உச்சகட்ட எதிர்பார்ப்பு... எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் விலை குறித்த முக்கிய தகவல் வெளியானது...

வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஹெக்டர் ப்ளஸ் கார் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

உச்சகட்ட எதிர்பார்ப்பு... எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் விலை குறித்த முக்கிய தகவல் வெளியானது...

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதை தடுப்பதற்காக, கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனவே அன்றைய தினம் முதல் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தப்பட்டது. எனினும் ஊரடங்கில் மத்திய, மாநில அரசுகள் தற்போது படிப்படியாக பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகின்றன.

உச்சகட்ட எதிர்பார்ப்பு... எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் விலை குறித்த முக்கிய தகவல் வெளியானது...

எனவே இந்தியாவில் மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் கடந்த மே 4ம் தேதி முதல் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது வாகன உற்பத்தி நிறுவனங்கள், புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளன. இதில், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தயாரிப்புகளில் ஒன்று எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்.

உச்சகட்ட எதிர்பார்ப்பு... எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் விலை குறித்த முக்கிய தகவல் வெளியானது...

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்து கிட்டத்தட்ட ஓராண்டு கடந்து விட்டது. கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில், ஹெக்டர் எஸ்யூவி ரக காரை எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய மார்க்கெட்டிற்கான தனது முதல் தயாரிப்பாக விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

உச்சகட்ட எதிர்பார்ப்பு... எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் விலை குறித்த முக்கிய தகவல் வெளியானது...

எம்ஜி ஹெக்டர் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் இது 5 இருக்கை அமைப்புடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே ஹெக்டர் காரில், கூடுதல் இருக்கை அமைப்புடன், ஹெக்டர் ப்ளஸ் என்ற பெயரில், புதிய காரை விற்பனைக்கு கொண்டு வரும் பணிகளில் எம்ஜி மோட்டார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

உச்சகட்ட எதிர்பார்ப்பு... எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் விலை குறித்த முக்கிய தகவல் வெளியானது...

தற்போது உள்ள ஹெக்டர் காரின் நீட்டிக்கப்பட்ட அல்லது விரிவாக்கம் செய்யப்பட்ட வெர்ஷன்தான் ஹெக்டர் ப்ளஸ். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில், ஹெக்டர் ப்ளஸ் காரை எம்ஜி நிறுவனம் காட்சிப்படுத்தியது. கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், ஹெக்டர் ப்ளஸ் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளை எம்ஜி முடுக்கி விட்டுள்ளது.

உச்சகட்ட எதிர்பார்ப்பு... எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் விலை குறித்த முக்கிய தகவல் வெளியானது...

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் கார் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் உற்பத்தி எப்போது தொடங்கப்படும்? என்பது உள்பட வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் சில முக்கியமான தகவல்களை, எம்ஜி நிறுவனத்தின் உயர் அதிகாரி தற்போது தெரிவித்துள்ளார்.

உச்சகட்ட எதிர்பார்ப்பு... எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் விலை குறித்த முக்கிய தகவல் வெளியானது...

இது தொடர்பாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ராஜிவ் சபா கூறுகையில், ''ஹெக்டர் ப்ளஸ் காரை உற்பத்தி செய்யும் பணிகளை நாங்கள் இந்த வாரத்தில் தொடங்க வேண்டும். ஜூலை மாதத்தில் இரண்டாவது வாரத்தில், ஹெக்டர் ப்ளஸ் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தவுள்ளோம்'' என்றார்.

உச்சகட்ட எதிர்பார்ப்பு... எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் விலை குறித்த முக்கிய தகவல் வெளியானது...

எம்ஜி ஹெக்டர் கார் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டியிட்டு வரும் நிலையில், ஹெக்டர் ப்ளஸ் மூலம் எம்ஜி நிறுவனம் எம்பிவி செக்மெண்ட்டில் நுழையவுள்ளது. ஆம், ஹெக்டர் ப்ளஸ் காரை எம்ஜி நிறுவனம் எம்பிவி செக்மெண்ட்டில்தான் நிலைநிறுத்துகிறது. இதுகுறித்து ராஜிவ் சபா கூறுகையில், ''ஹெக்டர் ப்ளஸ் கார் எம்பிவி கேட்டகரியில் வரும்.

உச்சகட்ட எதிர்பார்ப்பு... எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் விலை குறித்த முக்கிய தகவல் வெளியானது...

தற்போது ஹெக்டர் கார் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டியிட்டு வரும் நிலையில், பெரிய குடும்பங்களின் பயன்பாட்டிற்காக எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரை எம்பிவி கேட்டகரியில் கொண்டு வருகிறோம்'' என்றார். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் மாருதி சுஸுகி எக்ஸ்எல் 6 ஆகிய கார்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் எம்பிவி செக்மெண்ட்டில், ஹெக்டர் ப்ளஸ் நுழையவுள்ளது.

உச்சகட்ட எதிர்பார்ப்பு... எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் விலை குறித்த முக்கிய தகவல் வெளியானது...

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் இருக்கை அமைப்பு குறித்து ராஜிவ் சபா கூறுகையில், ''மத்திய வரிசையில் 2 கேப்டன் இருக்கைகள் உள்பட மொத்தம் 6 இருக்கைகள் கொண்டதாக எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் இருக்கும். மார்க்கெட்டை நாங்கள் ஆய்வு செய்ததில், மத்திய வரிசையில் கேப்டன் இருக்கைகளுடன், மூன்றாவது வரிசை இருக்கைகளையும் சில வாடிக்கையாளர்கள் விரும்புவது தெரியவந்தது.

உச்சகட்ட எதிர்பார்ப்பு... எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் விலை குறித்த முக்கிய தகவல் வெளியானது...

எனவே அப்படிப்பட்ட ஒரு தயாரிப்பைதான் நாங்கள் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளோம்'' என்றார். இதற்கு அடுத்தபடியாக எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எம்பிவி காரின் விலை குறித்த எதிர்பார்ப்புதான் வாடிக்கையாளர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. இதற்கும் ராஜிவ் சபா பதில் அளித்துள்ளார். ஹெக்டரை விட ஹெக்டர் ப்ளஸ் காரின் விலை சுமார் 1 லட்ச ரூபாய் அதிகமாக இருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

உச்சகட்ட எதிர்பார்ப்பு... எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் விலை குறித்த முக்கிய தகவல் வெளியானது...

எம்ஜி ஹெக்டர் கார் தற்போதைய நிலையில் வேரியண்ட்களை பொறுத்து, 12.74 லட்ச ரூபாய் முதல் 17.73 லட்ச ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஹெக்டர் ப்ளஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது, அதன் விலை குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

Most Read Articles

English summary
MG Hector Plus MPV Expected Price, Launch Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X