புக்கிங்கில் புதிய சாதனையை தொட்டது எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

இந்தியாவின் சூப்பர் ஹிட் எஸ்யூவி மாடலாக பெருமை பெற்றிருக்கும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் முன்பதிவு எண்ணிக்கையை புதி மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.

புக்கிங்கில் புதிய சாதனையை தொட்டது எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் கார் மாடலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹெக்டர் எஸ்யூவி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. பிரம்மாண்டமான தோற்றம், சிறந்த எஞ்சின் தேர்வுகள் மற்றும் இன்டர்நெட் வசதியுடன் வந்த கார் மிக சவாலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

புக்கிங்கில் புதிய சாதனையை தொட்டது எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

இதனால், இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆரம்பம் முதலே இந்த காருக்கான அமர்க்களமாக இருந்து வருகிறது.

புக்கிங்கில் புதிய சாதனையை தொட்டது எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

கியா செல்டோஸ் என்ற மிக வலிமையான போட்டியாளர் வந்தபோதிலும், இந்த காரின் மார்க்கெட் மிக ஸ்திரமாக இருந்து வருகிறது. மாதம் 1,500 கார்கள் விற்பனை இலக்குடன் துவங்கப்பட்ட இதன் சந்தையானது, தற்போது மாதத்திற்கு 3,000 என்ற அளவில் இருந்து வருகிறது.

புக்கிங்கில் புதிய சாதனையை தொட்டது எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

இந்த நிலையில், எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு 50,000 என்ற புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. இதன் ரகத்திலான கார்களில் இந்த சாதனையை குறுகிய காலத்தில் படைத்திருக்கும் மாடலாகவும் குறிப்பிடப்படுகிறது. மேலும், இதுவரை 20,000 ஹெக்டர் எஸ்யூவிகளும் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளன.

புக்கிங்கில் புதிய சாதனையை தொட்டது எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 143 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும், ஹைப்ரிட் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகிறது.

புக்கிங்கில் புதிய சாதனையை தொட்டது எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

இதில், பெட்ரோல் எஞ்சின்கள் அண்மையில் பிஎஸ்-6 தரத்துடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சின் வேரியண்ட்டுகள் ரூ.26,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்தன. இந்த நிலையில், வரும் மார்ச்சில் டீசல் எஞ்சினும் பிஎஸ்-6 தரத்துடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 173 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புக்கிங்கில் புதிய சாதனையை தொட்டது எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

இந்த கார் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு, இந்த காரின் 10.4 அங்குல அளவிலான பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் நேரடி இணைய வசதியை பெற்றிருப்பதுதான். இதன் மூலமாக பல்வேறு கட்டுப்பாட்டு மற்றும் கார் இயக்கம் குறித்த தகவல்களை ஸ்மார்ட்ஃபோன் மூலமாக எளிதாக பெற முடியும். ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளையும் சப்போர்ட் செய்யும்.

புக்கிங்கில் புதிய சாதனையை தொட்டது எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

இந்த கார் 5 சீட்டர் மாடலாக இருந்தாலும், மிட்சைஸ் எஸ்யூவி ரகத்தில் மிகப்பெரிய மாடலாகவும் இருக்கிறது. இதனால், உட்புறத்தில் அதிக இடவசதியை அளிக்கிறது. அத்துடன், தோற்றத்திலும் பிரம்மாண்டத்தில் சுண்டி இழுக்கிறது. பாதுகாப்பு அம்சங்களிலும் சிறப்பானதாக இருக்கிறது.

புக்கிங்கில் புதிய சாதனையை தொட்டது எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

எம்ஜி ஹெக்டர் பிஎஸ்-6 பெட்ரோல் மாடல்கள் ரூ.12.74 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கின்றன. டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 20, 2020, 12:41 [IST]
English summary
MG Motor has received more than 50,000 bookings for Hector in India since launch.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+