ரூ.10 லட்சத்தில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்குகிறது எம்ஜி மோட்டார்!

ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குவதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ரூ.10 லட்சத்தில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்குகிறது எம்ஜி மோட்டார்!

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் சீனாவை சேர்ந்த செயிக் வாகன உற்பத்தி குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஹெக்டர் எஸ்யூவியுடன் இந்தியாவில் கால் பதித்த எம்ஜி மோட்டார் நிறுவனம் மிகச் சிறந்த வரவேற்பை இந்தியாவில் பெற்றிருக்கிறது. குறுகிய காலத்தில் வாடிக்கையாளர்களின் விருப்பமான பிராண்டாகவும் மாறி இருக்கிறது.

ரூ.10 லட்சத்தில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்குகிறது எம்ஜி மோட்டார்!

ஹெக்டர் எஸ்யூவியை தொடர்ந்து இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வந்த அந்த நிறுவனம் அடுத்து ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடலை வரும் ஜூனில் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதைத்தொடர்ந்து, க்ளோஸ்டர் என்ற பிரம்மாண்ட எஸ்யூவி மாடலையும் இந்தியாவில் களமிறக்க உள்ளது.

ரூ.10 லட்சத்தில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்குகிறது எம்ஜி மோட்டார்!

இந்த சூழலில், கார் அண்ட் பைக் தளத்திற்கு எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் சாபா சில முக்கியத் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், ஜி10 எம்பிவி கார் வருகை குறித்து எழுப்பட்ட கேள்விக்கும் அவர் பதில் அளித்திருப்பதுடன், பல முக்கிய தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ரூ.10 லட்சத்தில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்குகிறது எம்ஜி மோட்டார்!

கடந்த பிப்ரவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ஜி10 எம்பிவி கார் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ரூ.10 லட்சத்தில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்குகிறது எம்ஜி மோட்டார்!

ஆனால், அதற்கு முன்பாக ஒரு காம்பேக்ட் எஸ்யூவி மாடலை, அதாவது ஹெக்டர் எஸ்யூவியைவிட குறைவான விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுதான் தற்போது ஆட்டோமொபைல் துறையினர் மற்றும் எம்ஜி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரூ.10 லட்சத்தில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்குகிறது எம்ஜி மோட்டார்!

அதாவது, ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்ட காம்பேக்ட் ரக எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸ் பிரச்னையால் சற்று தாமதம் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

ரூ.10 லட்சத்தில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்குகிறது எம்ஜி மோட்டார்!

இந்த புதிய மாடலானது கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு கார்களுக்கு இணையானதாக இருக்கும். தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, செயிக் குழுமத்தின் மற்றொரு பிராண்டில் விற்பனை செய்யப்படும் பவ்ஜன் ஆர்எஸ்-3 எஸ்யூவியை எம்ஜி பிராண்டில் ரீபேட்ஜ் செய்து இந்தியாவில் களமிறக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

ரூ.10 லட்சத்தில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்குகிறது எம்ஜி மோட்டார்!

பவ்ஜுன் ஆர்எஸ்-3 எஸ்யூவி மாடலானது 4,305 மிமீ நீளமும், 1,748 மிமீ அகலமும், 1,597 மிமீ உயரமும், 2,550 மிமீ வீல் பேஸ் நீளமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் அங்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.10 லட்சத்தில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்குகிறது எம்ஜி மோட்டார்!

போட்டியாளர்களைவிட அதிக இடவசதி, தொழில்நுட்ப அம்சங்களுடன் மிக சவாலான விலையில் இந்த புதிய எஸ்யூவியை எம்ஜி மோட்டார் களமிறக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா போன்ற போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக இருக்கும். அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, April 24, 2020, 7:28 [IST]
English summary
MG Motors is planning to launch new compact SUV in India by next year and it will positioned below Hector SUV.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+