்டுள்ளது. இதன் வீல் பேஸ் 2,950 மிமீ ஆக உள்ளது. மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் எப்படி எம்ஜி ஹெக்டர் மிகப்பெரிய கார் மாடலாக இருக்கிறதோ, அதேபோலவே, ஃபுல் சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் இந்த க்ளோஸ்டர் பெரிய எஸ்யூவி மாடலாக இருக்கும்.

புதிய எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்கள்!

புதிய எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி காரில் 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 அங்குல திரையுடன் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், கூல்டு மற்றும் ஹீட்டடு வசதிகள் கொண்ட இருக்கைகள் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.

புதிய எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்கள்!

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், அவசர காலத்தில் தானியங்கி முறையில் செயல்படும் பிரேக் சிஸ்டம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் பார்க்கிங் சிஸ்டம், லேன் கீப்பிங் அசிஸ்ட் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

புதிய எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்கள்!

புதிய எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 221 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கலாம்.

புதிய எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்கள்!

புதிய எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி ரூ.27 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர், மஹிந்திார அல்டுராஸ் ஜி4 ஆகிய ஃபுல் சைஸ் எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

Source: Carwale

More from DriveSpark

Article Published On: Friday, February 21, 2020, 17:09 [IST]
English summary
According to reports, MG Gloster is expected to launch in India by November, 2020.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+