இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருப்பது எங்களுக்கு பெருமை... நெகிழும் நெட்டிசன்கள்! ஏன் தெரியுமா?

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருப்பது எங்களுக்கு பெருமை என நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருப்பது எங்களுக்கு பெருமை... நெகிழும் நெட்டிசன்கள்! ஏன் தெரியுமா?

சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக நம்பப்படும் கோவிட்-19 வைரஸ், உலகையே ஆட்டி படைத்து வருகிறது. இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கோவிட்-19 வைரஸால் கதிகலங்கி போயுள்ளன. உலகம் முழுவதும் தற்போது வரை 59,221 பேரின் உயிரை கோவிட்-19 வைரஸ் பறித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருப்பது எங்களுக்கு பெருமை... நெகிழும் நெட்டிசன்கள்! ஏன் தெரியுமா?

உயிரிழப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருப்பதால் மக்கள் கவலையடைந்துள்ளனர். அதே சமயம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை கடந்துள்ளது. துல்லியமாக சொல்வதென்றால், தற்போது வரை உலகம் முழுவதும் 11,18,304 பேரை கோவிட்-19 வைரஸ் தாக்கியுள்ளது. உயிரிழப்புகள் ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் பொருளாதார ரீதியிலான நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன.

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருப்பது எங்களுக்கு பெருமை... நெகிழும் நெட்டிசன்கள்! ஏன் தெரியுமா?

கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, உலகின் பல்வேறு நாடுகளும் தங்களின் எல்லைகளை மூடி விட்டன. எனவே சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு சில விமான நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன.

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருப்பது எங்களுக்கு பெருமை... நெகிழும் நெட்டிசன்கள்! ஏன் தெரியுமா?

மேலும் ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது போன்ற நடவடிக்கைகளும் கூட எடுக்கப்பட்டு வருகின்றன. விமான நிறுவனங்கள் மட்டுமல்லாது, முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலவும் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நாடுகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருப்பது எங்களுக்கு பெருமை... நெகிழும் நெட்டிசன்கள்! ஏன் தெரியுமா?

இதனால் வாகனங்களின் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. இதன் காரணமாகவும், கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காகவும், வாகன தொழிற்சாலைகளில் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே வாகன உற்பத்தி நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருப்பது எங்களுக்கு பெருமை... நெகிழும் நெட்டிசன்கள்! ஏன் தெரியுமா?

இப்படிப்பட்ட சூழலில், எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆம், கொரோனா வைரஸ் காரணமாக ஊழியர்களை வேலையை பறிக்க மாட்டோம் என எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருப்பது எங்களுக்கு பெருமை... நெகிழும் நெட்டிசன்கள்! ஏன் தெரியுமா?

ஆட்டோமொபைல் உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ள சமயத்தில், எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் அதற்கு விதிவிலக்காக உள்ளது. 2020ம் ஆண்டில் ஒரு வேலையை கூட பறிக்க கூடாது என எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் உறுதிமொழி எடுத்துள்ளது.

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருப்பது எங்களுக்கு பெருமை... நெகிழும் நெட்டிசன்கள்! ஏன் தெரியுமா?

உண்மையில் இத்தகைய முடிவுகள் அரிதானவை. எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஊழியர்களை ஒரு பெரிய குடும்பமாக கருதுவதை இந்த முடிவு காட்டுகிறது. எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ராஜிவ் சபா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவரது டிவிட்டர் பக்கத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருப்பது எங்களுக்கு பெருமை... நெகிழும் நெட்டிசன்கள்! ஏன் தெரியுமா?

டிவிட்டர் பயனர்கள் பலர் இந்த அறிவிப்பை வரவேற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் எதிரொலியால், ஊழியர்கள் மிக கடினமான நேரத்தை சந்தித்து கொண்டிருக்கும் இச்சமயத்தில், எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தை, மற்ற நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் எனவும் நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருப்பது எங்களுக்கு பெருமை... நெகிழும் நெட்டிசன்கள்! ஏன் தெரியுமா?

எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலை நிலவி வரும் இச்சமயத்தில், மற்ற நிறுவனங்களுக்கு எல்லாம் எம்ஜி மோட்டார் இந்தியா உண்மையிலேயே முன் உதாரணமாக மாறியுள்ளது. அதே சமயம் எம்ஜி நிறுவன கார்களை வைத்திருக்கும் ஒரு சிலரோ, எம்ஜி நிறுவனத்தின் இந்த முடிவால் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருப்பது எங்களுக்கு பெருமை... நெகிழும் நெட்டிசன்கள்! ஏன் தெரியுமா?

பல நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், எதிர்காலம் குறிச்ச அச்சமும், கவலையும் தற்போது தொற்றி கொண்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் வெளிவந்திருக்கும் இந்த அறிவிப்பால், எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவன ஊழியர்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள் என நாம் நம்பலாம். இந்திய மார்க்கெட்டில் குறுகிய காலத்திலேயே எம்ஜி நிறுவனம் மிகப்பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது.

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருப்பது எங்களுக்கு பெருமை... நெகிழும் நெட்டிசன்கள்! ஏன் தெரியுமா?

எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் மற்றும் இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மிக பிரம்மாண்டமான வரவேற்பை வழங்கியுள்ளனர். அத்துடன் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையும் நன்றாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அத்துடன் அவ்வப்போது வெளியாகும் இத்தகைய அறிவிப்புகளும் அந்நிறுவனத்திற்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுக்கிறது.

Most Read Articles
English summary
MG Motor India Will Not Cut Jobs Due To Covid-19: Rajeev Chaba. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X