எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் இப்படியொரு வசதியை நிச்சயமாக யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்...!

காரின் பின்புறத்தில் கால்களை ஸ்வைப் செய்தாலே டெயில்கேட் திறக்கும் வசதியை வெளிக்காட்டும் வகையில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மாடலின் புதிய டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் இப்படியொரு வசதியை நிச்சயமாக யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்...!

ஹெக்டர் ப்ளஸ், கடந்த ஆண்டில் முதன்முறையாக இந்திய சந்தையில் நுழைந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் நம் நாட்டில் அறிமுகப்படுத்தவுள்ள மூன்றாவது தயாரிப்பாகும். ஏற்கனவே விற்பனையில் உள்ள ஹெக்டர் எஸ்யூவி காரை காட்டிலும் சற்று கூடுதலான நீளத்தில் வெளிவரவுள்ள இந்த புதிய மாடல் தற்சமயம் குஜராத்தில் உள்ள எம்ஜி நிறுவனத்தின் ஹலோல் தொழிற்சாலையில் தயாரிப்பு பணியில் உள்ளது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் இப்படியொரு வசதியை நிச்சயமாக யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்...!

ஹெக்டர் மாடலின் அதே லைனில் ஹெக்டர் ப்ளஸ் கார்களையும் உருவாக்கி வரும் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் அதன் கார்களுக்கு இந்தியாவில் வரவேற்பு அதிகரித்து வருவதால் தயாரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக கிட்டத்தட்ட 200 கூட்டணி நிறுவனங்களை இணைத்து கொண்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் இப்படியொரு வசதியை நிச்சயமாக யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்...!

புதிய ஹெக்டர் ப்ளஸ் மாடல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. உட்புறத்தில் கேப்டன் இருக்கைகளை இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைகளில் கொண்டுள்ள இந்த கார் ஆரம்பத்தில் 6 இருக்கை வெர்சனில் மட்டும் தான் விற்பனையை துவங்கவுள்ளது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் இப்படியொரு வசதியை நிச்சயமாக யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்...!

அதன் பின்பு தான் இதன் 7 இருக்கை வெர்சன் விற்பனைக்கு வரவுள்ளது. வழக்கமான ஹெக்டர் மாடலுடன் ஒப்பிடுகையில் ஹெக்டர் ப்ளஸ் வெளிப்புறத்தில் புதிய ஹெட்லேம்ப் டிசைன்கள், திருத்தியமைக்கப்பட்ட முன்புற க்ரில், புதிய முன் மற்றும் பின் பம்பர்கள் மற்றும் புதிய டிசைனில் டெயில்கேட் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் இப்படியொரு வசதியை நிச்சயமாக யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்...!

இதற்கிடையில் தற்போது வெளிவந்துள்ள டீசர் வீடியோ மேற்கூறப்பட்ட அம்சங்களுடன் இந்தியாவில் மிகவும் சில கார்கள் மட்டுமே கொண்டுள்ள ‘லெக் ஸ்வைப்', அதாவது கால்களை காரின் பின்புறத்தில் உள்ள டெயில்கேட்டிற்கு அடியில் நீட்டினாலே போதும் டெயில்கேட் தானாக திறக்கும் வசதியையும் ஹெக்டர் ப்ளஸ் மாடல் பெற்றுள்ளதை வெளிக்காட்டுகிறது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் இப்படியொரு வசதியை நிச்சயமாக யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்...!

வெளிப்புறத்தை போல் உட்புறத்திலும் ஹெக்டர் எஸ்யூவி மாடலை ஒத்திருக்க உள்ள இந்த புதிய காரில் 6-இருக்கை அமைப்பு (2+2+2) என்ற விகிதத்திலும், 7-இருக்கை அமைப்பு (2+3+2) என்ற விகிதத்திலும் வழங்கப்படவுள்ளன.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் இப்படியொரு வசதியை நிச்சயமாக யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்...!

ஹெக்டர் ப்ளஸ் காரின் உட்புற கேபினில் 10.4 இன்ச்சில் செங்குத்தான தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழிற்நுட்பத்திற்காக இ-சிம், பவர் அட்ஜெஸ்டபிள் முன் இருக்கைகள், பனோராமிக் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் 6 காற்றுப்பைகள் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம்.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் இப்படியொரு வசதியை நிச்சயமாக யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்...!

இவற்றுடன் மென்பொருள்களை அப்டேட் செய்வதற்காக ஓவர் தி ஏர் தொழிற்நுட்பத்தையும் இந்த புதிய காரில் எம்ஜி நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த தொழிற்நுட்பத்தின் மூலமாக இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தின் தீம்களையும் இன்போடெயின்மெண்ட் கண்டெண்ட்களையும் அப்டேட் செய்ய முடியும்.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் இப்படியொரு வசதியை நிச்சயமாக யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்...!

ஹெக்டர் எஸ்யூவி மாடலில் உள்ள பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் தேர்வுகள் தான் புதிய ஹெக்டர் ப்ளஸ் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளன. இதில் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 143 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் இப்படியொரு வசதியை நிச்சயமாக யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்...!

டர்போ டீசல் என்ஜின் ஆனது 170 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது. இந்த இரு என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. பெட்ரோல் என்ஜின் உடன் மட்டும் கூடுதலாக ஆட்டோமேட்டிக் தேர்வு வழங்கப்படுகிறது. அதேபோல் பெட்ரோல் தேர்வு மில்ட் ஹைப்ரீட் வேரியண்ட்டாக இந்த புதிய காரில் இருக்கும்.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் இப்படியொரு வசதியை நிச்சயமாக யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்...!

ஹெக்டரின் மூலமாக மஹிந்திரா எக்ஸ்யூவி500, டாடா ஹெரியர், ஜீப் காம்பஸ் உள்ளிட்டவற்றுடன் நேரடியாக விற்பனையில் போட்டியிட்ட எம்ஜி நிறுவனம் புதிய ஹெக்டர் ப்ளஸ் மாடலின் மூலமாக சந்தையில் பிரபலமான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு சவால் விட தயாராக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 18, 2020, 19:30 [IST]
English summary
MG Hector Plus SUV teased – Leg Swipe to open tailgate
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+